பின்னோட்டம் - 3
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்னை, பச்சையப்பா கல்லூரி
மைதானத்தில் பரமஹம்ஸரின்
சொற்பொழிவு -- 2006.

சென்னை, பச்சையப்பா கல்லூரி
மைதானத்தில் பரமஹம்ஸரின் சொற்பொழிவு --
2006.
பரமஹம்ஸர், "ப்ரூஸ் லிப்டனின் "THE BIOLOGY OF BELIEF " எனும் ஆங்கில புத்தகம் ஒன்றை படித்தேன்.
அது மிக அருமையான புத்தகம்.
அந்த புத்தகத்தின் ஆசிரியர் மருத்துவ அறிவியலின் முதுகெலும்பையே அசைக்கும் வகையில் தகவல்களை வெளியிடுகிறார்.
மரபுப்படி பெற்றோரின் குறைபாடுகள் பிள்ளைகளை பாதிக்கும் என்ற மருத்துவ உண்மையையே அசைக்கிறார்.
பல மக்களின் வாழ்க்கைகளை பற்றி அவர் செய்த ஆழ்ந்த ஆராய்ச்சிகளின்படி ஒரு மனிதனின் நம்பிக்கைதான் அந்த மனிதனின் எலும்பைக் கூட நிர்ணயிக்கிறது என்கிறார்.
நம்பிக்கையை வளைப்பதால் எலும்பைக் கூட வளைக்கலாம்.
நம்பிக்கை அவ்வளவு சக்தி வாய்ந்தது.
உங்களின் நம்பிக்கையை சீரமைக்கும் கலையை
கற்றுக்கொண்டால் உங்களின் வாழ்க்கையை
சீரமைக்கலாம்.
நம்பிக்கை சீராகும் போது உங்களுக்குள் விழித்தெழும் சக்தியைதான் 'தியான சக்தி' எனும் வார்த்தையால் குறிப்பிடுகிறேன்.
நம்பிக்கையை சீர்செய்யும் கருத்துக்களை 'ஞான கருத்துக்கள்' என்றும், தியானசக்தியை விழித்தெழவைக்கும் நுட்பங்களை, 'தியானமுறைகள்' என்றும் குறிப்பிடுகிறேன்.
இவையனைத்தையும் ஒன்றாய் தொகுத்தளிக்கும் முகாமை தான் "ASP தியான முகாம்" என அழைக்கிறேன்." என்று பேசினார்.