ஆனந்த மாற்றம் - 5
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு மருத்துவர், "சுவாமி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சின்னக் கேள்வி."
பரமஹம்ஸர்: "கேளுங்கள்"
மருத்துவர்: "நீங்கள் சக்கரங்களைப் பற்றி கூறியதெல்லாம் கேட்பதற்கு மிக அருமையாகத்தான் இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் சக்கரங்களைப் பாதிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை சமாளித்து உணர்வுப் பூர்வமாக வாழ்வது எப்படி?" எனக் கேட்டார்.
பரமஹம்ஸர்: "இது சின்ன கேள்வியா?
இதற்கு பதில் தர குறைந்தது இரண்டு நாட்கள் தேவை.
இரண்டு நாட்கள் தேவைப்படுவதால்தான், அதை இரண்டு நாள் தியான முகாமாகவே வடிவமைத்திருக்கிறோம்.
ASP என்னும் இந்த இரண்டு நாள் தியான முகாமில் 7 சக்கரங்கள் பற்றிய, 7தியானமுறைகளை, 7மதங்களிலிருந்து எடுத்து, 7 சொற்பொழிவுகளோடு வழங்குகிறோம்.
இதற்கென பிரத்யேகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட 21 ஆச்சாரியர்கள் உலகம் முழுவதும் சென்று ASP வகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் எல்லோரும் லாஸ் ஏscrollஜலிஸில் அடுத்த வாரம் நடக்கும் தியான முகாமில் கலந்து கொள்ளலாமே!
அப்போதுதான் உங்கள் கேள்விக்கு முழுப் பதிலும் கிடைக்கும்" என்று சொன்னார்.