நிரூபணம் - 6
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸர் உடற்கூற்றின் உள்ளே
இருந்து மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு
எட்டாத சக்தி (Energy ) வெளிப்படுகிறது.
- நிரூபணம் 6
ஒரு மனிதன் உணவு எடுத்துக் கொண்ட
பின், அந்த உணவு தன்மயமாகி, எவ்வளவு
சக்தியை வெளிப்படுத்தும், என்பதை, இன்றைய
நவீன மருத்துவத்தால் துல்லியமாக கணக்கிட
முடியும்.
'இந்த அளவு கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொண்டால் இவ்வளவு சக்திதான் வெளிப்படும்' என்ற தனிக் கணக்கீடு இருக்கின்றது.
பரமஹம்ஸர் உணவு எடுத்துக் கொண்டபின் வைத்த மருத்துவர்கள், உட்கொண்ட உணவிற்கும், உடலிலிருந்து வெளிப்படும் சக்திக்கும் உள்ள அளவைக் கணக்கிட்டனர். மருத்துவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர்.
மருத்துவக் குழுத் தலைவர், "சுவாமிஜி, நீங்கள் உட்கொண்ட உணவிற்கும், உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் சக்திக்கும் துளியும் சம்பந்தமே இல்லை.
ஆனால் நீங்கள் உட்கொண்ட உணவை விட
10 மடங்கு சக்தி உங்கள் உடலிருந்து
வெளிப்படுகிறது.
எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகின்றது சுவாமிஜி" என்று கேட்டார்.
பரமஹம்ஸர், "நம் உடலுக்குள் மனோ சக்தி, ஆத்ம சக்தி என்ற இரண்டு வகைப்பட்ட சக்திகள் இருக்கின்றது.

மனோசக்தி வரையறைக்குட்பட்டது.
ஆனால் ஆத்மசக்தி
எல்லா வரையறைக்கும்
அப்பாற்பட்டது.
மனதின் புரிந்து
கொள்ளும் தன்மைக்கு
அப்பாற்பட்டது.
ஆத்மசக்தியை
எவ்வாறு பயன்படுத்துவது
என்ற கலை தெரிந்து
விட்டால் போதும்,
நாம் நினைத்துக்
கொண்டிருப்பது போல
வெறும் உணவின் வழியாக
உடலின் சக்தி தேவையை
பூர்த்தி செய்து கொள்ளும்
அவசியம் ஏற்படாது.
உள்ளுக்குள்
இருக்கும் சக்தியை நம்மால்
பயன்படுத்திக் கொள்ள
முடியும்.
வெளியிலிருக்கும்
பஞ்சபூதத்தில் இருந்தும்
சக்தியை நம்மால்
பயன்படுத்திக் கொள்ள
முடியும்.
இதற்கு மேற்பட்டவை எல்லாம் சூட்சுமமானது.
வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாதது.
அனுபவ பூர்வமாக மாத்திரமே புரிந்து கொள்ள முடியும்.
உங்கள் கேள்விக்கு, பதில் அனைத்தும் அனுபவப்பூர்வமாக மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடியது. மெய்ஞானத்திற்காக சிறிது நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமென்றால், அந்த பதிலை தியானம் மூலம் உணர்த்த என்னால் உதவ முடியும்” என்று சொன்னார்.