பின்னோட்டம் - 2
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு -- 2005.
ராசிபுரம், சேலம் அருகே, தமிழ்நாடு
-- 2005. பச்சைப்பசேலென இருபுறமும்
வளர்ந்திருந்த வயல்வெளி நடுவே இருவர்
பேசிக்கொண்டே சென்றார்கள்.
கிராமத்தார் 1: " ஏலே! அமெரிக்கா ஏன் முன்னேறியிருக்குன்னு தெரியுமா?"
கிராமத்தார் 2: "தெரியாதுலே. நீ தான் நம்ம வட்டத்திலேயே ரொம்ப படிச்சவன். ஐஞ்சாம் கிளாஸ் யார் தாண்டியிருக்காங்க. நீயே அதைச் சொல்லு"
கிராமத்தார் 1: "நேற்று ஒரு இங்கிலீஷ் படம் பார்த்தேன். அது அமெரிக்காவில் எடுத்ததாம். அதில் பிச்சைக்காரன் கூட இங்கிலீஷில் தான் பேசுகிறான். ஆனால் இங்கே யாராவது அப்படி பேசுகிறோமா..." என கேட்கவும்,
தியானபீட ஹீலர் ஒருவர் அங்கே வரவும் சரியாக இருந்தது.
கிராமத்தார் 2: "ஆமாம் ஆமாம். இங்கே யாருமே அந்த மாதிரி பேசுவதே இல்லையே... "
ஹீலர் : "அடே என்னப்பா இது. ஆங்கிலம் அவர்களது தாய்மொழி. தமிழ் நம் தாய்மொழி.
நமக்கு ஆங்கிலம் பேச முடியாதது போல்,
அவர்களால் தமிழ்பேச முடியாது. ஆங்கிலம்
பேசுவது பெரிய காரியமல்ல. நீங்கள் சொல்வது
போல் இந்தியா முன்னேறாத நாடு இல்லை.
நமது ஜனத்தொகைக்கும், இத்தனை இன மொழி
பிரிவுக்கும்
நம் வளர்ச்சி அசுர வளர்ச்சி தான்.
இவ்வளவு குழப்பங்களுக்கும்
நடுவே இந்தியா வல்லரசாக மாறி
கொண்டிருப்பது. ஒவ்வொரு இந்தியனின்
இரத்தத்திலும் கலந்திருக்கும் ஆன்மீக
ஞானத்தால் தான்.
அமெரிக்காவில் இருக்கும்
மருத்துவர்களில்
பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்.
உலகின் முதல் பணக்காரரான
பில்கேட்ஸ்-ன் மைக்ரோ சாப்ட்
கம்பெனியில் உயர் பணிகளில்
இருப்பவர்கள் இந்தியர்கள்.
இந்தியர்கள் பொறுப்பானவர்கள்,
பாசம் மிகுந்தவர்கள் என்பது பல மேலை
நாட்டுமக்களிடையே உள்ள பரவலான
கருத்து.
வளர்ந்த நாடுகள் பலவற்றில்
மூன்றில் ஒருவர் மனநோயாளியாக
இருக்கிறார்கள். 2003-ல் அமெரிக்காவில்
மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேலான
மனநோய்க்கான மருத்துவச் சீட்டுகள்
வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
இப்போது சொல்லுங்கள்... நாம் வாழும் நாடு எப்படிப்பட்டது?"
கிராமத்தார் 1 : "ஏலே நம்ம தியாகு ரொம்ப மாறிட்டானில்லே..."
கிராமத்தார் 2: "நீயும் நானும் ஒரே
அளவுதான் படிச்சிருக்கோம்.
திடீரென உனக்கு மட்டும் இவ்வளவு சேதி
எப்படி தெரிந்தது. "
ஹீலர் : "ராமசாமி, இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இன்று சாயங்காலம் தியானபீடத்திலிருந்து ஆச்சாரியர் வருகிறார். சாயங்காலம் சரியா ஆறு மணிக்கு ராசிபுரத்தில் புதிதாய் திறக்கப்பட்டிருக்கிற தியானபீட மையத்திற்கு வாங்க. எல்லாம் புரியும்"