பின்னோட்டம் - 6
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அகில உலக தியானபீடங்களின் மாநாடு,தமிழ்நாடு, இந்தியா-- 2006.

காற்றில் அங்கு மிங்கும்
பறக்கும் தலைமுடியோடு,
நெற்றியில் வைக்கப்பட்ட
அழகிய குங்குமத்தோடு
தெய்வாம்சமாக
பரமஹம்ஸர்..
அகில உலக
தியானபீடங்களின் மாநாடு,தமிழ்நாடு,
இந்தியா -- 2006.
காலையில் ஆச்சாரியார்கள் கான்ப்ரன்ஸிற்கு எல்லா மகாச்சாரியார்களும், ஆச்சாரியார்களும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தங்கே குழுமியிருந்தார்கள்.
தலைப்பாகையில்லாமல், காற்றில்
அங்கு மிங்கும் பறக்கும் தலைமுடியோடு,
நெற்றியில் வைக்கப்பட்ட அழகிய
குங்குமத்தோடு, தெய்வாம்சமாக
பரமஹம்ஸர் காண்ஃபரன்ஸ் ஹாலிற்குள்
நுழைந்தார்.
பரவசம் பொங்கும் விழிகளோடு கைகூப்பி அனைவரும் எழுந்து நின்றார்கள்.
ஆச்சாரியார்களோடு பேச ஆரம்பித்த
பரமஹம்ஸர், "இதுவரை சாமியிடம் மூன்று
முறை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி அந்த
மருத்துவ ஆராய்ச்சி குழு ஆழ்ந்த மருத்துவ
பரிசோதனை ஒன்றை செய்வதற்காக
கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
குறைந்தது மூன்று மாதமாவது ஒரே
இடத்தில் சாமி இருந்தால்தான் அந்த
பரிசோதனையை செய்ய முடியும் என
சொல்கிறார்கள்.
அமெரிக்காவில் தியானபீடம் மிக
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதனால் அங்கு ஓய்வெடுக்ககூட நேரம்
கிடைப்பது அரிது.
அதுவுமில்லாமல் சாமி மூன்று
மாதங்கள் ஒரே இடத்தில் அங்கெல்லாம்
தங்குவதேயில்லை.
எனவே, அடுத்த முறை சாமி
இந்தியாவிற்கு வரும்போது, 20 பேர்
கொண்ட அவர்களின் மருத்துவ குழு,
இங்கே வந்து தங்கி அந்த மருத்துவ
சோதனைகளை செய்து கொள்வதாக
சொன்னார்கள்.

அந்த பரிசோதனையில்,
குடலிலிருந்தெல்லாம் சிறு
பகுதியை ஆய்வுக்காக வெட்டி
எடுப்பார்கள். அதனால், சரி
இப்போதைக்கு இந்தியாவில்
பரிசோதனை செய்வதுதான்
சரியாக இருக்கும் என்ற முடிவுக்கே
சாமியும் வந்துவிட்டோம்." என
சொல்லி முடித்தார்.
"'தன்னிடமிருக்கும்
ஞானத்தை, மற்றவர்களோடு
பகிர்ந்து கொள்வதற்காக, குடலை
வெட்டி ஆராயுமளவுக்குக் கூட
தன்னை அர்ப்பணிக்கத் தயாராக
இருக்கிறாரே" என ஒருவர்
குருநாதரைப் பற்றி அன்று மதிய
உணவு வேளையில் பேசிக்
கொண்டிருக்கும் போது,
இன்னொரு ஆச்சாரியார்,
"நம்ம சாமி தங்கமான சாமி, இது
போல ஒரு சாமி கிடைக்க
நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து
வைச்சவங்க.
நம் சாமி செய்யும்
ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து
பார்த்தீர்களென்றால்
ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சாமி
செய்யும் எல்லாமே நம்முடைய
நலனுக்காகவும்,
முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே
இருக்கும்" என சொன்னார்.
அப்போது நம்
நித்யானந்தம் மாத இதழின் நிருபர்
ஒருவர் சொன்னார், "சாமி
காரைக்குடியில் சொன்ன
அருமையான பதில் ஒன்று
இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
அது நேருக்கு நேர் டிவி. தொலைபேசி நிகழ்ச்சி.
காலையிலிருந்து சாமி பேச
இருப்பது பற்றிய விளம்பரங்கள்
ஓடிக்கொண்டேயிருந்தது.
சரியாக 7மணி நிகழ்ச்சி 6.58க்கு பரமஹம்ஸரோடு கேபிள் டிவி ஒளிபரப்பு நிலையத்திற்குள் நுழைந்தோம்.
பரமஹம்ஸரிடம் எந்த படபடப்பும் இல்லை.
வெகு பொறுமையாக 'நேருக்கு நேர்' பதிலளிக்கும் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தார்.
முதல் நபரின், முதல் கேள்வியே வித்யாசமாக இருந்தது.
“அப்படியென்ன வித்யாசமான கேள்வி அது?"
“முதல் நபர் இப்படி கேட்டார், நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன். எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்கிறேன். நல்லதைத்தான் நினைக்கிறேன். ஆனால், யாரும் என்னை புரிந்து கொள்வதேயில்லை. எல்லாம் கலிகாலம். இவர்கள் மாறவேமாட்டார்களா?"
"சரியாய் சொன்னீர்கள். இது கலிகாலம்.
இது கலிகாலம் என்பதால், நீங்கள் நல்லவர்களாக வாழ்வது மட்டும் போதாது. நீங்கள் நல்லவர் என்பதை நிரூபித்தாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள்.
நிரூபிக்கும் படி நடந்து கொள்ளுங்கள்.
உங்களின் பிரச்சனை சரியாகிவிடும்" என
பரமஹம்ஸர் சொன்னார்.
அவர் சொல்லுக்கு அவரே உதாரணமாய் வாழ்ந்து காட்டுகிறார்.
"அப்படியா? என்னப்பா அது?"
“ஆம் அவர் ஞானியாய் வாழ்வதோடு நில்லாமல், அவர் ஞானி என்பதை நிரூபிக்கவும் ஆரம்பித்துவிட்டாரே.
மெய்ஞானத்தை நிரூபிக்குமளவுக்கு
விஞ்ஞானம் வளரா விட்டாலும், விஞ்ஞானம்
இன்றைய மனிதனின் மொழி என்பதை உணர்ந்து,
மெய்ஞானத்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாரே... எந்த பற்றுமில்லா அந்த மகான் இதை செய்ய எவ்வளவு பொதுநல நோக்கோடு அவர் இருக்க வேண்டும்?" என நிருபர் கேட்ட கேள்வி எங்களுக்குள்ளிருந்து நன்றியுணர்வைப்பொங்கச் செய்தது."