பின்னோட்டம் - 5
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு -- 2005.
ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு--2005.
"தியான சேவை மையம்" என எழுதப்பட்டிருந்த மண்டபத்திற்குள் நிற்க இடைவெளியில்லாத அளவிற்கு மக்கள் கூட்டம்.
தியானபீடத்தின் ஆச்சாரியார் மண்டபத்திற்குள் நுழைய,
மொத்த கூட்டமும் உற்சாகமாய் வரவேற்று நின்றார்கள்.
ஹீலர்: "வா ராமசாமி. இப்பத்தான் ஆச்சாரியார் உள்ளே போகிறார். நம்ம இப்படியே வெளியே இருந்தபடியே கேட்கலாம்."
கிராமத்தார் 2: "அதென்ன தியாகு, வெளியே இருக்கும் போஸ்டரில் மெய்ஞானத்தை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கும் ஞானின்னு எழுதியிருக்கீங்க?"
கிராமத்தார் 1: "அட இந்த போஸ்டரில் இருப்பது நம்ம குமுதம் சாமி! என் பையன் கூட வாரா வாரம் விரும்பி இவர் எழுதும் கதவைத் திற...காற்று வரட்டும் தொடரை படிப்பான்.
ஏன் தியாகு... இப்ப உள்ளே போயிருப்பது இந்த சாமி தானா?"
ஹீலர்: "சாமியா!! அவர் இந்நேரம் அமெரிக்காவில் எந்த யுனிவர்சிட்டியில் பேசிக் கொண்டிருக்கிறாரோ...
சாமி வந்தால் கூட்டம் ஆயிரக்கணக்கில் கூடிடும். இப்ப வந்திருப்பது சாமியிடமே நேரடியாக பயிற்சி பெற்ற ஆச்சாரியர்களில் ஒருவர்." என சொல்லிக்கொண்டிருக்கும் போதே 'நித்யானந்தம் பரமஸுகதம்' என பாடலை பாடி ஆச்சாரியார் பேச ஆரம்பித்தார்.
ஆச்சாரியாரின் தெளிவான பேச்சால் அனைவரும் கட்டப்பட்டார்கள். அவர் பேசிய அறிவியல் கருத்துக்களால் கவரப்பட்டு ஆர்வமாய் உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.