நிரூபணம் - 3
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸர் சொன்னபடி அவருக்குள்
பேரானந்த நிலை இருந்துகொண்டே
இருக்கின்றது.
- நிரூபணம் - 3
மனித சந்தோஷத்தின் அளவை, மனிதனுள்
இருந்து வெளிப்படும் டோப்பமைன் (Dopamine)
என்ற வேதிப் பொருளின் அளவைக் கொண்டு
சொல்லிவிட முடியும்.
ரசகுல்லா சாப்பிட்டால், பதவி உயர்வு கிடைத்தால், எதிர்பாராத சந்தோஷத்தினால், அதிர்ஷ்டம்அடித்தால், தாம்பத்யத்தின் போது என ஒவ்வொரு சந்தோஷ நிகழ்வுக்கும் இத்தனை அலகு (Units) டோப்பமைன் தான் வெளிப்படும் என்று இன்றைய நவீன மருத்துவம் கணித்துச் சொல்லுகிறது.
ஆனால் பரமஹம்ஸரை ஆராய்ச்சி செய்த பின், அந்தக் கணிப்பும் கண் இமைக்கும் நேரத்தில் பட்டென்று உடைந்துவிட்டது.
மிகவும் குறைவாக அதுவும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே, அவ்வப்போது மனிதர்களுக்குள் வெளிப்படுத்தப்படும் டோப்பமைன் பரமஹம்ஸரின் உடற்கூறினுள் அளக்க முடியாத அளவில் (இரத்த ஓட்டத்தினுள் வெள்ளம் போல) வெளிப்படுவதை பார்த்தார்கள்.
மருத்துவர்களுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி மட்டும் ஒட்டு மொத்த குழுவின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

மருத்துவக் குழுத் தலைவர், "காரண
காரியத்தால் மிகச் சிறிய அளவில்
மட்டுமே வெளிப்படும் டோப்பமைன்
உங்களுக்கு எந்தக் விசேஷ
காரணமே இல்லாமல் இயல்பாக
தொடர்ந்து அசைக்க முடியாத
அளவில் பெருகி வருகின்றதே!
இது எப்படி சாத்தியம்?" என்று
கேட்டார்.
பரமஹம்ஸர், "இதைதான்
நித்ய ஆனந்தம், பேரானந்தம்
என்று சொல்லுகிறேன்." என்றார்.

'நம் மருத்துவ உலகம்
இதுதான் உண்மை
என்று வரையறுத்துச்
சொன்ன விஷயங்கள்
யாவும் சத்தியத்தின்
முன் மிகச்
சாதாரணமானதே!
மெய்ஞானத்தை
புரிந்து கொள்வதற்கு
விஞ்ஞானம் இன்னும்
வளரவில்லையோ?'
என்ற ஐயம் மருத்துவக்
குழுவுக்கு ஏற்பட்டது.