KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/சரணாகதிSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

சரணாகதி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ என் உடலும் தியானத்திற்கு வளையாது,
என் மனமும் தியானத்தால் அடங்காது,
ஆனால் எனக்கு ஆன்மீகத்தில் முழு
நம்பிக்கை உண்டு - என்று சொல்லும்
மனிதனுக்கு சரணாகதிதான் எளிய வழி.

❖ ஆழ்ந்த அன்பும், நிறைந்த மரியாதையும்தான் சரணாகதிக்கு மிக மிகத் தேவையான அடிப்படை அம்சங்கள்.

❖ துக்கத்தைத் தாண்டி,
கவலையில்லாத ஆனந்த வாழ்விற்கு
துரிதமாக அழைத்துச் செல்லும்
ராக்கெட்தான் சரணாகதி.

❖ சரணாகதி வெறும் உதட்டிலிருந்து பிறக்கக் கூடாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாகப் பிறக்க வேண்டும்.

Side panel illustration
illustration

தெளிவென்னும் குழந்தை

❖ குழப்பத்தை நீங்கள் வெறுக்கத் தேவையில்லை; நீங்கள் வளருகிறீர்கள் என்பதற்கான அறிகுறிதான் குழப்பம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

❖ குழம்புவதில் தவறில்லை; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.

❖ நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்தவர்களைக் குழப்புவது அநியாயம்.

❖ இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.

❖ எது சரி - எது தவறு என்ற தெளிவை ஏற்படுத்தும் மனதின் செயல்முறைதான் குழப்பம்.

❖ மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை
படித்து, மனதில் தக்க வைத்துக் கொண்டாலே
குழப்பத்தைப் பாதி தூரம் ஓட்டிவிடலாம்.

❖ பிரச்சினை குழப்பத்தில் இல்லை,
குழப்பத்தை நீங்கள் அணுகும்
முறையில்தான் இருக்கின்றது.

❖ குழப்பமே குழம்புமளவுக்கு குழப்பத்தை
குழப்புவது, குழப்பத்தை குழப்பம்
இல்லாமல் எதிர்கொள்ளும் போதுதான்
சாத்தியம்.

❖ குழப்பத்தை முழுமையாக வரவேற்றுக்
கொள்ளுங்கள்.
குழப்பத்தின் உச்சிக்குச் சென்றாலும்
பயப்படாதீர்கள்.
குழப்பத்தைத் தாண்டிய அடுத்த நிமிடம்
தெளிவு கிடைத்துவிடும்.
இது சூட்சுமமான உண்மை.

Illustration
Mahavatar Babaji with flowers

தெளிவு பெற்ற ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்ளும் உண்மை.

❖ தெளிவு என்ற குழந்தையை நம்முள் பிறக்க வைக்க நாம் படும்பாடுதான் குழப்பம்.

❖ குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக் கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால் எத்துனைமுறை தெளிவைப் பிறக்கவிடாமல் கருவிலேயே கலைத்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

❖ குழப்பத்தை வரவேறுங்கள்!

நம் கட்டுப்பாட்டில் நாமில்லை... ஏன்?

❖ கிளர்ந்தெழுவதும்,
பொங்கியெழுவதும் முழுக்க முழுக்க
உங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால்
நீங்கள் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
இல்லாவிட்டால்...
கொந்தளிக்கும் உணர்ச்சிகள் அவை வாழ,
உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்
கொள்கின்றன என்று அர்த்தம்.

❖ கோபிப்பதும்,
ஆசைப்படுவதும்,
துக்கப்படுவதும்
பெரும்பாலும் நம் கையிலில்லை.
இப்படி நிகழ்வது ஏன்?

Maharishi Mahesh Yogi and flowers illustration

❖ ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வொரு விதமானவன்,
தனியானவன்.
இது நிகழ்வது எப்படி?

❖ தொடர்ந்து துன்புறுத்துபவர்கள்,
காரணமில்லாவிட்டாலும்
கவலைப்படுபவர்கள்,
தொட்டதுக்கெல்லாம் எரிச்சலடைபவர்கள்.
அப்படித் தொடர்வது எதனால்?

❖ ஏன்? எப்படி? எதனால்?
இந்த மூன்று கேள்விக்கும்
ஒரே பதில் - அதுதான் மனித சுபாவம்.

குழந்தைகளை வளரவிடுங்கள்

❖ குழந்தைகளை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் வளர்கிறார்கள்.

❖ 'வளர்க்கிறேன்' என்ற பெயரில் வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல், திசை திருப்பாமல் இருப்பதுதான் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.

❖ 'என் பிள்ளை' என்று உரிமை கொண்டாடி, குழந்தையை ஒரு உடைமையாக்குவதைவிட

  • என்னைத் தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு உயிர் என்று மதித்துப் பாருங்கள் - குழந்தை தெய்வமாகத் தெரியும்.

❖ வெறும் உணவு, உடை, பாதுகாப்பு கொடுத்துவிட்டு சில நேரங்களில்

திட்டுவதற்கும், சில நேரங்களில்
கொஞ்சுவதற்கும் பெயர் 'வளர்ப்பு' அல்ல.
இந்த உண்மை புரியவரும்போது குழந்தையை
வளர்க்க நீங்கள் வளர்ந்திருக்க வேண்டும்
என்பதும் புரிய வரும்.

❖ குழந்தையைத் தண்டிப்பது 100% தவறும் அல்ல. குழந்தைக்கு செல்லம் கொடுப்பது 100% சரியும் அல்ல.

❖ 'குழந்தையை வளர்க்கிறேன்' என்ற பெயரில் கெடுப்பது, 'இல்லை கெடுக்கக் கூடாது' என்ற பெயரில் வளர்க்கத் தவறுவது - இரண்டுமே 100% தவறு.

❖ முதலில், உங்கள் குணக் கோளாறுகளை கண்டுபிடித்து அதை எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பியுங்கள்.

❖ இரண்டாவது, ஒரு குழந்தைக்குச் சராசரி
பெற்றோர்கள் ‘வளர்க்கிறேன்’ என்ற பெயரில்
செய்யும் கெடுதல்களை தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தையை வளர்க்க நீங்கள் வளருங்கள்.
இரண்டுமே 100% சரி.

Illustration
illustration