KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/சோதனை - 1Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

சோதனை - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்விகள் ஒவ்வொன்றும் கணைகளாக தொடுக்கப் பட்டுக் கொண்டிருந்தன. சாதாரண கேள்வியாகட்டும்..

அசாதாரணமான கேள்வியாகட்டும்...

எப்போதும் மாறாத சிரிப்போடு. எதனாலும் கலக்கமடையாத நிதானத்தோடு, எவராலும் அசைக்கமுடியாத உறுதித் தன்மையோடு,

ஒவ்வொரு கேள்விக்கும், எளிமையாக பதில்களை தத்துவபூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் விளக்கி கொண்டிருந்தார் நம் பரமஹம்ஸ நித்யானந்தர்.

* நீங்கள் அடைந்த சமாதி நிர்விகல்ப சமாதியா, சவிகல்ப சமாதியா?

...........................................................................................

* தியானம் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று நீங்கள் எதை ஆதாரமாக கொண்டு சொல்கிறீர்கள்?

...........................................................................................

* நாம் உலகில் இருக்கிறோமா? அல்லது உலகம் நமக்குள் இருக்கிறதா?

...........................................................................................

* எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

...........................................................................................

* யார் நீங்கள் ? (Who are you?)

...........................................................................................

விதம் விதமாய் மக்களும், மருத்துவர்களும் கேட்ட கேள்விகளுக்கு வெறுமனே விவாதிக்காமல். விளக்கமான பதில்களை சுவைபட நகைச்சுவை கலந்து பேசிய பரமஹம்ஸரின் ஞான வெளிப்பாட்டை கண்டு பிரமித்தனர் அமெரிக்கர்கள்.

அப்பொழுதெழுந்த கர ஓசையும், ஆரவாரமும் அந்த இடத்தை தாண்டிச் சென்றவர்களையெல்லாம் ஒரு நிமிடம் நின்று ‘என்ன நடக்கிறது இங்கே?' என்று ஆச்சரியப்பட வைத்தது.

சோதனை - 2

சோதனை - 2

Lap top என்ற குட்டி கம்ப்யூட்டர்களை நாம் ஆளுக்கொரு கால்குலேட்டர் வைத்திருப்பது போல அங்கிருந்தவர்கள் வைத்திருந்தார்கள். இந்த நவீன மருத்துவ நிபுணர்களின் குழுத்தலைவர் எழுந்தார்.

பரமஹம்ஸரின் விளக்கத்திற்கு பின், தியானத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டது மருத்துவக் குழு; ஆனால் ஞானத்தின் மகத்துவத்துவமோ அதே கேள்விக் குறியாகவே இருந்தது.

மனநல மருத்துவர் குழுவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் எழுந்து - 'ஞானம், ஆனந்தம் பற்றி நீங்கள் கூறும் விஷயங்கள் எல்லாம் சுத்த பொய்கள், வெறும் கற்பனைகள்' என்றார்.

'அப்படியா ? ! ? .............................' - பரமஹம்ஸர்

'இந்து சந்நியாசிகள் இமயமலையில் கஞ்சா பிடிக்கிறார்கள், அபின் சாப்பிடுகிறார்கள் - இது போன்ற போதைப் பொருட்களை சாப்பிடும்போது ஏற்படும் ஒருவித மப்புநிலை, ஆனந்த நிலையில் இருப்பது போல் காண்பிக்கும். உங்களுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது? விளக்க முடியுமா?' என்று ஏகத்தாளம் கலந்த தொனியில் கேட்டார் ஒரு மனோ விஞ்ஞானி.

பரமஹம்ஸர் சொன்னார், "இரண்டு விஷயங்கள் உண்டு.

ஒன்று : போதைப் பொருட்களால் வரும் ஆனந்தம் போன்ற நிலை தற்காலிகமானது.

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

ஆனால் நான் கூறும் ஆனந்தம் தற்காலிகமானது அல்ல.

இரண்டாவது : இந்த ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

அது என்னுடைய வாழ்வில், Atleast நான்
ஒரு முறை கூட போதைப் பொருளை
உபயோகித்ததில்லை.

நான் கூறும் 'ஆனந்தம்' என்பது இரண்டையும் தாண்டி நிலையானது;

எப்போதும் இருந்து கொண்டே இருப்பது; அது சாசுவதமானது.

எப்போதும் யாராலும், எதனாலும்
அசைக்க முடியாத நிம்மதியும், தெளிவும்
கலந்த ஓர் உணர்வாக அது இருந்து
கொண்டே இருக்கும்.

அது தான் நித்யானந்தம்.

நாங்கள் சொல்லும் ஆனந்தம்.

எனக்குள் இருந்துகொண்டே இருக்கும் பரவசப்பெருக்கு-" என்று சொன்னார்.

உடனே மற்றொரு மருத்துவ ஆராய்ச்சியாளர், "ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் நீங்கள்,

ஆனால் ஆனந்தத்தைப் பற்றி பலர் கிளப்பி விட்ட கதைகளை கேட்கிறீர்கள்...

கேட்ட விஷயங்களைப் பற்றியே தொடர்ந்து கேட்பதும், ஆனந்தத்தின் மீது உங்களுக்கு இருக்கும் ஆசையும் சேர்ந்து. ‘ஆனந்தத்தில்தான் நான் இருக்கிறேன்’ என்ற மாயமான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்துகின்றன. (இது Illusion ஆகவோ, Hallucination ஆகவோ இருக்கலாம்).

முழுக்க முழுக்க கற்பனை உலகில்தான் வாழ்கிறோம்’ என்ற உண்மை தெரியாமல், உண்மையில் ஆனந்தமாக தான் இருக்கிறேன் என சம்பந்தப்பட்ட மனிதர் நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே உங்கள் கூற்று வெறும் கற்பனையாக இருக்கலாம். யாருக்கு தெரியும்???" என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டார்.

பரமஹம்ஸர் ஒரு மெல்லிய புன்னகையோடு கேள்வி கேட்ட மருத்துவரைப் பார்த்து, "நீங்களும் நானும் பேசிக் கொண்டிருப்பது நிஜமா கற்பனையா?" என்று புதிர் கேள்வியை கேட்டார் பரமஹம்ஸர்.

கிண்டலாக கேள்வி கேட்ட மருத்துவர் இப்படி
ஒரு பதில் கேள்வியை கொஞ்சம் கூட
எதிர்பார்க்கவில்லை...

சற்று யோசித்து விட்டு, "நிஜம்தான், கற்பனை அல்ல" என்றார் மருத்துவர்.

"நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்
இந்த அனுபவ நிகழ்ச்சி உண்மை என்றால்,
நான் சொல்லும் ஆனந்த அனுபவம் முழுக்க
முழுக்க உண்மை, நிஜம்" - என்று சொன்னார்
பரமஹம்ஸர்.

மருத்துவக் குழு தலைவர், "நீங்கள் கூறும் தியானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

ஆனால் ஞானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனால் நீங்கள் சொல்லும் 'ஞான அனுபவம்' (Enlightenment) என்றால் என்ன? என்று விளக்க முடியுமா?" என்று கேட்டார்.

பரமஹம்ஸர், "நான் இருக்கும் முழுமையான, நித்யமான ஆனந்த நிலைக்கு சாட்சியாக நான்கு முக்கிய அம்சங்களை சொல்கிறேன். ரிஷிகள், ஞானம் அல்லது மனமில்லாப் பெருநிலை பற்றிச் சொல்லிய கருத்துக்கள் இந்த நான்கு அம்சத்திற்குள் பொருந்தும்."

அது. . .

1. மனமில்லாப் பெருநிலை. அதாவது மனம்,
எண்ணம் இவைகளையெல்லாம், தாண்டிய ஒரு ஞான
நிலை - மனம் கடந்த நிலை.

2. எல்லையற்ற விரிந்து பரந்த உணர்வு.

3. பேரானந்த நிலை.

4. ஆண், பெண் கடந்த நிலை."

1. மனம் கடந்த நிலை :

நம் உள்ளத்தினுள் நிகழும் பேச்சு அல்லது உள்ள உளறல் (INNER CHATTERING) என்று அழைக்கப்படும் தாறுமாறான எண்ண ஓட்டம் இல்லாமல் போகிறது.

மனதின் இயக்கமே இல்லாமல் போவதுதான் மனம் கடந்த நிலை.

2. எல்லையற்ற உணர்வு :

நான் வேறு; இந்த பிரபஞ்சம் வேறு;

என்னைச் சுற்றி இருக்கும் கல் வேறு, புல் வேறு என வேறுபாடு அற்றது. 'நானே எல்லாமாகவும்', 'எல்லாம் நானாகவும்' இருக்கும் ஓர் அற்புதமான உணர்வு நிலைதான் எல்லையற்ற உணர்வு (Boundryless feeling).

3. பேரானந்த நிலை :
தொடர்ந்து 'ஆனந்தம்' என்னும் உணர்வு
நிலையிலேயே இருந்து தொடர்ந்து கொண்டு
இருக்கிறேன்.

யாராலும், எதனாலும் அசைக்க முடியாத ஒரு பேரானந்த நிலை இது.

இதுதான் Ultimate.

இதற்கு மேல் அடைவதற்கு எதுவுமே இல்லை
என உணர்த்தும், உணர்வுத் திறன் பெற்ற நிலை
தான் பேரானந்த நிலை.

4. ஆண், பெண் கடந்த நிலை. (அர்த்தநாரீஸ்வரர் அனுபவ நிலை)

பரமஹம்ஸர், "ஆண், பெண் என்ற கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு நடுநிலையான உணர்வு நிலையில் இருந்து கொண்டு இருக்கிறேன்.

உடல் ஆணாக இருக்கிறது.

ஆனால் எனக்கு ஆண் என்ற உணர்வோ எண்ணமோ இல்லை.

நான் இருக்கும் 'நித்யானந்த நிலைக்கு' இவையே ஆதாரம்" என சொன்னார்.

QEEG, PET SCAN

QEEG, PET SCAN
என்ற அதிநவீன மருத்துவ
இயந்திரங்களுக்கு மத்தியில் பரமஹம்ஸர்

சோதனை -3

பரமஹம்ஸரின் விளக்கங்களுக்கு பின், அந்த மருத்துவக் குழுத்தலைவருக்கு ஒரு புது சந்தேகம் பிறந்தது.

மருத்துவக் குழுத் தலைவர், "உங்களின் ஞான அனுபவங்கள் பற்றி நீங்கள் சொல்பவை எல்லாம் உங்கள் மூளையில், அதாவது ஞாபகத்தில் இருக்குமா?"

பரமஹம்ஸர், "ம்... பதிவாகி இருக்கும்."

மருத்துவக் குழுத் தலைவர்,
"அப்படியென்றால் நீங்கள் சொல்வது உண்மை
தான் என்பதை அறிந்து கொள்ள, மூளை
சம்பந்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்கு
உடன்படுவீர்களா?"

புன்சிரிப்போடு பரமஹம்ஸர். "....Ok....." "....Proceed...."

மூளையின் பல நுண்ணிய இயக்கங்களை படம் பிடித்து காண்பிக்கும் PET Scan (POSITRON EMISSION TOMOGRAPY SCAN)என்ற பரிசோதனையை பரமஹம்ஸருக்கு செய்து பார்க்க மருத்துவக் குழு விரும்பியது.

Scan-ல் பயன்படுத்தப்பட்ட ஐசோடோப்பின் விலை $5000 (2.5 லட்சம் ரூபாய்) அதிக விலையுள்ள ஐசோடோப்பை பயன்படுத்துவதால், முதலில் ஒரே ஒரு PET Scan- க்கு மட்டுமே கேட்டுக்கொண்ட மருத்துவக் குழு, பரமஹம்ஸரிடம் இருந்த அற்புத ஆற்றல்களைக் கண்டு கொண்டது, அதனால் மேலும் இரண்டு PET Scan பரிசோதனைக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு பெற்றனர்.

மூன்று PET Scan செய்தார்கள்.

இரண்டு Q-EEG (QUANTITATIVE ELECTRO ENCEPHALOGRAPHY) பரிசோதனைக்கு பரமஹம்ஸரிடம் அனுமதி கேட்டு, தொடர்ந்து 5 நாட்கள் எல்லாவிதமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர்.

PET Scan - ஐ மூன்று நிலைகளில் மருத்துவர்கள் ஆராய்ந்தார்கள்.

1. கண்கள் திறந்திருக்கும் சாதாரண விழிப்பு நிலை.

2. கண்கள் மூடிய தியான நிலை (30min in to deep meditation)

3. ஆழ் தியானநிலை (60min into deep meditation)

Q-EEG-ல் பரமஹம்ஸரின் ஞானத் தெளிவின் வெளிப்பாடுகளைப் பார்த்தது தான் தாமதம், மொத்த குழுவும் அதிசயித்து போய்விட்டனர்.

ஆராய்ச்சியின் முடிவில் 'பக்தர்களாக' மாறி விட்டார்கள்.

இது இந்தியாவிற்கே பெருமை. காரணம், என்னதான் அறிவியல் வளர்ந்து, அறிவு பெருத்து இருந்தாலும்

அதுவும் அமெரிக்காவில்

இப்படி ஒரு ஆன்மீகச் சாதனை நடந்திருப்பது நம் எல்லோருக்கும் ஆனந்தம்தான். இது இந்தியாவுக்கே பெருமை.

ஆராய்ச்சியில் கிடைத்த பிரமிக்க வைக்கும் முடிவுகளை (Results) உலகத்திற்கு வெளியிடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் பல் விதி முறைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. தற்போது ஆராய்ச்சியின் சில பகுதிகளை மட்டும் கோர்த்து சிறப்பு அம்சமாக முதல் கட்ட அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மருத்துவப் பரிசோதனையைப் பற்றி பரமஹம்ஸர் சொன்னவற்றையும், உடன் இருந்த பக்தர்கள் சொன்னதையும் ஒன்றாக சேர்த்து வெளியிடுகிறோம்.

மருத்துவக் குழு என்னிடம் வந்து, 'சுவாமி, உங்களுடைய மூளையை பரிசோதிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டனர். என்னுடைய ஒப்புதல் கிடைத்ததும், மருத்துவ ஆராய்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். பின் என்னை அழைத்தார்கள்.

ஆராய்ச்சிக்கு தேவையான அனைத்து கருவிகளையும் பொருத்தி ஆராய்ச்சிக்கு தயார் செய்தார்கள்'

  • என்று சொன்னார்.

அப்போது, அந்த ஆராய்ச்சி குழுவில் மருத்துவர் ஒருவர்,

மருத்துவர் : "Nithyanandha! are you sure about the test?"

(நித்யானந்தா! ஆராய்ச்சிக்கு உறுதியாக உடன்படுகிறீர்களா?)

பரமஹம்ஸர் : 'ஏன்?'

மருத்துவர் : 'இந்தப் பரிசோதனைக்கு இதற்கு முன்பு பல மதத் துறவிகளையும் கூப்பிட்டிருக்கிறோம். எல்லோருமே முடியாது என்று கூறி ஒதுங்கி விட்டார்கள்.'

பரமஹம்ஸர் : 'அப்படியா?'

மருத்துவர் : 'நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை.

நாங்கள் ஏற்கெனவே கூறியதைத்தான் திரும்ப சொல்கிறோம்.

ஆராய்ச்சி முடிவில் நீங்கள் கூறும் ஆனந்த அனுபவங்களை எல்லாம் உண்மை என்றால் உலகிற்கு, அந்த உண்மைகளை எடுத்து விளக்கிக் சொல்வோம்.

இல்லையென்றால்...

நீங்கள் போலியானவர்.

நீங்கள் கூறும் ஆனந்தம் என்பதே கற்பனையான ஒரு விஷயம் தான் என்று மட்டும் நிரூபணமானால், அதையும் உலகிற்கு அம்பலப்படுத்துவோம்.

இப்போது கூட எதுவும் கெட்டுப் போகவில்லை...

உங்களுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தால் இப்போது கூட நீங்கள் பரிசோதனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்...?"

பரமஹம்ஸர் : புன்சிரிப்போடு, 'ஆராய்ச்சியை சீக்கிரம் ஆரம்பியுங்கள்!' என்றார்.

சோதனை -4

சோதனை -4

USA -வில் பரமஹம்ஸரிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பல மிகத்தரம் வாய்ந்த நவீன ஆராய்ச்சி அறைகளில் செய்யப்பட்டவை. Hygine கருதி அங்கு கேமரா கூட அனுமதிக்கப்படவில்லை.

ஆராய்ச்சி ஆரம்பித்ததுமே, மருத்துவக் குழு மாறிப்போனது. அவர்களின் மரியாதையும் பலமடங்கு கூடிவிட்டது, பரமஹம்ஸர் சொன்னவை அனைத்தையும் உண்மை என உணர்ந்தனர்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் பரிசோதித்த பின் மருத்துவக் குழு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் சில :

★ பரமஹம்ஸர் சொல்லியபடி ‘அவர் மனம் தாண்டிய மனமில்லாப் பெருநிலையில் இருக்கிறார்’ என்பது ஆராய்ச்சியில் ஆதாரபூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.

★ ‘எல்லையற்ற உணர்வு நிலையை பரமஹம்ஸர் உணர்வது உண்மை’ என்று பரிசோதனையில் நிரூபணமாகி உள்ளது.

★ பரமஹம்ஸர் சொன்னபடி ‘பேரானந்த நிலை அவருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது’.

★ எண்ணங்களும், உணர்ச்சிகளும் சுவாமிஜியின் முழுகட்டுப்பாட்டில் உள்ளது.

★ பரமஹம்ஸர், சராசரி மனிதனின் புத்திசாலித்தனத்தை விட குறைந்து 6 மடங்கு அதிக புத்திசாலித்தனத்தையும் புத்திக் கூர்மையையும் பெற்றிருக்கின்றார்.

★ பரமஹம்ஸரின் உடற்கூற்றின் உள்ளே இருந்து மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு எட்டாத சக்தி வெளிப் பட்டுக்கொண்டேயிருப்பது நிரூபணமாகி உள்ளது.

★ ‘மூன்றாவது கண்’ என்பது இதுவரையிலும் கருத்து வடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்த வெளியீடு பரமஹம்ஸரிடம் ஒளிர்வதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Dr. Murali Krishna with Nithyananda during EEG testing
Nithyananda with the research team

Q- EEG என்றால் என்ன?

EEG - என்றால் electroencephalogram.

Q- EEG என்றால் Quantitative electro encephalogram.

-Dr. Murali Krishna M.D. - USA

Monitor displaying EEG electrode positions and data

Q- EEG - ஐ ஏன் இந்த
ஆராய்ச்சிக்கு
தேர்ந்தெடுத்தார்கள்?

ECG இதய துடிப்பை
வரைகோட்டுப் படமாய்
பிடித்து காட்ட வல்லது.

Q- EEG என்பது வெறும்
கோடுகளோடு நில்லாமல்,
வண்ணப்படங்களாக மூளை
இயக்கத்தை வரைகோட்டுப்
படமாக பிடித்து காட்டும்.

இதனால் நுண்ணிய
மாற்றங்களைக் கூட எளிதாய்
வரையறை செய்து
விளக்கலாம். எனவேதான்
பரமஹம்சருக்கு Q- EEG - ஐ
தேர்ந்தெடுத்தார்கள்.

QEEG பரிசோதனை

QEEG என்று அழைக்கப்படும் வேதியல் பொருளை (die) பரமஹம்ஸர் மூளையில் பரிசோதனை செய்வதற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிரஞ்ச் மூலமாக பரமஹம்ஸர் தலைக்குள் செலுத்துகிறார்.

Scientist fitting EEG cap on Swami Nithyananda