ஆனந்த மாற்றம் - 3
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸரை ஆராய்ந்த
மருத்துவக்குழு நபர்கள்,
ஆராய்ச்சியின் முடிவில்
பக்தர்களாகவே மாறிவிட்டார்கள்.
நமக்குத் தெரியாத பலகோடி
விஷயங்கள் உலகத்தில்
இருக்கிறது என்பதை அனுபவ
பூர்வமாக, பரமஹம்ஸரை
சந்தித்தபின் உணர்ந்தனர்.
‘எல்லாமே எனக்குத்
தெரியும்' எனும் கர்வத்தை,
அகங்காரத்தை தூக்கி எறிந்துவிட்டு,
பரமஹம்ஸர் சொல்லும்
விஷயங்கள் அனைத்தையும் எந்த
விவாதமின்றி ஏற்றுக் கொள்ள
ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு மருத்துவர், வெகு
பவ்யத்தோடு பரமஹம்ஸரிடம்
"சுவாமிஜி, மனிதனின் உயிர்
எங்கே இருக்கிறது ?" என்று
கேட்டார்.
பரமஹம்ஸர்,
"அருமையான கேள்வி,
இதற்கு விளக்கம்
அளிப்பதற்கு முன், நீங்கள்
மனித உடலில் எங்கே உயிர்
இருக்கிறதாக
நினைக்கிறீர்கள் என்று
சொல்லுங்கள்" என்று
கேட்டார்கள்.
அந்த மருத்துவர்,
"கிட்டத்தட்ட உயிர் என்பது மூளை
சம்பந்தப்பட்டது என்று
நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நீங்கள் சொல்லப்
போகும் உண்மையை கேட்கவே
விரும்புகிறோம்" என்று
சொன்னார்.
பரமஹம்ஸர்,
‘'மனிதனின் உயிர்
சுவாதிஸ்டானச் சக்கரத்தில்
ஒடுங்குகிறது.
சுவாதிஸ்டானம் என்பது
நமது தொப்புள் கொடிக்கு
இரண்டு அங்குலம் கீழே, வலப்
புறத்தில் அடங்கி இருக்கிறது"
என்று பதிலளித்தார்.
"அது எப்படி உயிர்
சுவாதிஸ்டானத்தில் ஒடுங்கும்?"
என்ற விவாத கேள்வியை எழுப்ப
ஒருவருக்கு கூட மனமில்லை.
மாறாக, "சுவாமிஜி!
சுவாதிஸ்டானச் சக்கரத்தில் உயிர்
அடங்குவதற்கும், நம்
வாழ்க்கைக்கும் ஏதாவது
பயனுள்ள தொடர்பு இருக்கிறதா?"
என்று ஒரு மருத்துவர் கேட்டார்.
பரமஹம்ஸர், "தொடர்பு உண்டு. அக நடுக்கம்தான் வெளியே பயமாக வெளிப்படுகின்றது.
உங்களைப் பற்றிய
ரகசியங்கள், உலகைப் பற்றிய
ரகசியங்கள், வாழ்க்கைப் பற்றிய
ரகசியங்களைத் தெரிந்துவிட்டால்,
பல புரியாத, தெரியாத
விஷயங்களுக்கு பதில்
கிடைத்துவிடும்.
தெளிவு வந்து விடும்.
அகத்தெளிவுதான் வெளியே தைரியமாக வெளிப்படும்.
உன்னைப் புரிந்து கொள்,
உலகை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அல்லது
உலகைப் புரிந்து கொள்,
உன்னை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டில் எது சுலபமோ அதைச் செய்தால் போதும்.
அகத்தெளிவு பிறந்துவிடும்.
அகநடுக்கம் அடங்கி விடும். பயம் ஓடி
விடும். தைரியம் பிறந்து வளர
ஆரம்பிக்கும்.
மனிதன் தன்னை
அபாயத்தில் இருந்து காப்பாற்றி
கொள்வதற்காக இறைவனால்
உருவாக்கப்பட்ட காப்பு உணர்வு
தான் பயம்.
அபாயத்தில் இருந்து
மனிதனுக்கு அபயம்
அளிப்பதற்காகவும், மேலும் இந்த
உலகை ஆனந்தமாக
அனுபவிப்பதற்காகவும்
உருவாக்கப்பட்ட உணர்வுதான்
தைரியம்.
பயம் உயிர்ச் சக்தியின் வெளிப்பாட்டை குறைக்கின்றது!
தைரியம் உயிர்ச்
சக்தியின் வெளிப்பாட்டை
அதிகரிக்கின்றது!
உயிர் சுவாதிஸ்தானச்
சக்கரத்தில் ஒடுங்கியிருப்பதால்
தான், பயமும், தைரியமும்
உயிர்ச்சக்தியை
ஆட்டிப்படைக்கின்றன.
பயத்திற்கான
காரணங்களை கண்டுபிடித்து,
அதற்கான பதிலைக் கண்டு
கொண்டாலே போதும்,
சுவாதிஸ்தானம் மலர
ஆரம்பித்துவிடும்.
(புரியாத விவரங்கள்தான
அறியாமை) அறியாமை என்னும்
இருள் அகல அகல,
சுவாதிஸ்தானச் சக்கரம் மலர
ஆரம்பிக்கும்.
தைரியம் பெருக
ஆரம்பிக்கும். உடலில் உயிர்
சக்தியின் ஓட்டம் அதிகமாகும்.
உயிர்ச் சக்தியின் ஓட்டம்
அதிகரிக்க - ஆரோக்கியம், நிம்மதி,
சந்தோஷம் தானாக அதிகரிக்க
ஆரம்பித்துவிடும். புரிந்ததா..."
என்று விளக்கினார்.
மொத்த மருத்துவக்
குழுவும் வெகு உற்சாகத்தோடு
கரவொலி எழுப்பினார்கள்.
உயிர்
சுவாதிஸ்தானச் சக்கரத்தில்
ஒடுங்கியிருப்பதால் தான்,
பயமும், தைரியமும்
உயிர்ச்சக்தியை
ஆட்டிப்படைக்கின்றன.