ஞானகுருவிடமிருந்து முழுப்பலனைப் பெற...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ ஆன்மீகத்தை...
கற்றுக்கொள்வது சுலபம்.
கற்றுக்கொடுப்பது கடினம்.
காரணம், கற்றுக் கொள்பவன்
ஞானகுருவிடமிருந்து கற்றுக்கொள்ள
மனதளவில் தயாராக இருப்பான்.
ஆனால், ஒரு பக்தனுக்கு ஞானகுரு கற்றுக்
கொடுக்க முயற்சிக்கும்போது
பக்தனின் மனதை கற்றுக்கொள்ள
தயார்படுத்துவதிலேயே குருவின் நேரம்
வீணாகிவிடும்.
❖ கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு
நெய்யைத் தேடி அலைபவன் போல்,
உள்ளுக்குள் பேரின்பம் இருக்க

வெளியே சிற்றின்பத்தை மனிதன்
தேடி அலைந்தாலும்,
தேடுபவனிடம், 'மனிதா! நீ தேடுவது
உன்னிடம்தான் இருக்கிறது' என்று
எவ்வளவு நேரம் முயன்று புரியவைக்க
முயற்சித்தாலும், மனித மனது புரிந்துகொள்ள
முயற்சிப்பதைவிட, புரிந்துகொள்ள
முடியாததுபோல் நடிப்பதிலேயே
காலத்தை ஓட்டி விடும்.
மனிதனும் 'அப்பப்பா! ஞானகுரு
சொல்வதை எல்லாம் புரிந்து
கொள்வதற்கே - நாம் போன பிறவியில்
பெருந்தவம் செய்திருக்க வேண்டும்.
நம்மைப் போன்றவர்களுக்கு அவ்வளவு
பெரிய ஞான விஷயங்களைப் புரிந்து
கொள்வது கடினம்' என்று சொல்லி எளிதாக
தப்பிக்கவே முயற்சிப்பான்.
- மனம் போடும் தப்புத் தாளத்திற்கேற்ப ஆடிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை பலருக்கு கடைசிவரை தெரிவதே இல்லை.
- மனம்தான் ஆனந்தத்தை அடையும் வழியை புரிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது என்பதை புரிந்துகொண்டால், ஞானகுருவின் பணி எளிதாகிவிடும். சீடனாக மாறுவது மனோரீதியான மாற்றம்.
- ஒரு ஆஸ்ரமத்தில் தங்குவதால் மட்டுமே சீடனாகி விடமுடியாது.
- ஞானகுருக்களான சைதன்யர், இராமகிருஷ்ணர், இரமணரிடம் பல சீடர்கள் குடும்பஸ்தர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இவர்களின் திறந்த மனது ஞான குருவின்
வழிகாட்டுதலை அப்படியே ஏற்றுக் கொள்ளும்.
இது போன்றவர்களின் ஆன்மீக வளர்ச்சியும்
வேகமாக இருக்கும்.
❖ ஒரு ஞானகுருவிடமிருந்து முழுப் பலனைப் பெற விரும்பினால், மனதளவில் சீடனாக இருக்க வேண்டும். மற்றதை ஞானகுரு பார்த்துக் கொள்வார்.