KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/ஆராத்ரிகம்Sign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

ஆராத்ரிகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கற்பூர கௌரம் | கருணாவதாரம் |
ஸம்ஸார ஸாரம் | புஜகேஹேந்திர ஹாரம் |
ஸதா வஸந்தம் | ஹ்ருதயார விந்தே |
பவம் பவானி | ஸஹிதம் நமாமி |
பவம் பவானி | ஸஹிதம் நமாமி |
பவம் பவானி | ஸஹிதம் நமாமி ||

ஆராத்தி எடுக்கும் காட்சி

மேலே உள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்தபடியே குருவுக்கு ஆரத்தி (ஏற்றிய கற்பூர) காண்பிக்கவும். இடது கையால் மணி அடித்த படியே,வலது கையால் ஏற்றப்பட்ட கற்பூரத்தட்டை, குரு பாதங்களின் முன்பு சுற்றவும் ( மீதமின்றி எரிந்து போகும் தன்மை கொண்டது கற்பூரம். சுவடுகள் எதுவுமின்றி எரிந்து விடக்கூடியது. இது நம்முடைய நிறை வேறாத ஆசைகளைக் குறிக்கின்றது.

அதுபோலவே ஞானம் வேண்டி குருவின் பாதாரவிந்தத்தை சரணடையும் போது, இந்த ஆசைகளும் மீதமின்றி எரிந்து போகின்றன. கற்பூரம் எரிந்து போகப்போக, இனிமையான நறுமணம் வீசுகின்றது.மனித நிலையில் இதன் பொருள் என்னவென்றால், சமுதாய சேவையில் நம்மையே தியாகம் செய்து, அந்த செயலாலேயே அன்பு மற்றும் ஆனந்தத்தின் நறுமணத்தை எங்கும் பரப்ப வேண்டும்).

ஆராத்ரிகம்

ஆராத்ரிகம் சமர்ப்பயாமி |
சத்குரு சரண கமலேப்யோ நம: ||

உங்கள் கைகளில் ஒரு மலரை
எடுத்து மேலே உள்ள மந்திரத்தை
உச்சாடனம் செய்தபடியே அக்னியாக
எரிகின்ற கற்பூரத்தை மூன்று முறை
சுற்றி, பிறகு அதை குரு பாதங்களில்
அர்ப்பணிக்கவும்.

கற்பூர கௌரம்:கற்பூரத்தைப் போன்ற வெண்மை
கருணாவதாரம்:கருணையே வடிவான அவதாரம்
சம்சார சாரம்:சம்சார சாகரம் என்னும் பிறவிக் கடலைக் கடக்க உதவுபவர்
புஜஹேந்திர ஹாரம்:நாகத்தை ஆபரணமாகக் கொண்டவர்
சதா வசந்தம்:என்றென்றும் நிரந்தரமான ஆனந்தமயமானவர்
ஹிருதயா:இதயம்
அரவிந்தே:தாமரை
பவம்:வசிப்பவர்
பவானி:தேவி பவானி, பார்வதி
சஹிதம்:சகிதம் (அவளுடன்) வசிப்பரை
நமாமி:சரணடைந்து பணிகின்றேன்.

கற்பூரம் போன்ற வெண்மை மின்னிடும் இறைவனை, கருணையே வடிவான அவதாரமாய் விளங்குபவனை, பிறவிக்கடல் கடக்க உதவும் ஒருவனை, நாகத்தை மாலையாய் அணியும் தேவனை, என்றென்றும் நித்யானந்தமயமானவனை, என் இதய கமலத்தில் (தாமரை) வசிப்பவனை, என்றென்றும் அன்னை பவானி சகிதம் இருப்பவனை, அவன் தாள் பணிந்து சரணடைகிறேன்.