KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/நிரூபணம் - 1Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

நிரூபணம் - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Swami

பரமஹம்ஸர் சொன்னபடி அவர் மனம் தாண்டிய மனமில்லா பெரு நிலையில் இருப்பது ஆராய்ச்சியில் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.

- நிரூபணம் 1

PET Scan-ல் பார்த்த மருத்துவர்களுக்கு ஆச்சரியம்!

பரமஹம்ஸரின் மூளை கொஞ்சம் நேரம் முன்பு வரை 100% இயக்கத்தில் இருந்தது.

ஆனால் ஆழ்நிலை தியானத்திற்குள் பரமஹம்ஸர் செல்லச் செல்ல இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

இறுதியில் 90% மூளையின் செயல்கள் சுத்தமாக அடங்கி விட்டது.

உடலைக் காப்பாற்றுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் சுவாசம், இதய இயக்கம் என்று வெகு சில இயக்கங்கள் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.

மற்ற எல்லாம் அடங்கி விட்டது. இது மருத்துவ உலகில் சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்.

ஏனென்றால் மூளையின் செயல்கள் 90% அடங்கிப் போவது...உண்மை தான். ஆனால் அது Coma (உணர்வற்ற நிலை), General anesthesia (முழுஉணர்வு மறத்த நிலை) Brain dead (மூளைச் சாவு) என்ற சில நிலைகளில் மாத்திரமே சாத்தியம்.

ஆரோக்கியமான மனிதனுக்கு இந்த அளவுக்கு மூளைச் செயல்கள் குறைவது சாத்தியமேயில்லை.

'It is Stunning' என்றுக் சொல்லிக் கொண்டே PET Scan ஆராய்ச்சி செய்தவர் வந்தார். காரணம்...

சாதாரண இயக்கத்தில் இருக்கும் எவருக்கும் 90% மூளையின் செயல்கள் திடீரென்று அடங்கிப் போவது என்பது ஒரு சாதாரணமான விஷயமே அல்ல. அசாதாரணமான விஷயம்.

இந்த விஷயம் கூட மருத்துவக் குழுவை உலுக்க வில்லை.

அதன் பின் நடந்த விஷயம்தான்...

மருத்துவ உலகையே உலுக்கிவிட்டது.

ஆழ்நிலை தியானத்திலிருந்து பரமஹம்ஸர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார். அப்படி வர வர, மூளையின் செயல்கள் முழுவதும் 100% இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த நிகழ்வுதான் மருத்துவர்களை முற்றிலுமாக உலுக்கியது.

நினைத்தால் (ஒரு சாவி கொடுத்த பொம்மை போல) மூளையை அடக்குவதும், இயக்குவதும் இன்றைய உலக மருத்துவ அறிவியலின் படி சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்!

முதல் பரிசோதனையை பரமஹம்ஸரிடம் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும், தைரியத்தையும், பரிசோதனையின் முடிவு பரிசோதித்து விட்டது.

இந்த ஒரே ஒரு பரிசோதனை தான்.

மருத்துவத்தின் ஆணி வேரையே பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

அதை அடுத்து மருத்துவக் குழுவுக்கு பரமஹம்ஸரின் மீது அவர்களையும் அறியாமல் மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

அடுத்து மனம் சம்மந்தப்பட்ட ஒரு பரிசோதனையை Q-EEG மூலம் செய்தார்கள்.

மனதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அதை Graph வடிவில், Q-EEG என்ற முறையில் கோட்டு வரைபடமாக படம் பிடித்துக் காட்ட முடியும்.

மனமில்லா நிலையில் உள்ளத்தின் பேச்சு (INNER CHATTERING) இருக்காது என்று பரமஹம்ஸர் சொன்ன கருத்தை, அடுத்ததாக சோதித்து பார்த்தார்கள்.

இந்த பரிசோதனையும் பரிசோதனை செய்த மருத்துவரையே சோதித்து விட்டது.

மருத்துவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

தன் கண்களை தானே ஒரு முறை
கசக்கி விட்டு Laptop monitor -ஐ கண்ணில்
'ஈ ஆடாமல்' பார்த்தார்...

அந்த பரிசோதனையில் ...???

மருத்துவர் “நீங்கள் உங்களுக்குள்
எந்த வித எண்ணங்களும் இல்லாமல்,
உள்ளத்தின் பேச்சு இல்லாமல் இருக்க
முடியும் என்கிறீர்கள் அதை நிரூபிக்கப்
பயன்படுத்தப்படும் பரிசோதனைதான் நான்
இப்போதுசெய்யப் போகிறேன்"
என்றார்.

பரிசோதனைக்கான சாதனங்கள் எல்லாம் பொருத்தப் பட்டுவிட்டன.

ஆனால் மனமில்லா நிலையை
ஆராய்ச்சி செய்யும் மருத்துவருக்கு தான்
குழப்பம்!

மருத்துவர் : 'சுவாமி! நித்யானந்தா! நீங்கள் உங்களுடையமனதை இயக்கமில்லா நிலைக்கு (மனமில்லா நிலைக்கு) எப்போது கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வேன்?!'

பரமஹம்ஸர் : '... நான் கையை மேலே
உயர்த்தினால் மனதை இயங்க
வைக்கிறேன், கையை இறக்கினால்
மனதின் இயக்கத்தை இல்லாமல் போகச்
செய்கிறேன் என்று பொருள். இதை வைத்து
நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.' என்றார்.

பரிசோதனை ஆரம்பித்தது...

ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பாக கழிந்தது.

பரிசோதனை அறைக்கு வெளியில்
இருக்கும் அனைத்து பக்தர்களும் 'என்ன
நடக்கிறது?' 'என்ன சொல்லப் போகிறார்கள்?'
என்ற பரிதவிப்போடு காத்துக்
கொண்டிருந்தார்கள்.

ஒருவேளை, பரமஹம்ஸரின்
ஞானத்தைக் கண்டு கொள்ளும் அளவுக்கு
மருத்துவம் இன்னும் வளராமல்
இருந்தால்!-என்றே அங்கலாய்த்தபடி
காத்திருந்தார்கள்.

Q - E E G
சாதனத்தில் மனதின்
எண்ண ஓட்டத்தை
வரைபடமாக
பிடித்துக் காண்பிக்க
முடியும்.
ECG -ல்
இதயத்தின்
இயக்கத்தை கோட்டு
வரைபடமாக்கி
காண்பிப்பது
போலவே எண்ண
ஓட்டத்தையும்
Q- EEG -ல்
வரைபடமாக்க
முடியும்.

மருத்துவர் : "Yes. Start"

பரமஹம்ஸர் மேலே
உயர்த்திய கையை மெல்ல
மெல்ல கீழே இறக்கினார்...

மக்களுக்கு சேவை
செய்ய வேண்டும்
என்பதற்காகவும் சராசரி
மனிதரிடையே சராசரி
மனிதனாக இருந்து
எல்லோரும் ஏற்றுக்
கொள்ளும் விதத்தில்
ஆன்மீகத்தை மக்களுக்கு
எடுத்துச் சொல்ல
வேண்டும் என்ற ஒரே
'சத்திய
சங்கல்பத்திற்காக'
பரமஹம்ஸர் அடிக்கடி
தன்னை நித்யானந்த
நிலையில் இருந்து கீழே
இறக்கி (Down to the
earth), உடலை
இயக்குவதற்காக
மனதை கொஞ்சம் பயன்
படுத்துவார்கள்.

அப்படி
பயன்படுத்தும்போது,
மனதிலிருந்து தோன்றும்
எண்ணங்கள் மருத்துவரின்
Lap top monitor -ல் மின்
அலைகளாக ஓடிக்
கொண்டிருந்தது.

பரமஹம்ஸர் கையை
மெல்ல மெல்ல கீழே
இறக்கினார்.

இறக்க இறக்க - Lap
top monitor -ல் (கணினி
ஒளித்திரையில்) அலைகள்
குறைய ஆரம்பித்தது.

பரமஹம்ஸர் நித்யானந்தா

பரமஹம்ஸர் கையை
முழுமையாக கீழே இறக்கியதும்,
அலைகள் குறைந்து சாதாரண
கோடாக மாறியது.

மருத்துவருக்கோ ஒன்றுமே புரியவில்லை!

கண்களை கசக்கிவிட்டு
monitor-ஐயும், பரமஹம்ஸரையும்
மாறி மாறி பார்த்தார்.

Lap top - ல் சில பொத்தான்களை அமுக்கி பார்த்தார்.

எந்த ஒரு மாற்றமும் இல்லை.

படுக்கை வச கோடாக
(Horizontal line) மாறிய அலைகள்
மாறியபடியே இருந்தது. எந்த ஒரு
மாற்றமும் இல்லை.

மருத்துவர்: "சுவாமி இப்போது
மனதை இயக்கிகாட்டுங்கள்" என்று
கேட்டுக் கொண்டார்.

பரமஹம்ஸர் கையை
உயரே தூக்கத் தூக்க படுக்கைவச
கோடு மீண்டும் அலைகளாக
மாறியது. மனமற்ற, எண்ணங்கள்
அற்ற நிலை மாறி, மீண்டும்
எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.

மருத்துவர் முகத்தில் ஈ
ஆடவில்லை! குழப்பத்தின் உச்சிக்கே
சென்று விட்டார்!

எப்படிப் பார்த்தாலும்,
Q-EEG அலைகள் கோடாக மாறுவதே
மருத்துவ அறிவியல்படி
சாத்தியமில்லாத ஒரு விஷயம்.
(மனிதனின் சுயகட்டுப்பாட்டுக்கு
அப்பாற்பட்ட ஒரு விஷயம்)

செத்து கொண்டிருக்கிற
அல்லது செத்துவிட்ட நிலையில்
இருக்கும் மனிதனுக்கு மாத்திரமே இது
போன்ற மனம் இயக்கநிலை
சாத்தியம்.

உயிரோடு, உணர்வோடு
சராசரி மனிதன் போன்றே நடந்து
கொள்ளும் ஒரு மனிதனுக்கு
கனவில் கூட சாத்தியப்படாத
விஷயம், மனதின் செயல் நின்று
போவது.

மருத்துவத்தின் அடிப்படை
தத்துவத்தையே
புரட்டிப்போட்டுவிட்டது
பரமஹம்ஸரின் மனம் கடந்த
நிலை.

இரண்டாவதாக, நடந்த
விஷயம், மருத்துவத்தால் கற்பனை
செய்தே பார்க்க முடியாத ஒரு
விஷயம்.

அதுவரை நேர்கோடாக
இருந்த மனநிலை (அதாவது
செத்துக்கொண்டிருக்கிற ஒரு
மனிதனின் மனம் நொடிப் பொழுதில்
மாறி, உற்சாகமாக இயங்குவது
போல) மீண்டும் Lap top monitor
-ல் அலைகளாக வருவதை எந்தக்
கணக்கில் சேர்ப்பது?, எப்படி புரிந்து
கொள்வது? என்று எதையுமே
மருத்துவப் பரிசோதனைக் குழுவால்
புரிந்து கொள்ள முடியவில்லை.

(மனதின் வெவ்வேறு
நிலைகளை ஆய்வு செய்து ஒரு
முடிவுக்கு வருவதற்கு
பரமஹம்ஸரை, மருத்துவக்
குழுவினர் 5 நாட்களில் தொடர்ந்து
120 முறை பரிசோதனை
செய்தார்கள்.

மருத்துவக் குழுவால்
புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்,
பரமஹம்ஸர் சொன்ன அனைத்தும்
நிஜம். உண்மை.

'கற்பனையோ, கருத்தோ
அல்ல' என்பதை ஆராய்ச்சி
முடிவிற்கு பின்னால் ஏற்றுக்
கொண்டனர்.

portrait of Paramahamsa