KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/நிரூபணம் - 4Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

நிரூபணம் - 4

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Swami Nithyananda

எண்ணங்களும், உணர்ச்சிகளும்
பரமஹம்ஸரின் முழுக் கட்டுபாட்டில் தான்
உள்ளன.

- நிரூபணம் 4

QEEG - ல் (Quantitative electroencephalogram) பரமஹம்ஸரின் எண்ண அலைகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள்,

“சுவாமிஜி மருத்துவ வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை” என்று சொன்னார்கள்.

மூளை, மனம் சம்பந்தப்பட்ட அலைகளை நான்கு வகைப்படுத்தலாம்.

ஒவ்வொரு அலையும் அதன், அதன் வேகத்தைப் பொருத்து, மனதின் நிலையைப் பொருத்து வேறுபடும்.

Alpha அலைகள் (Alpha Brain Waves)

மனிதன் விழிப்பு நிலையில் இருக்கும்போதும், மனம் முழு செயல்பாட்டில் இருக்கும் போதும் இந்த ஆல்ஃபா (Alpha) அலைகள் தோன்றும்.

Beta - அலைகள் (Beta Brain waves)

இந்த அலைகள் மனிதனின் சுக உணர்வு,
நல்உணர்வு (Feeling of well being)
சம்பந்தப்பட்டது.

தீட்டா அலைகள் (Theta Brain Waves ) மற்றும் Gama -அலைகள் (Gamma Brain Waves)

மனிதனின் விழிப்பு நிலைக்கும்,
தூக்கத்திற்கு இடைப்பட்ட நிலையில் இந்த
அலைகள் வெளிப்படும். எண்ணங்களின் தீவிரம்
குறைந்து மனம் அமைதி நிலையில் இருப்பதை
இந்த அலைகள் உறுதி செய்கின்றன.

நான்கு அலைகளையும் ஒவ்வொருத்தரின் விழிப்பு நிலையைப் பொருத்து அலைகளாக வெளிப்படும். QEEG - மூலம் அதை நான்கு அலைகளாக வர்ணக்கோடுகளாக படம் பிடித்துக் காண்பிக்க முடியும்.

சராசரி மனிதனின் எண்ணங்களும்,
உணர்ச்சிகளும் அவன் சுய கட்டுப்பாட்டில்
இருப்பதில்லை.

அதனால் Q-EEG- ல் வர்ணக்
கோடுகளாக வரும் அலைகள் தாறுமாறாக
இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அலைக்கு ஏற்றவாறு வர்ணம் தீட்டுத் திட்டாக Q-EEG -ல் வெளிப்படும்.

எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட
எண்ணப்பிடியில், அல்லது உணர்ச்சியின்
படியில் ஒரு மனிதன் இருக்கிறானோ அந்த கால
அளவுக்கு, அந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட
வர்ணக் கோடுகள் பட்டையானது அகன்று,
திட்டுத்திட்டாகத் தெரியும்.

பரமஹம்ஸரின் Q-EEG -ல் வர்ணக் கோடு வெளிப்பாடு வியக்கத்தக்கதாக இருந்தது.

பரமஹம்ஸர், பரிசோதனைக்கு முன் மருத்துவக் குழுவிடம், "ஒவ்வொரு உணர்ச்சியும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது, உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் நான் இல்லை' என்று சொன்னார்.

எனவே மருத்துவக் குழுவினர் அவர்கள்
இந்தக் கருத்தையும் பரிசோதித்துப் பார்க்க
விரும்பினர். பரமஹம்சரிடம், "சுவாமிஜி,
உங்கள் எண்ணப் போக்கையும், உணர்ச்சிப்
போக்கையும் படிப் படியாக பரிசோதனையின்
போது மாற்றுங்கள்" எனக் கேட்டுக்
கொண்டார்கள்.

AlPha, Beeta, Theta, Gama என்ற
அலைகள் - பரமஹம்ஸர் ஆழ்நிலை
தியானத்திற்குள் செல்லச் செல்ல ஏதோ
கியர் மாற்றுவது போல மாறிக் கொண்டே
இருந்தது.

Dr. முரளி கிருஷ்ணா, முதல் கட்ட
அறிக்கையில் "எப்படி ஒரு கைதேர்ந்த
Piano கலைஞன், அவன் விருப்பம் போல்
ராகத்தை மாற்றுகிறானோ அது போல்,
பரமஹம்சர் தன்னுடைய Alpha, Beeta,
Gama, Theta அலைகள் மீது முழு
சுயக்கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்"
என்று சொன்னார்.

ஆழ்நிலை தியானத்தின் போது
Alpha, Beeta, Gama, Theta அலைகளில்
எவையெவை எப்போது வெளிப்படுகின்றன
என்பதை நிர்ணயம் செய்யும் 'மூளைத்
திரவங்கள்' பரமஹம்ஸரின்
சங்கல்பத்தின் படி வெகு சுலபமாக மாறிக்
கொண்டே வந்தது.

‘ நுணுக்கமாகக் கூற
வேண்டுமானால் மொத்தம் 5 வகையான
அலைகள் இருக்கின்றது. Q-EEG Report-
ல் சராசரி மனிதனுக்கு திட்டுத் திட்டாக
இருக்கும்.

ஆனால் - பரமஹம்ஸரின்
விஷயத்தில் ஒரு வானவில்லைப் போல
ஒவ்வொரு வர்ணமும் தெளிவாக
தெரிந்தது" என்று Dr. முரளி கிருஷ்ணா
வியந்து சொல்லியிருக்கிறார்.

"எல்லா அலைகளையும் எந்த ஒரு
இயல்பான மனிதனாலும் இது வரை தன்
சுயக்கட்டுப்பாட்டில் கொண்டுவர
முடியவில்லை. உங்களால் மட்டும், தான்
இது சாத்தியமாகிறது.! எப்படி சுவாமிஜி?"
என்று ஆச்சரிய விழிகளோடு மருத்துவக்
குழுவினர் பரமஹம்ஸரை கேட்டனர்..

பரமஹம்ஸர் ... மெல்லிய...
புன்னகையோடு "Divine grace
(எல்லாம் கடவுள் அருள்)..." என்று
சொன்னார்.