KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/பின்னோட்டம் - 4Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

பின்னோட்டம் - 4

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பின்னோட்டம் படம்

லாஸ் ஏsingleஜலிஸ்,--2004, ASP நடக்கும் நேரத்தில்...

லாஸ் ஏஞ்சலிஸ்,--
2004, ASP நடக்கும்
நேரத்தில்...

'அடுத்து நாமங்க!' எனத்
துள்ளிக் குதித்து எழுந்த பெண்
மணி, தன்னையுமறியாமல்
தனக்குள் தொற்றிக்கொண்ட
உற்சாகத்தை நினைத்து நாக்கை
கடித்துக் கொண்டு சிரித்தார்.

அந்த தம்பதியர்
உற்சாகமாய் அறைக்கதவை திறக்க
கை வைக்கும் முன்பே
அறைக்கதவு திறந்து கொண்டது.

சிரித்த முகத்தோடு
பரமஹம்ஸர் அங்கிருந்து வெளியே
வந்தார். அந்த
தம்பதியரைப்பார்த்து, "ஐயா,
நேரமாச்சே! ASP - யில் அடுத்த
தியானம் நடத்தவேண்டிய நேரம்
வந்துவிட்டது. கொஞ்ச நேரம்
பொறுத்திருந்தால், வந்ததும்
முதலில் உங்களோடு பேசுகிறேன்"
என கனிவாய் சொல்லிச் சென்றார்.

இது போன்ற ஏமாற்றம்
நிகழும் நேரங்களில்
சலித்துக்கொண்டு அமரும் தன்
மனைவி அமைதியாய்
சோஃபாவில் அமர்வதை
ஆச்சரியமாய் பார்த்தார் அவரது
கணவர்.

"எங்கிருந்து இவளுக்கு
இவ்வளவு பொறுமை வந்தது"
என அடுத்த இரண்டு மணி
நேரத்திற்குள் பலமுறை அக்கணவர்
ஆச்சரியப்பட்டுப் போனார்.