KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/முன்னுரைSign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

'ஆன்மிக உலகம்
சொல்லும் போது நம்பாத
நாம், அறிவியல் உலகம்
சொல்லும் போது நம்பியே
ஆக வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம்.'

- பரமஹம்ஸ நித்யானந்தர்

ரிஷிகள்...

ரிஷிகளும்,
ஞானிகளும் பல்லாயிரம்
வருடங்களாக ஆனந்தத்தைப்
பற்றியும், ஞானத்தைப் பற்றியும்
தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச்
சொல்லிக் கொண்டே
இருக்கிறார்கள்.

"ரிஷிகள் முழுமையாக
அனுபவித்த அனுபவத்தின்
Research reportதான்
வேதங்கள், உபநிடதங்கள்,
மந்திரங்கள்" என்று
பரமஹம்ஸர் ஒரு
சொற்பொழிவில்
சொல்லியிருக்கிறார்.

புனிதமான வேதங்கள்,
உபநிடதங்கள், மந்திரங்கள்
சொல்லும் ஆன்மீக செய்திகள்
அனுபவத்தை அடிப்படையாகக்
கொண்டவை.

எனவே அவற்றிற்கு
படிப்பாளிகள் எதிர் பார்க்கும்
ஆதாரங்களை காண்பிக்க
முடியாது. எனவே தான்
உண்மையான ஆன்மீகத்
தேடலோடு இருக்கும் சிலருக்கு
மாத்திரமே ஆனந்த வாழ்வு
சாத்தியம் என்று இருந்தது.

இன்று அந்நிலை மாறிக்கொண்டு வருகிறது.

மனிதகுல
வரலாற்றிலேயே முதன்
முதலாக 'மனம் கடந்த நிலை'
ஆதாரபூர்வமாக
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மெய்ஞானத்தை
விஞ்ஞானபூர்வமாக நவநாகரிக
மக்களுக்கு விளக்கிக்
கொண்டிருக்கும், பரமஹம்ஸ
நித்யானந்தரின் மெய்ஞான
அனுபவ வெளிப்பாடுகளை
(மனம் கடந்த நிலை) இன்றைய
விஞ்ஞானம் ஆதார பூர்வமாக
நிரூபிக்க முயற்சி
செய்திருக்கிறது.

இது நம்
எல்லோருக்கும் நிச்சயம் ஓர்
வரப்பிரசாதமே!

'என்ன இது?...'

'சாத்தியமே இல்லை...'

'இவ்வளவு தெளிவா!!...'

"சுவாமி, நாங்கள் உண்மை என்று
இதுவரை ஆதாரத்தோடு நம்பிய விஷயங்கள்
எல்லாம் இப்போது ஆதாரத்தோடு பொய்யாகிறதே!"

'............' Computer Monitor-ல் தெரிந்த பரமஹம்ஸரின் மனநிலை பற்றிய சமிக்ஞைகளை பார்த்து, தான் காண்பது நிஜமா, கனவா என்று குழம்பி கண்ணை கசக்கி விட்டு .... பார்த்து மருத்துவர்......

'சுவாமிஜி! இதுவரை நாங்கள் உண்மை என்று நம்பியதெல்லாம்..?...!..?...!.....'

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்து
பல்கலைக் கழக விஞ்ஞானிகளை உலுக்கி
ஆச்சரியப்பட வைத்த, இந்த மருத்துவ
ஆராய்ச்சியைப் பற்றிய சுருக்கச் செய்தியை
தொகுத்தளிக்கிறோம்.

நம் குருநாதர் பரமஹம்ஸ நித்யானந்தரிடம் செய்யப்பட்ட விஞ்ஞான பரிசோதனைகளின் ஒளி நாடாக்களை பார்த்தும், ஆராய்ச்சியின் போது உடன் இருந்தவர்களின் அனுபவத்தையும் கேட்டும். இந்த செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.

சாதாரண எழுத்து மூலம் அசாதாரணமான
ஆராய்ச்சியின் ஆச்சரியங்களை விளக்க
முயற்சித்திருக்கிறோம். அவ்வளவே.

படித்து பயன்பெறுங்கள். பெற்ற பயனை
பார்த்தவரிடமெல்லாம் பகிர்ந்து
கொள்ளுங்கள். பரவசச் செய்தி பாரதம்
முழுவதும் பரவட்டும்!

இப்படிக்கு
நித்யானந்தத்தில்
தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட்.

சோதனை

ஒக்லஹாமா. USA. பிப்ரவரி 15-2004 மாலை மணி 7.30 ஒக்லஹாமா ஸ்டேட் யுனிவர்சிட்டி கட்டிடத்தில்...