நிருபணம் - 2
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லையற்ற உணர்வு நிலையை பரமஹம்ஸர்
உணர்வது சோதனை மூலம் நிருபணமாகி
இருக்கின்றது.
- நிருபணம் 2
பரமஹம்ஸரின் முதல் ஆன்மீகச் சுற்றுப் பயணமாய் அமெரிக்கா சென்றபோது நிகழ்ந்தது. ஒரு சொற்பொழிவில் பரமஹம்ஸர் தன்னுடைய முதல் ஆனந்த அனுபவத்தை ( சத்தோரி ) விளக்கிக் கொண்டிருந்தார்.
"12 வயது இருக்கும்...
பவளக்குன்றில் சந்தியாவேளையில் ( பகலும், இரவும் சந்திக்கும் நேரம் )
தியானம் என்றால் என்ன?! என்று முழுமையாக புரியாத நிலையில், இயல்பாக உடல், மனம் தளர்வு (Mind Body Relaxation) நிலைக்கு சென்றுக் கொண்டிருந்தேன்.
எதிர்பாராத தருணத்தில் அது... நிகழ்ந்தது
நான் ஒரு மனிதன் என்ற உணர்வு மாறி, தான் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது.
என் உடல் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்ற எல்லை உணர்வு மறந்துவிட்டது.
என்னைச் சுற்றி இருந்த எட்டு திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாக பார்க்கவும் உணரவும் முடிந்தது.
எனக்கு முன் இருந்த மலையும், பின்னால் இருந்த கோவிலும், எனது இரண்டு பக்கங்களில் இருந்த பாறைகளும், மரங்களும், நான் உட்கார்ந்திருந்த பாறை, மேலே இருந்த வானம் என்ற எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்த்தேன். என்னுடைய அனுபவத்தை இதற்கு மேல் வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.
நான் ஒரு தனி மனிதன் என்ற உணர்வு
மறைந்து, நானே எல்லாவாகவும், நான் என்ற
எண்ணம் மறைந்து, தான் என்ற உணர்வு
தோன்றியது.
அந்த நேரத்தில் ஆனந்த வெள்ளத்தில்
நான் மூழ்கிப் போனேன்” - என்று பரமஹம்ஸர்
தன் அனுபவத்தை தன்னால் இயன்ற வரை
வார்த்தைகளால் விளக்கினார்.
ஆனால் அந்த சொற்பொழிவில்
அமர்ந்திருந்த ஒருவர் கூட, பரமஹம்ஸர்
சொன்ன உண்மையை நம்புவது போன்று எந்த
ஒரு முகபாவனையையும் காட்டவில்லை.
ஒரு மருத்துவர் (Dr. Murali Krishna
M.D.,) எழுந்து, "நீங்கள் சொல்வதை என்னால்
புரிந்து கொள்ள முடிகிறது !" என்றார்.
"பரமஹம்ஸர், "இத்துணை பேரும்
மவுனமாக இருக்க, உங்கள் ஒருவரால் மட்டும்
எப்படி புரிந்து கொள்ள முடிந்தது? !!!"
Dr. முரளி கிருஷ்ணா. " சுவாமி, நான்
மனம் பற்றிய மிகப் பெரிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்லும் அனுபவம்
சாத்தியமே! என்பதை என்னுடைய ஆராய்ச்சி
அனுபவத்தால் புரிந்து கொள்ள முடிகிறது."
என்றார்.
பரமஹம்ஸர், "எப்படி?"
Dr. முரளி கிருஷ்ணா, "நாம்
ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பார்க்கும்
எல்லா விஷயங்களையும் கிரகித்து,
Software-ல் Programme செய்வது
போல நம் மனதில் அனைத்தையும் ஒரு
வரையறைக்கு உட்படுத்தி வைத்துக்
கொள்கிறோம்.
அது ஞாபகக் களஞ்சியமாக பதிந்து விடுகிறது. அதனால் தான் 'இந்தப் பொருள் இங்கே இருக்கிறது', 'வீடு அங்கே இருக்கிறது' என்று குழப்பமில்லாமல் தெளிவோடு நடந்து கொள்ள முடிகிறது.
மனச்சிதைவு ஏற்படும் போதும்,
கோமாவில் விழும் போதும்
ஞாபகக்களஞ்சியம் உடைந்து, அழிந்து
விடுகிறது.
கோமா நிலையில் இருக்கும் ஒரு
மனிதனுக்கு 'தான் ஒரு மனிதன்' என்ற
உணர்வு இருப்பதில்லை. தான் படுத்திருப்பது
ஒரு படுக்கை மீது, மேலும் தான் இருப்பது
ஒரு அறையினுள் என்ற இது போன்ற எந்த
ஒரு உணர்வும் இருப்பதில்லை.
எண்ணமும் தோன்றுவதில்லை.
மனம் ஸ்தம்பித்து நின்றுவிடும்.
மேலும், மனம் செயல்படாமல் போகும்
போது, மனிதனின் வரையறை உணர்வு
மறைந்துவிடும் என்பது வரை எனக்கும்
தெரியும்.
ஆனந்த அனுபவத்தைப் பற்றி
விளக்கும்முன் மனமில்லா நிலையைப்பற்றிச்
சொன்னீர்கள் (No mind state) அதனால்
என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
மனம் செயலற்று போகும்
போது - நான் ஒரு தனி மனிதன் என்ற
உணர்வோ; தன்னைச் சுற்றி பொருட்கள்,
உயிர்கள் இருப்பது பற்றிய உணர்வோ
வருவதில்லை என்பது வரை என்னுடைய
மருத்துவ அறிவின் உதவியால் புரிந்து
கொள்ள முடிகிறது.
அதன் பின் "நீங்கள் எல்லாமாக உணர்ந்ததைத் தான் ... பு..ரி..ந்..து.. கொள்ள முடியவில்லை" என்று இழுத்தார்...
"ஹா..ஹா..ஹா.." - என பரமஹம்ஸர் சிரித்தார்.
பரமஹம்ஸர், "உங்களுக்கு புரிந்த வரை தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
உங்களால் புரிந்து கொள்ள முடியாத
விஷயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க
மெய்ஞானம் சம்பந்தப்பட்டது.
விஞ்ஞானத்திற்காக உங்கள் நேரத்தை
செலவழித்து, அர்ப்பணிப்போடு கற்றுக்
கொண்டிருக்கிறீர்கள்.
அதனால் தான் இவ்வளவு பெரிய
கூட்டத்தில் உங்களால் மட்டும் என் ஆனந்த
அனுபவத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
இதேப் போல் தான் சில விரல்விட்டு
எண்ணக் கூடிய மனிதர்கள் மட்டும்
மெய்ஞானத்தை வாழ்க்கையாகக்
கொண்டுள்ளார்கள்.
தங்களை முழுமையாக அர்ப்பணித்து,
அனுபவபூர்வமாக, அனுபவரீதியாக கண்டுபிடித்த
உண்மைகள்தான் வேதங்கள், உபநிடதங்கள்.
அவர்கள்தான் ரிஷிகள், ஞானிகள்.
அவ்வாறு அர்ப்பணித்து தன்னுள்
பேரானந்தத்தின் வழியை கண்டு பிடித்த
ஞானிகள், அனைவரும் அதே பேரானந்த
நிலையை அடைய வேண்டும் என்பதற்காக
அவர்கள் கொடுத்த ஒரு மிகச் சிறந்த முறை
தியானம்.
மெய்ஞானத்திற்காக வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணிக்கா விட்டாலும், தியானத்திற்காகவாவது அர்ப்பணம் செய்யுங்கள்.
தியானத்திற்காக அர்ப்பணம் செய்ய
முடியாவிட்டாலும், அரை மணி நேரம் தியானம்
செய்யும்போதாவது முழு அர்ப்பணிப்போடு
ஈடுபடுங்கள்.
அந்த அரை மணி நேரத்தைக் கூட
அர்ப்பணம் செய்ய முடியவில்லை என்றால்,
இப்போது இங்கே இருக்கப்போகும் அடுத்த அரை
மணி நேரமாவது அர்ப்பணம் செய்யுங்கள்.
நன்றாக கவனியுங்கள்.
(ஹா...ஹா...ஹா...அரங்கில் மெல்லிய சிரிப்பொலி!)

அர்ப்பணிப்பு, ஈடுபாடு, சிரத்தை இம்மூன்றும் இல்லாத எந்த ஒரு செயலும், எந்த பலனையும் கொடுக்காது.
செய்யும் செயல் எதுவாக இருந்தாலும்
அதில் உங்களை முழுமையாக அர்பணித்து,
சிரத்தையோடு ஈடுபடுங்கள்.
நான் அடைந்த அனுபவத்தை நீங்களும் அடைவீர்கள்.
இது சத்தியம், உறுதி' என்று சொன்னார்.
கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது.
அன்றிலிருந்து Dr. முரளி கிருஷ்ணா, பரமஹம்ஸரின் பக்தராகிவிட்டார்.
பரமஹம்ஸரின் மருத்துவ ஆராய்ச்சி
முடிவின் முதல் கட்ட அறிவிப்பு
வெளியிடப்படுவதற்கு மிகவும் உதவியாக
இருந்தவர்களில் Dr. முரளிகிருஷ்ணாவும்
ஒருவராவர்.
பரமஹம்ஸர் தன்னை பரிசோதித்துக்
கொண்டிருந்த மருத்துவப் பரிசோதனைக்
குழுவிடம், தன்னுடைய முதல் ஆனந்த
அனுபவத்தை விளக்கினார்...
பின் அவர்கள் பரிசோதனை செய்வதற்கு தயாரானார்கள்.
PET Scan பரிசோதனை பற்றி.
Dr. முரளி கிருஷ்ணா சொன்னது, "வரையறை பற்றிய (நம் உடலின் எல்லை பற்றி) ஞாபகக் களஞ்சியம் பரைட்டல் கதுப்பு (Parietal lobe) என்ற மூளைப் பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
PET Scan -ல் பரைட்டல் கதுப்பு இருக்கும் இடத்தில் பளிச்சிடும் சமிக்ஞைகள் வந்தால் சுய உணர்வு நன்றாக இருக்கின்றது என்று பொருள்.
இடம், எல்லை பற்றிய உணர்வு
(spatial orientation) அருமையாக
செயல்படுகிறது என்று அர்த்தம்".
பரமஹம்ஸர் கொஞ்சம் கொஞ்சமாக
ஆழ்நிலை தியானத்திற்குள் சென்றால்,
அவ்வாறு செல்லச் செல்ல பரைட்டல் கதுப்பில்
இருந்து வரும் சமிக்ஞைகள் கொஞ்சம்
கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. பின்
கடைசியில் முழுவதுமாகவே குறைந்து
விட்டது.
மருத்துவக் குழுவுக்கு ஆச்சரியம் தாளவில்லை!
காரணம், எவ்வளவு நிதானத்தோடு
இருந்தாலும், எந்த ஒரு மனிதனுக்கு Spatial
Orientation பகுதி - PET SCAN -ல்
முழுமையாக குறைய வாய்ப்பே இல்லை.
PET Scan -ல் அந்த பகுதியின்
சமிக்ஞைகள் குறைந்துவிட்டால் அந்த மனிதன்
நிதானத்தோடும், நினைவோடும் இருப்பதற்கு
வாய்ப்பே இல்லை என்று அர்த்தம்.
பரமஹம்ஸரின் நிதானம்
மருத்துவக் குழுவின் நிதானத்தை
வேரோடு அசைத்தது.
பரமஹம்ஸரின் 'எல்லையற்ற உணர்வு'
சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக
நிரூபணமானது.