நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself
மரபுவழி வழிக் குருமார்களுக்கும் குரு பரம்பரைக்கும் தலைவணங்குதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குரு பரம்பரை ஸ்தோத்ரம்
சதா ஸிவ ஸமாரம்பாம் ! ஸங்கராச்சார்ய மத்யமாம்!
அஸ்மதாச்சார்ய பரியந்தம் ! வந்தே குரு பரம்பராம்!!
விளக்கம்:
சதா ஸிவ ஸமாரம்பாம்: ஆதி குருவாய், முதல் குருவாய் சதாசிவனாய் அவதரித்த சிவபெருமானிடம் துவங்கி,
ஸங்கராச்சார்ய மத்யமாம்: குரு வம்சத்தின் மத்தியில் தோன்றிய மகா குருவான ஸ்ரீ ஆதி சங்கரர் வரை
அஸ்மதாச்சார்ய பரியந்தம்: குருவம்சத்தின் மற்ற எல்லா குருமார்களுக்கும்
வந்தே குரு பரம்பராம்: மனித குலத்திற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த குரு வம்சத்தை முழுமையாகப் பணிகின்றேன்.