ஆனந்த மாற்றம் - 4
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பக்தி ஈடுபாட்டோடு அடுத்து ஒரு மருத்துவர், பரமஹம்சரிடம் "சுவாமி, சக்கரம் என்றால் என்ன?" என்று கேட்டார்.
பரமஹம்ஸர், "சக்கரம் என்பது மெய்ஞானிகள்
அருவ உருவமாக (Meta Physical), தாங்கள்
அனுபவித்து உணர்ந்த உண்மைகளை வார்த்தை
வடிவில் சொன்னது.
நமது உடலில் ஏழு சக்தி மையங்கள்
இருக்கிறது. நாம் சக்திமையங்களை ஏழு
சக்கரங்கள் என்று அழைக்கிறோம்.
சக்கரங்கள் சக்திமயமானவை. சக்கரங்கள் உணர்வுப்பூர்வமானவை.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் எங்கே இருக்கிறது என்று ஞானிகள் குறிப்பிடும் இடத்தை அறுத்துப் பார்த்தால் அங்கு சக்கரம் என்ற ஒன்று இருப்பதில்லை.
உணர்வின் அடிப்படையில் வெளியில் இருந்து மையம் நோக்கியும், மையத்திலிருந்து வெளிநோக்கியும் இருக்கக்கூடிய சக்தி அமைப்புதான் சக்கரங்கள். இதை உணர மட்டுமே முடியும்.
நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மூளை, இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகள் நம் உடலை இயக்குவதில்லை.
ஏழு சக்கரங்களும் அவையவை இருக்கும் இடத்திற்கு சம்மந்தபட்ட உறுப்புகள் மூலம் உயிர் சக்தியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. உடலானது, உயிர்ச் சக்தி மூலம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

உயிர்ச் சக்திக்கும், நம் உடலுக்கும் பாலமாக சக்கரங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உணர்ச்சி கொந்தளிப்புகள்
பாலமாகயிருக்கும் சக்கரங்களை
நாசப்படுத்துகின்றன.
இதனால் சக்திப் போக்குவரத்து குறைக்கின்றது.
உடல் அதற்கு தேவையான அளவு
உயிர்ச் சக்தியை, பெற முடியாமல்
போகின்றது.
உயிர்ச் சக்தியின் பற்றாக்குறையே
நம்மிடமிருந்து சோர்வு, மந்தத்தன்மை,
தூக்கமின்மை, நாற்பட்ட நோய், மனச்
சோர்வு, மனநோய் என்று பல வகைகளில்
வெளிப்படுகின்றது.
சக்கரங்களைப் பாதிக்கும்
உணர்ச்சிக் கொந்தளிப்புகளை எப்படி
சமாளிப்பது?, எப்படி உணர்வுப்பூர்வமாக
வாழ்வது? என்ற அடிப்படையை மட்டும்
கற்றுக் கொண்டாலே போதுமானது. உயிர்ச்
சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி, முழு
ஆரோக்கியத்தையும் நாம் முழுமையாக
பெற முடியும்.
இதனால் இன்றைய மனித குலத்தின்
மிக முக்கியத் தேவையான ஆரோக்கியத்தை
பூர்த்தி செய்ய முடியும்.
உலகம் நிம்மதி அடையும்." என்று சொன்னார்.
மெய்ஞான அனுபூதியைப் பற்றி 5000
வருடங்களுக்கு முன் 'சிவன்' தந்த்ர
சாஸ்திரத்தில் சொன்னதையும்,
சமீபத்தில் வாழ்ந்த 'ராமகிருஷ்ண பரமஹம்ஸர்', 'ரமணர்' ஆகியோர் சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், அவர்கள் ஒரே சத்யத்தை தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். என்பது புரியவரும்.
காலகாலத்திற்கும் சத்யம்
சத்யமாகவே இருக்கின்றது என்பது
ஆழமாக புரியவரும்.
அதே விஞ்ஞானத்தை பற்றிய தத்துவ
விளக்கங்களை பார்த்தோமானால் அவை
தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதை நாம்
தெரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கு 5000 வருடங்கள் முன் செல்ல வேண்டாம்.
வெறும் 50 வருடங்களுக்கு
முன் ஒவ்வொரு துறையிலும் இருந்த
விஞ்ஞானிகளின் கருத்துகளையும் இன்றைய
விஞ்ஞானிகளின் கருத்துகளையும் ஒப்பிட்டுப்
பார்த்தாலே போதும்
உண்மை புரியும்.
மூத்த விஞ்ஞானி சொன்ன கருத்தை
இளைய விஞ்ஞானி முற்றிலுமாக
மறுத்திருப்பார்.
அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருப்பார்.
விஞ்ஞானத்தைப் பொருத்தவரை நேற்றைய உண்மை இன்றைய பொய்.
இன்றைய உண்மை நாளைய பொய்
என்ற ரீதியில் தான் நிறைய ஆராய்ச்சிகளின்
முடிவுகள் சொல்கின்றது.
'அணுவைப் பிளக்க முடியாது' என்று
நியூட்டன் சொன்ன உண்மையை ஐன்ஸ்டின்
பொய்யாக்கினார்..
எப்போதும் மனித மனமானது
மாற்றத்தையும், புதுமையையும் அதிகம்
விரும்பும்.
இந்த விஞ்ஞான தொடர் மாற்றங்களின்
காரணமாக மனித மனம் மிக எளிதாக
ஈர்க்கப்படுகின்றது.
மெய்ஞானத்தின் உண்மையானது 5000
வருடங்களாகியும் உண்மையாகவே
இருக்கின்றது.
அதில் சிறிதும் மாற்றம் இல்லை.
அதன் பொருள் வளர்ந்த ஒன்று, எந்நாளும் நிலைத்து நின்று வேண்டி விரும்புவோர்க்கு பயன் தருகின்றது என்பதாகும்.
விஞ்ஞானத்தில் ஒரு உண்மை 50 வருடங்களுக்கு மேல் இதுவரை தாக்குப்பிடித்ததில்லை. ஏனெனில் அதற்குள் அடுத்த உண்மை தயாராகிக் கொண்டேயிருக்கும். அதன் பொருள், அந்த துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகும்.
மெய்ஞானம் வளர்ந்து முடிந்த ஒன்று.
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒன்று.
மெய்ஞானம் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபிக்கப் படலாம்.
விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றி சில ஆதாரங்களை கண்டுபிடிக்கலாம்.
ஆனால் விஞ்ஞானத்தால் மெய்ஞானத்திற்கு சான்றிதழ் தர இயலாது.
மெய்ஞானம் என்ற ஆலமரத்தின் விழுதுகளை புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆராய்ச்சி முறைகள் 'நிரூபிக்கலாம்.'
ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் முதிர்ந்த மெய்ஞானத்திற்கு பரிபூரண விளக்கம் தர முடியாது.