பின்னோட்டம் - 7
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
லாஸ் ஏஞ்ஜலிஸ், -- 2004, ASP நடக்கும் இடைவேளை நேரத்தில்

லாஸ் ஏஞ்ஜலிஸ், -- 2004, ASP நடக்கும் இடைவேளை நேரத்தில்...
"ஏங்க! ஏங்க! சாமி வருகிறார்கள்" என அந்த பெண் உற்சாகமாக எழுந்திருக்க,
"பரமஹம்ஸரை பார்ப்பதற்கு வரமாட்டேன் என நேற்று அடம்பிடித்தவள் இவரைப்பார்த்த சில நிமிடங்களுக்குள் எப்படி இப்படி மாறிப்போனாள். எப்படி இவ்வளவு குதூகலம் தொற்றிக்கொண்டது" என யோசித்துக்கொண்டே கணவனும் எழுந்து கைகூப்பி நின்றார்.
"வாங்க வாங்க" என இருவரையும்
அழைத்துக் கொண்டே அங்கே பரமஹம்ஸர்
வந்தார்.
பரமஹம்ஸர். "உங்களை மெட்ராஸில் பார்த்தேன். அம்மா நல்லாயிருக்காங்களா?
உங்களுடைய உடல் பிரச்சனை முழுசா சரியாயிடுச்சா?"
"சாமி, மெட்ராஸில் நீங்க ஹீலிங் செய்தப்பவே பாதி சரியாயிடுச்சு.
அப்புறம், நீங்க சொல்லிக் கொடுத்த
தியானத்தை தொடர்ந்து
செய்துகொண்டேயிருக்கிறேன்.
இங்கே இருக்கிற ஹீலர்களிடம் தினமும்
ஹீலிங் எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய
எல்லா பிரச்சனையும் சரியாகிவிட்டது. ரொம்ப
நல்லாயிருக்கிறேன் சாமி.
என்னுடைய மனைவி இங்கே வர
விருப்பமாகவே இல்லை. ஆனால் உங்களைப்
பார்த்ததும் அப்படியே மாறிட்டாங்க சாமி.
இவ்வளவு உற்சாகமா இவங்களைப் பார்த்ததே இல்லை." என சொல்லும் கணவனைத் தடுத்து,
"சாமி, எனக்கும் அதே கேள்வி தான் சாமி~ இந்த இடத்தில் ஒருவிதமான நல்ல அதிர்வுகள் இருப்பதை உணர முடிகிறது.
உங்களைப் பார்க்கும் போது என் மனமே
அமைதியாகிவிட்டது. முதல் முறையாக ஒரு ஆணை
பார்க்கும் போது பாதுகாப்பை உணர்கிறேன்.
என் தாயின் நினைவுகள் உங்களின் கண்களைப் பார்த்ததும் வருகின்றன. இதெல்லாம் என்ன சாமி~
"எல்லாம் பராசக்தியோட விளையாட்டம்மா.
நீங்கள் சொல்கிற எல்லாமே தியானசக்தியின் நல்ல விளைவுகள். தொடர்ந்து தியானம் செய்தால் நீங்கள் கூட இவ்வளவு நல்லபடியாக மாறிவிடுவீர்கள்." என பரமஹம்ஸர் சொன்னார்.
அவர்கள் பேசி முடித்து வெளிவரும் போது
சாமியின் உதவியாளர், இதுவரை பரமஹம்ஸரிடம்
நிகழ்த்தப்பட்ட மூன்று அறிவியல் ஆராய்ச்சி
கட்டுரைகளையும் தந்துவிட்டு சொன்னார்,
"இந்தியாவில் சாமியை பார்ப்பதும் பேசுவதும் சுலபம்.
இரவு இரண்டு மணி ஆனால் கூட, பத்தாயிரக்கணக்கான பொது மக்களில் கடைசி மனிதர் வந்து ஆசீர்வாதம் பெறும்வரை, பரமஹம்ஸர் அமர்ந்திருப்பார்.
பிடதி ஆஸ்ரமத்தில், வரும் மக்களோடெல்லாம் பேசுவார். ஆனால், இங்கே அப்படியெல்லாம் நடப்பது சுலபமல்ல.
இந்த இடத்து விதிமுறைகள் படி, பரமஹம்ஸரிடம் பேச இந்த அளவுக்கு நேரம் கிடைத்ததே பெரியகாரியம் தான்.
மூன்று ரிசர்ச்சையும் படியுங்கள்.
பரமஹம்ஸர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற் காகவே பெருமைப்படுவீர்கள்.
இந்த மூன்று ஆராய்ச்சிகளும் இன்றைய
மருத்துவ உலகையே பரமஹம்ஸரை நோக்கி
திரும்பச்செய்திருக்கின்றன" என்றார்.