பின்னோட்டம் - 8
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ராசிபுரம், சேலம் அருகே --2005.
ராசிபுரம், சேலம் அருகே -- 2005.
ஆச்சாரியார் பேச ஆரம்பித்தார்.
"ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் இப்படி
கேட்டார்..."
''அ தெ ப்ப டி, அறையின்
ஒருமூலையில் அமர்ந்து செய்யும்
தியானமானது நம்மை நோக்கி செல்வதை
ஈர்க்கும்?"
அவரிடம் கேட்டேன். "ஐயா நீங்கள்
தொழிலில் வெற்றி பெற எது எது அவசியம்
என சொல்லுங்கள்"
"மூலதனம்"
"மூலதனம் என்றால் பணமா?"
''அ ப்ப டி யெ ன்றா ல் பணம்
இருப்பவரெல்லாம் சாதிக்க வேண்டும்.
WHAT HAPPENS TO 'A' என்ற ஆங்கில
புத்தகத்தில்.

உலகில் உள்ள கோட்டீஸ்வரர்களில்
பலர், வாழ்வின் அடித்தட்டிலிருந்து மேலே
வந்தவர்கள் என்ற ஆதாரப்பூர்வமான
உண்மைகளையும்.
''அ தெ ப்ப டி,
அறையின்
ஒருமூலையில்
அமர்ந்து செய்யும்
தியானமானது நம்மை
நோக்கி செல்வதை
ஈர்க்கும்?"
பரம்பரை பணக்காரர்களில் பலர்
வாழ்வின் பிற்பகுதிகளில் நொடிந்து போன
அதிர்ச்சி உண்மைகளையும்
ஆதாரப்பூர்வமாக சொல்கிறார்கள்.
அவரின் ஆராய்ச்சி அறிக்கைப்படி
'பணம் ஒருவரின் வெற்றியை
நிர்ணயிப்பதில்லை' என சொல்கிறார்"
"பின் எது அது?"

"அது புத்திசாலித்தனம்"
"தியானம் புத்திசாலித்தனத்தை மட்டும் எப்படி அதிகரிக்கும்"
"'ம்... சரியான கேள்வியை கேட்டீர்கள்.
தியானம் ஒருவருக்கு என்னென்ன
செய்யும் என்பது பற்றி சொல்லும்
பரமஹம்ஸர் இப்படி குறிப்பிடுவோர்...
- ஆரோக்கியமான உடல்
- உற்சாகமான மனம்
- அருமையான உறவுகள்
- தேவையான அளவு செல்வம்
- எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் யாருக்கும் இதுவரை புரியாத ஆனந்தம்.
- ஆகிய அனைத்தும் தியானம் செய்யும் ஒருவருக்கு உபவிளைவுகளாய் கிடைக்கும்."
"பரமஹம்ஸர் சொன்ன மற்ற எல்லாமே ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தியானம் எப்படி எனக்கு செல்வத்தை தேடித்தரும்.
அதை முதலில் சொல்லுங்கள்."
"ஐய்யா பெரிய அளவில் ஒருவர் சாதிக்க அவர் நிறைய உழைக்க வேண்டும். சரியா?" "ஆமாம்"
"அவர் உழைப்பதற்கும், சாதிப்பதற்கும், ஆரோக்கியமான உடலும், உற்சாகமான மனதும் இன்றியமையாத அடிப்படைத் தேவைகள்.
இவற்றை தாண்டி அந்த மனிதர் ஒரு அருமையான மனிதராக இருக்க வேண்டும்.
எப்போதும் சிரித்து, அடுத்தவர் மனம் புண்படாமல் நினைத்த காரியத்தை பக்குவமாய் நடத்தும் பக்குவம் வேண்டும்.
இந்த பக்குவத்தை, தியானம் நேரடியாய்
ஒருவருக்குள் அதிகரிக்கச்செய்யும்.
இவையெல்லாம் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின்
புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
இவையெல்லாம் பெற்ற ஒருவர்
நினைத்ததை சாதிப்பதும், தொழிலில் வெற்றி
பெறுவதும் பெரியகாரியமா என்ன?"
"ஆமாம்... பெரிய காரியமில்லைதான்"
"செல்வத்தை உங்களை நோக்கி
ஈர்க்கத்தேவையான எல்லாவற்றையும், தியானம்
உங்களுக்குள் உருவாக்குகிறது.
அதனால் தான்... தியானம் செல்வத்தை ஈர்க்கும் என பரமஹம்ஸர் குறிப்பிடுகிறார்."
"ஐய்யா, ரொம்ப நன்றிங்கைய்யா.
எப்படி ஐய்யா இவ்வளவு பெரிய
விஷயத்தை இவ்வளவு சுருக்கமா, இவ்வளவு
அழகா சொன்னீங்க, ரொம்ப பெரிய செயல் இது"
"எல்லாம் பரமஹம்ஸர் கற்றுத்தந்தவை, எங்கள் மனதைக் காலிப்பாத்திரமாக அவரிடம் தந்தோம், அது மட்டும் தான் நாங்கள் செய்தது, மீதமெல்லாம் அவர் படிப்படியாக செய்த மாற்றங்கள்" என சொன்னேன், கேள்வி கேட்டவர் நெகிழ்ந்து போனார்.
அப்புறமாய் பரமஹம்ஸரின் தியான
முறைகளை கற்றுக்கொண்டு, தியானத்தின் ஐந்து
பலன்களையும் பெற்று இன்று ஆனந்தமாய்
இருக்கிறேன்.
சொற்பொழிவின் முடிவில் அடுத்தநாள் நிகழ இருக்கும் ASP தியான முகாமிற்கு பெயர் முன்பதிவு செய்ய "நான்", "நீ" என மக்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த கூட்டத்திற்குள் ராமசாமியும், அவர்
நண்பரும் முட்டிமோதி உள்ளே செல்வதை
பார்த்த நம் ஹீலரின் இதயத்தில் நிம்மதியை
உணர்ந்தார். தன் நண்பர்களுக்கு மாபெரும்
உதவியை அன்று செய்ததாக
ஆனந்தமடைந்தார்.