KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/குரு தியானம்Sign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

குரு தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

(குருவை தியானித்து குருவின் சாந்நித்யத்தை தன்னுள் எழச்செய்தல்)

நித்யானந்தம் பரமஸுகதம் | கேவலம் ஞானமூர்த்திம் |
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருசம் | தத்வமஸ்யாதி லக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமல மசலம் | ஸர்வதீ ஸாக்ஷிபூதம் |
பாவாதீதம் த்ரிகுண ரஹிதம் | ஸத்குரும் தம் நமாமி ||

உங்கள் இதயச் சக்கரத்தின் மத்தியில் இருக்கும் உள்தளத்தை ஆசனமாக பாவனை செய்யுங்கள். கைகளில் மலரை எடுத்து, கூர்ம முத்திரையில் வைத்துக் கொண்டு, கண்களை மூடி குருவைத் தியானித்து மந்திரத்தை உச்சாடனம் செய்யத் துவங்குங்கள்.

கூர்மம் என்பது ஆமையைக் குறிக்கும் சம்ஸ்கிருத வார்த்தை. கூர்ம முத்திரை நம் உள்தளத்தை குறிப்பால் உணர்த்தும். ஒரே நொடியில் தன் ஐம்புலன்களையும் முழுமையாக உள்ளிழுத்துக்கொள்ளும் ஆமைபோன்று மனதை முழுமையாக உள்ளிழுத்துக்கொள்ளுங்கள். சட்டென்று கவனம் முழுவதையும் ஒருநிலைக்கு எடுத்துவரும் ஆற்றல்மிக்க ஆமைபோன்று கட்டுப்பாடின்றி இயங்கும் மனதை நிறுத்தி மந்திர உச்சாடனத்தைத் துவங்குங்கள்.

கூர்ம முத்திரை

விளக்கம்

நித்யானந்தம் :

ஒவ்வொரு வினாடியும் சத்தியத்தையும், பிரபஞ்ச சக்தியையும் வெளிப்படுத்துகின்ற நிலையான உண்மையான பேரானந்த நிலை.

பரமசுகதம் :

சாதாரண சுகமும், சந்தோஷமும் ஏதோ காரணத்தால் ஏற்படுவது, ஆனால் பரமசுகதம், காரணம் ஏதுமின்றி, தொடர்ந்து நிகழும் நிரந்தர சுக அனுபவம். செயல்படும் போதும் , செயலற்ற நிலையிலும் இயல்பாகவும், சுகமாகவும் இருக்கும் தன்மையை அளிக்கின்றது

கேவலம் ஞானமூர்த்திம்:

தூய அறிவு, ஞானத்தின் வெளிப்பாடு, ஞானத்தின், அறிவாற்றலின் திருவுருவம். குரு ஞான சக்தியின் முழுமையான மேன்மையான வெளிப்பாடாக இருக்கிறார்

த்வந்த்வா தீதம் :

இருநிலைத் தன்மைக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு ஏழை, பணக்காரர், சந்தோஷம், துக்கம், எதுவும் இல்லை, எல்லாவிதமான எதிர்நிலைகளுக்கும், இருநிலைத் தன்மைகளுக்கும் அப்பாற்பட்டவர். அவருடைய உட்பரப்பு எப்போதுமே ஆனந்தமயமானது.

ககனசத்ருஷம் :

எங்கும் நிறைந்து, வானத்தைப் போன்ற தூய்மை மிகுந்து, அசைகின்ற மற்றும் அசையாத பொருட்களில் நிறைந்து, அறிந்த மற்றும் அறியாதவற்றுடன், உணரக் கூடிய மற்றும் உணர முடியாதவற்றுடன் உள்ளவர்.

தத்வமஸ்யாதி லக்ஷ்யம் :

மீண்டும் மீண்டும் சத்குரு நீங்களும் அவரும் ஒன்று என்பதை உணரச் செய்கிறார். அவரே இலக்கின் வடிவம்.

நீங்கள் தான் அது ( you are that ), ஆன்மா, பிரம்மன் எனப்படும் இந்தச் சத்தியத்தை அனுபவமாக உணர்ந்து வெளிப்படுத்தச் செய்கிறார்.

அவரது இருப்பே, இதை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். நீங்களும் அது தான், அவரும் அதுவாகவே இருக்கிறார். அந்த லட்சியம், அந்த இலக்கு. அவரே அதன் உரு. அவர் தான் நீங்கள்.

மீண்டும் மீண்டும் தன் உடல் மொழியின் மூலமாக, செய்கைகளின் மூலமாக அவர் குறிப்பது: அதுவே நீங்கள் ( you are that ). நம் அனைவருக்கும்ளும் மூன்று நிலைகளில் முன்னேற்றம் இருக்கின்றது.

முதல் நிலை-புரிவது.

இரண்டாவது நிலை-உணர்வது, உச்சரீதியானது

மூன்றாவது நிலை-அனுபவம். இது ஆன்ம நிலையில் நிகழ்வது.

குருவுடன் இருப்பதற்கு, அறிவு ரீதியாகப் புரிந்து கொள்வது என்பது அடிப்படைத் தேவை. அறிவு ரீதியாகப் புரிந்து கொள்ளாதபோது பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தால், எல்லா உறவுகளும் மறைந்து விடும். நீங்கள் பயந்து போய் விடுவீர்கள்,

உங்களுடைய முழுமை, பயத்தால் சுருங்கிவிடும். பிரபல இந்துமதப் புராணமான "பகவத் கீதையில்", சிசுபாலன் தான் ஞானமடைந்து விட்டதாகப் பறைசாற்றிக் கொண்டு, பெண் சினேகிதிகளையும் வைத்துக் கொள்ளத் துவங்கி, அவர்களை "கோபியர்" என்று அழைத்தான்.

பகவத் கீதை எழுதிய வியாச முனிவரிடம் ஒருவர், "கிருஷ்ணர் எதையெல்லாம் செய்கிறாரோ, அதையேதான் சிசுபாலரும் செய்கிறார். பிறகு ஏன் அவருடைய செயல்களை ஒழுக்கக்கேடு என்றும் கிருஷ்ணருடைய செயல்களை மதுர பாவம் (இறைவனை காதலனாகக் காண்பது) என்றும், ராசலீலை (இறைவனின் நாடகம்) என்றும் கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.

வியாசர் சொன்னார், "கோபியருக்கு, கிருஷ்ணர் கடவுள் என்பது ஆழமாகத் தெரியும். அவர்களுடைய முழு உறவுமுறையுமே ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் அவருடைய சிஷ்யைகள். அவர்கள் இறைநிலையை அடைவதற்காகவும், அனுபவிப்பதற்காகவும்தான் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். ஆனால் சிசுபாலனின் விஷயம் அப்படியல்ல".

ஒரு அறிவுபூர்வமான அடிப்படை உறவுமுறையின் தன்மையையே மாற்றிவிடுகிறது. கோபியருக்குத் தாங்கள் என்ன செய்கிறோம், யாருடன் விளையாடுகிறோம் என்ற தெளிவு இருந்தது. அவர்களுக்கு அறிவுரீதியான புரிந்துகொள்ளுதல் என்னும் தெளிவான அடிப்படை இருந்தது.

அறிவு ரீதியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் இங்கு இருந்திருக்கப் போவதில்லை.

அது உணர்வாக மாறும் வினாடியே நாம் அனுபவத்திற்குள் விழுகிறோம். ஆனால் பலமுறை, எப்பொழுதெல்லாம் நாம் அறிவிற்கும் உணர்விற்கும் இடையே சிக்கித் தவிக்கிறோமோ அந்த நிலையில் நமக்கு "ஸ்மரணம்" என்பது தேவைப்படுகிறது. ஸ்மரணம் என்றால் நினைத்தல், சத்தியத்தின் நினைவு, சத்தியத்தை நம்முள் செலுத்துவது மீண்டும் மீண்டும் உச்ச நிலை. சத்தியத்தை நமக்கு தொடர்ந்து நினைவுறுத்தும்.

ஆதாயம் தேடும் எண்ணம் இருக்கும் வரை ஸ்திரமான அனுபவம் எதுவும் நிகழ்வதில்லை. இது தான் உண்மை. இதுவே நம்முள் ஆழ்ந்த உணர்வாகுமானால் அது நேரடியாகத் தெளிந்த அனுபவமாக மலர்கிறது.

"லக்ஷ்யா" என்ற வார்த்தைக்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டு. "இலக்கு" என்று பொருள். தொடர்ந்து திசையை காண்பிக்கும் நோக்கு சுட்டிக்காட்டி போல் ( needle compass ) நம் இலக்கைக் சுட்டிக்காண்பிக்கும் வழிகாட்டி.

"தத்வமசி" வேத மஹா வாக்கியம் ஆகும். "அது நீயாகவே இருக்கிறாய்" என்பதே அதன் பொருள்.

ஒரு முறை சீடன் ஒருவன் தன் குருவிடம், "குருவே எனக்கு அறிவு போதியுங்கள்" என்று கேட்கிறான். குருவும் அவனுக்கு வேதம் முழுவதையும் உபதேசிக்கிறார்.

மீண்டும் குருவே, "எனக்கு இன்னமும் எளிமையாக்கிக் கூறுங்கள்" என்கிறான். அவர் அவனுக்கு உப நிடதம் முழுவதையும் உரைக்கிறார். மீண்டும் சீடன், "இது மிகவும் கடினமாக உள்ளது. இதன் சாரத்தை மட்டும் கற்றுத்தாருங்கள்" என்கிறான். இப்போது குரு பகவத்கீதை முழுவதையும் சொல்கிறார்.

சீடனோ, "வேண்டாம்! வேண்டாம்! இது மிகவும் அதிகம். தயவு செய்து எனக்கு எளிமையான வழியைக் கூறுங்கள்" என்றான். குரு பிறகு பிரம்ம சூத்திரத்தை உரைக்கிறார்!

இதற்கு மேல் சீடனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் இம்முறை தெளிவாக "குருதேவா, எனக்கு சாரத்தை மட்டும் கொடுங்கள்" என்று தன் தேவையைத் தெளிவாக கேட்டான். குரு ஒரே ஒரு வார்த்தை மட்டும் உரைக்கிறார்; தத்வமசி (நீ அதுவாக இருக்கிறாய்). இந்த மகாவாக்கியம்தான் அனைத்து ஆன்மீக சத்தியங்களுடைய சாரம் ஆகும்

ரிஷிகளால் அளிக்கப்பட்ட மகாவாக்கியங்கள் நான்கு.(ரிஷிகள் உள்உலக விஞ்ஞானிகள்) அவை:

தத்வமசி

அஹம் பிரம்மாஸ்மி

பிரக்ஞானம் பிரம்மன்

அயம் ஆத்மன் பிரம்மன்

தத்வமசி : நீ அதுவாக இருக்கிறாய்

அஹம் பிரஹ்மாஸ்மி : "நான்" பிரம்மன். நம்முள் "நான்" என்ற உணர்வு விழிப்பு நிலையாக வசிப்பதும் பிரம்மன்தான்.

பொதுவாக நாம் எப்போதும் உடலோடும் மனதோடுமே நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். நாம் ஒவ்வொருவரும் "இந்த உடலும் மனமும் நான்" என்றே எண்ணுகிறோம்.

இந்த வாக்கியத்திலிருந்து "உடல்", "மனம்" என்ற இரண்டையும் நீக்கிவிட்டால் எஞ்சி இருப்பது "பிரம்மன்"."பிரம்மம்" என்பது உங்களுக்குள் இருக்கும் "நான்" என்ற நிலையான உணர்வு. ஞானம், ஆன்மா என்று இதை எப்படி நீங்கள் அழைத்தாலும் சரியே.

இது புரியாமல் இருப்பதால்தான் இந்த உடலும் மனமும்தான் நாம் என்று தொடர்ந்து நமக்கு நாமே கூறிக் கொள்கிறோம்."இது தான் நான், அது தான் நான்", என்று தொடர்ந்து நம்புகிறோம். "அது, இது" என்பதையெல்லாம் நீக்கி விட்டு "நான்" என்பதோடு நிறுத்தி விட்டால் அது தூய்மையான உணர்வு நிலையாகிறது. நம் இருப்பாகவே நாம் இருக்கிறோம். உணர்வு நிலைக்குள் மீண்டும் விழுகிறோம். ஞானமடைந்து விடுபடுகிறோம்.

அயம் ஆத்மன் பிரம்மன் : என் ஆன்மா எதுவோ அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் 'என் ஆத்மா' என்று பொருள். ஆத்மா என்று எதை நாம் உணர்கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான்.

பிரக்ஞானம் பிரம்ஹன்: இது உணர்வு நிலையைக் குறிக்கிறது. "நான்" என்ற உணர்வாக எது உள்ளதோ அதுவும் பிரம்மம்தான், கடவுள்தான். "பிரக்ஞை" என்றால் "நான்" என்ற உணர்வு.

குரு என்பவர் இந்த நான்கு மஹா வாக்கியங்களின் உருவகம்.

இப்படி நீங்கள் உணரும் வினாடியே, அந்த அனுபவம் உங்களில் நிகழத் துவங்கி விட்டது என்று பொருள். இதற்கு மேல் உங்களுக்கு வழிகாட்டிக் குறியீட்டுப்பலகை தேவையில்லை. அறிவுபூர்வமாகக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாத போது, உங்களுக்குக் குரு அவசியமில்லை.

நீங்கள் சியேட்டலில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு (அமெரிக்காவில் உள்ள இரு நகரங்கள்) பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சியேட்டலுக்குள் இருக்கும் போதும், எல்.ஏ.விற்குள் வந்தபின்பும் நீங்கள் வரும் பாதையில் வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் குறியீட்டுப் பலகைகளின் உதவி தேவையிருக்காது.

ஆனால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் பயணிக்கும் போது கட்டாயம் வழிகாட்டும் பலகைகள் அவசியம்.

இந்தப் பயணத்தில், இலக்கின் நுழைவாயிலுக்குள் நுழையும் சமயம் அதாவது இங்கு எல்.ஏ.புறநகர் பகுதிக்குள் நுழைவதுதான் உணர்வு ரீதியான அனுபவங்களைப் பெறும் சமயம். அப்போதும் குறியீட்டுப் பலகைகள் தேவையில்லை. 'அறிவுபூர்வமாக எல்லாம் புரிந்து விட்டது, ஆனால் இன்னமும் உணர்வுரீதியான அனுபவம் கிடைக்க வில்லை' என்பது என்னவென்றால் அது இரு நகரங்களுக்கும் இடைவெளியில் பயணம் செய்தற்கு ஒப்பாகும். அந்த இடைவெளியில் கண்டிப்பாகக் குறியீட்டுப் பலகைகள் அவசியம். 'நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள்' என்பதை சுயநினைவூட்டுகின்ற, 'லக்ஷ்யம்', இலக்கு தான் குருவின் சாந்நித்யம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். உங்களை மறக்க விடமாட்டார். அவரது இருப்பினாலேயே உங்களுக்கு நினைவூட்டுவார். நம்மிடையே ஒரு மலர் போல வாழ்வார். குருவின் சாந்நித்யம், நடுக்கடலில் சரியான திசையை உங்களுக்குத் திசைகாட்டியின் ஊசி போல இலட்சியத்தை அடைய வழி காட்டும்.

"லக்ஷ்யா" என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உண்டு. இலக்கு, அதன் திசை காட்டும் ஊசி, மூன்றாவதாக, அவரே சத்தியத்தின் உரு. அவர் நடப்பது, அமர்வது, வாழ்வது அனைத்துமே நமக்குள் மலர வேண்டிய ஞானத்தை நினைவுறுத்துகிறது.

ஏகம் நித்யம் :

தூய்மைக்கும் தூய்மையின்மைக்கும் அப்பாற்பட்டவர். குரு என்பவர், முதலும் முடிவும் இல்லாத நித்யமானவர்.

விமலம் :

தூய்மை மற்றும் தூய்மையின்மை என இரண்டிற்கும் அப்பாற்பட்டவர், எந்த விதமான தூய்மையின்மையும் அவரைத் தொட முடியாது. அவர் ஒப்பற்ற தூய்மையின் சிகரம்.

அசலம் :

ஸ்திரத்தன்மை, அசையாமை, அசைவற்ற மலை போன்றவர்.

சர்வகீ சாக்ஷி பூதம்:

நம் எல்லோருக்கும் நாம் எப்போதுமே வாழ்வோம் என்ற மாயை இருக்கின்றது.

நாம் இறக்கப் போகிறோம் என்பதை நாம் உண்மையில் நம்புவதே கிடையாது. வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நாம் மேம்போக்காகத்தான் புரிந்து கொண்டுள்ளோம். நாம் உண்மையில் மரணத்தால் உலுக்கப்பட்டிருக்கிறோமா? இல்லை. ஆனால் ரோட்டில் நாம் ஒரு மரணத்தைப் பார்த்தால் கூட என்றாவது ஒருநாள் நாமும் இது போன்றே மரணத்தைச் சந்திப்போம் என்று நினைப்பது கூட இல்லை.

மிகவும் பிரபலமான இந்து மத புராணமான மஹாபாரதத்தில் வரும் ஒரு அழகான நிகழ்ச்சி இது. ஒரு யக்ஷன் இருந்தான். அவன் மரணத்தின் அதிபதியான தர்மராஜாவிடம் கேட்கிறான், "கிமாச்சர்ய மிதம்பரம்?" அதன் பொருள் "ஓ தர்மராஜா! இந்த பூமியிலேயே மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்ன?" என்று கேட்கிறான்.

அதற்கு தர்மராஜா "அகனி அகனி பூதனி கச்சந்த்தின யம மந்திரம்

ஷே ஷ ஸ்திர நிஷ்ச்சயந்தி கிமாச்சர்ய மிதம்பரம்".

ஒவ்வொரு நாளும், எத்தனையோ பேர் இந்த பூமியை விட்டு எமனின் உலகுக்கு (மரணம்) செல்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டே இருந்தாலும், ஒவ்வொருவரும் நாம் எப்போதும் இங்கேயே இருக்கப் போகிறோம் என்றே எண்ணுகிறோம்!

பிரம்ம சூத்திரத்தில் சங்கரர், மிக அழகாக, 'நாம் ஒரு கலவை' என்கிறார், உடல் மற்றும் மனதின் மீது பிரதிபலிக்கின்ற தூய்மையான உணர்வு நிலையே நாம். இந்த பிரதிபலிப்பின் காரணமாகத்தான், நம்முடைய உடலும், மனமும் இயங்குகிறது. ஒருபுறம் உடலும், மனமும் இருக்கின்றன, மறுபுறம் தூய்மையான உணர்வு நிலை இருக்கின்றது.

தூய்மையான உணர்வு நிலைக்குள் நாம் விழும்போதெல்லாம், நித்யத் தன்மையின் ஆழ்ந்த உறுதியளிப்பை உணருகிறோம், ஆனால் இந்த நிரந்தரத் தன்மையை ஒப்பில்லாத நித்ய உணர்வைப் போலியாக உடலோடும், மனதோடும் சம்பந்தப்படுத்திவிடுகிறோம்.

தூய உணர்வு நிலைக்கும் (தூய சக்தி), உடல் மற்றும் மனதிற்கும் (தூய வஸ்து) எந்தப் பிரிவினையும் கிடையாது. 'நான் எப்போதும் இருப்பேன்.' என்று அறிவதே தூய உணர்வு நிலையின் தன்மை. உடல் மற்றும் மனதின் தன்மை என்னவென்றால் அவை அழியப்போவன என்ற உணர்வில் வாழ்தலாகும்.

நமது தூய உணர்வு நிலையின் சிறப்புத்தன்மையை, உடல் மற்றும் மனதோடு இணைத்துப் பார்க்கின்றோம். அதுதான் தவறு. இந்த உடலும் மனமும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்தால் பிறகு நாம் எப்போதும் நித்யமான, இந்த உணர்வு நிலையிலேயே இருப்போம்.

தூய்மையான உணர்வு நிலையே நித்யமானது என்பதை அறிந்தால் போதும், இயற்கையாகவே நாம் உடல் மற்றும் மனதின் பிடியில் சிக்கிக் கொள்ள மாட்டோம், ஸ்தூல வஸ்துவின் தன்மை சக்தியின் தன்மையோடு குழப்பிக் கொள்ளப்பட்டு விட்டது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் தூய உணர்வுநிலை உள்ளது. அது இறப்பதே இல்லை. அது தான் நித்ய உணர்வு நிலை, நித்ய ஆனந்தம், எல்லா நிலைகளிலும் சாட்சியாக இருக்கின்ற தூய உணர்வு நிலையே நாம். இதைத்தான் தூய உணர்வு நிலையின் வடிவமாய் விளங்குகின்ற குரு நமக்கு உணர்த்துகிறார்.

பாவாதீதம் :

நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர். நம்மால் எந்த வரையறைக்குள்ளும் குருவைப் பொருத்தி விடமுடியாது. அவர் கணிக்கப்படவே முடியாதவர். குருவைக் கணிக்கின்ற வினாடியே, அவரை இழக்கிறீர்கள்.

அவரது பிம்பத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள். அதற்கு மேல் நீங்கள் சீடரே இல்லை. குருவுடன் விவாதிப்பது என்றால் வெளியே மட்டுமல்ல, இது தொடர்பான நம்முடைய உள் உளறல்களும் இதில் அடங்கும்.

நம்முடைய உள் உளறல்கூட பிரபஞ்ச சக்தி என்னும் நிஜத்தோடு நாம் செய்யும் வாதம் தான். ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தால் நமக்கு உள்உளறல் நடைபெறாது. உள்உளறல் உள்ளுக்குள்ளும் நடைபெறுகிறது என்றாலே தெரிந்து கொள்ளுங்கள், ஏற்புத்தன்மை இல்லை என்றுதான் அர்த்தம், அது வாக்குவாதமாக இருந்தாலும் சரி, மௌனவாதமாக இருந்தாலும் சரி, எல்லாமே ஒன்று தான். அதனால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் குரு என்பவர் நம்முடைய புரிதலுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவர்.

திரி குணரஹிதம் :

ரஹிதம் என்றால் மூவகைக் குணங்களுடனும் விளையாடுவது. சத்வம் எனும் தூய அறிவு, ரஜஸ் எனும் தீவிர செயல்பாடு, தமஸ் எனும் மந்தத்தன்மை ஆகிய மூன்று குணங்களுடனும் விளையாடுபவர்.

குரு இந்த மூன்று குணங்களில் எந்தக் குணத்தையும் மணம் புரிந்து கொள்வதில்லை. அவர் மூன்று குணங்களுடனும், அவற்றைக் கடந்தும் செல்கிறார். அவற்றில் எதுவும் அவரைத் தொடுவதுமில்லை. அவற்றில் எதன் மீதும் அவருக்குப் பற்றும் இல்லை.

அவர் மூன்று குணங்களுடன் சும்மா விளையாடுகிறார். அவர் தமஸிக குணத்தில் இருக்கும் போது முழுமையான சோம்பலுடன் இருக்கிறார். ரஜசிகத்தில் இருக்கும் போது அஷ்டாவதனியாக பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கிறார்.

சத்வ நிலையில் நன்மையை வெளிப்படுத்துகிறார். ஆனால் நீங்களோ எதன் மீது பற்று ஏற்பட்டாலும், அதைப் பாதுகாக்கத் துவங்கிவிடுவதால், அனுபவிக்க மறந்துவிடுவீர்கள். ஆனால் குரு அப்படிப்பட்டவர் அல்ல.

சத்குருந்தும் :

பல குருமார்கள் இருக்கிறார்கள். நம் தாய், நம் தந்தை, நம் ஆசிரியர்கள் எனப்பலரும் இருக்கிறார்கள். ஆனால் சத்குரு ஒருவர்தான் மாயையின் இருளைப் போக்குபவர். அவரால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும்.

நமாமி :

மா என்றால் எனது. இ அமி என்றால் நான். "நான், எனது" என்ற இரண்டையும் உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்.

ஏன் 'நான்', 'எனது' எனும் கருத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்? குழந்தைகளுக்கு அவர்களுடையது எது, அதாவது "எனது" என்பதைத் தெரிந்து கொள்ளும் போதுதான் "நான்" என்ற உணர்வு வளர்கிறது.

நான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் உடைமையைப் பொறுத்துத்தான் உங்களுடைய "நான்" எனும் எண்ண அடிப்படையை வளர்த்துக் கொள்கிறீர்கள். "என்னுடையவை" எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உங்களுடைய "நான்" என்பது உங்களுள் வளர்க்கப்படுகிறது. "என்னுடையவை" பறிக்கப்படும் வினாடியே, "நான்" உலுக்கப்படுகிறது.

ஒரு குழந்தையிடமிருந்து பொம்மையைப் பறிக்க முயற்சி செய்யுங்கள், அவன் ஆடிப்போய் விடுவான். அழத்துத்துவங்கி விடுவான். காரணம், அவனைப் பொறுத்த வரை அவனுடைய ஜீவனே அது தான்.

நம்மிடம் உள்ளவற்றை அடிப்படையாக கொண்டுதான், நாம் நம்முடைய உணர்வு நிலையையே அமைத்திருக்கின்றோம். அதனால் தான் நாம் சரணாகதி செய்கின்றோம். இங்கே, இந்தப் பூஜையில் கொடுப்பது என்பதே கிடையாது. ஏன், என்றால் ஏற்றுக்கொள்பவர் என்று யாரும் இல்லை. அர்ப்பணித்தல் மட்டுமே உள்ளது.

உங்களிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். எதை எல்லாம் "நீங்கள்" என்றும் "உங்களுடையவை" என்றும் எண்ணுகிறீர்களோ, அவை அனைத்தையும் அர்ப்பணிக்கின்றீர்கள். பிறப்பிலிருந்து, உங்களுடைய சுய மதிப்பீடு, குணாதிசயம், என எவற்றையெல்லாம் என்னுடையவை என்றும் நமது உடமை என்றும் எண்ணுகிறீர்களோ, அவற்றையே அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. ஆகவே, அந்த "என்னுடையவை" என்பது பறிக்கப்படும்போது உள்ளுக்குள் ஆடிப்போய் விடுகிறீர்கள், ஜீவனே பறிக்கப்பட்டுவிட்டதைப் போல் உணருகிறீர்கள். அது என்றும் பறிக்கப்பட முடியாதது.

உங்கள் எண்ண அமைப்புதான் மாற்றப்பட வேண்டியது. அதுதான் தேவையானது. எவன் ஒருவன் 'நான்', 'எனது' என்பதை அர்ப்பணிக்கிறானோ, துறந்துவிடுகிறானோ, அவனே இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் தகுதியுள்ளவன். "ஓ சத்குருநாதா! என்னுடைய 'நான், எனது' என்பதைத் தங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன் என்பது இதன் சாரமாகும்.