KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/நிரூபணம் - 5Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

நிரூபணம் - 5

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda Paramashivam

பரமஹம்ஸரின் ஆற்றலை
முழுமையாக கணக்கிட முடியவில்லை.
எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை
அடிப்படையாக வைத்துச் சொல்ல
வேண்டுமானால்- சாதாரண மனிதனை விட
குறைந்தது 6 மடங்கு அதிக ஆற்றலையும்
புத்திக் கூர்மையையும் பரமஹம்ஸர்
பெற்றிருக்கின்றார்.

  • நிரூபணம் 5

மனிதனின் அறிவு, புத்திசாலித்தனம், முடிவு எடுக்கும் தெளிவு (Clarity in decision making), புத்திக்கூர்மை ஆகியவற்றை நிர்ணயிக்கும் அல்லது செயல்படுத்தும் பகுதி மூளையில் இருக்கும் ஃப்ராண்டல் கதுப்பின் (Frontal Lobe) முன் பகுதியாகும்.

பரமஹம்ஸரின் (Frontal) ஃப்ராண்டல் கதுப்புப் பகுதியை PET Scan - ல் பார்த்த போது அது, அசாத்தியப் பொலிவோடு சமிக்கைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர், "சுவாமிஜி, உங்களோடு யாரும் இருக்கவே முடியாது.

உங்களை யாரும் புரிந்து கொள்ளவே முடியாது!
ஆனால் எப்படி உங்களுக்கு இவ்வளவு பெரிய
கூட்டம் இருக்கிறது?" என்று கேட்டார்.

பரமஹம்ஸர், "என்னோடு யாரும் இருக்கவே முடியாது என்று எப்படிக் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

Aadheenam Building

மருத்துவர், "சுவாமிஜி, சாதாரண மனிதனை விட அரை மடங்கு புத்திசாலித்தனமும், புத்திக் கூர்மையும் கொண்டவர்கள் விஞ்ஞானிகள்.

இப்படியிருக்கும் ஒரு விஞ்ஞானியை புரிந்து கொள்ள சாதாரண மனிதனால் முடியாது.

அவர்களுடைய வேகத்திற்கும், சிந்திக்கும்
திறனுக்கும் சாதாரண மனிதனால் ஈடுகொடுக்க
முடியாது.

மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும் விஷயத்தில் இருக்கும் சாதாரண சின்னச் சின்ன தவறுகள் கூட விஞ்ஞானிகளின் பார்வைக்கு பெரிதாக தெரியும்.

அவர்களுடைய போக்கை சாதாரண மனிதனால் யூகித்துச் செயல்படுவது கடினம்.

மேலும் சாதாரண மனிதனால் ஒரு விஞ்ஞானியுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதென்பது கடினம்."

"வெறும் அரை மடங்கு அதிகமானதற்கே சாதாரண மனிதனால் ஈடு கொடுப்பது என்பது கடினமான காரியமாக இருக்கிறது. 6 மடங்கு அதிகம் பெற்றிருக்கும் உங்களுடன் எப்படி...?

அதைவிடவும் எப்படி இவ்வளவு எளிமையாக நீங்கள் இருக்கிறீர்கள்?

கள்ளம் கபடமில்லாமல், ஒன்றும் தெரியாத குழந்தைபோல, சதா சிரித்துக் கொண்டே நீங்கள் இருக்கிறீர்கள்?

உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் கூட்டமாக, சந்தோஷமாக இருக்கிறார்களே?

இதையெல்லாம் விடவும், இவ்வளவு ஆற்றலையும் வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றல், தியானம் கற்றுத் தருதல் என மிக இயல்பான ஒரு சுமுகமான சமூக வாழ்க்கையை உங்களால் எப்படி நடத்த முடிகிறது?" என்று தன் குழப்பம் அனைத்தையும் கேள்வியாக்கி கொட்டித் தீர்த்து விட்டார்.

பரமஹம்ஸர், "இப்படிப்பட்ட ஒரு
நிலையைத்தான் 'ஞானம்' என்று ரிஷிகள்
சொல்கிறார்கள்.

அதை நான் 'நித்யானந்த நிலை' என்று அழைக்கிறேன்.

சுவாமி நித்யானந்தர்

* எப்படி இவ்வளவு எளிமையாக
நீங்கள் இருக்கிறீர்கள்?
* தியானம் கற்றுத் தருதல் என
மிக இயல்பான ஒரு சுமுகமான
சமூக வாழ்க்கையை உங்களால்
எப்படி நடத்த முடிகிறது?

நித்யானந்தம் ஒருவனுக்குள்
மலர்ந்துவிட்டால்- உங்களுடைய அனைத்து
கேள்விக்கும் பதில் புரிந்து விடும்.

உங்களுக்குள் இருக்கும் நித்ய ஆனந்தத்தை மலர வைக்க முயற்சி செய்யுங்கள்.

பதில் கிடைத்துவிடும்.

வார்த்தைகளால் விளக்க முடியாது. விளக்க முயற்சித்தாலும் நித்யானந்தத்தை பெறாத வரை உங்களால் அதை புரிந்து கொள்ள முடியாது" என்று பதிலளித்தார்.