KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/மனிதரின் நிஜமான நிலைSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

மனிதரின் நிஜமான நிலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ முழு யோக்கியனும் அரிது. முழு அயோக்கியனும் அரிது.

❖ 'நல்லவர்' என்ற சான்றிதழை
நாம் ஒருவருக்களிப்பது...
அவரின் அயோக்கியத்தனங்கள்
நமக்குத் தெரியாத வரைதான்.

❖ அதேபோல் 'கெட்டவர்' என்று
நாம் ஒருவரை சொல்வது...
அவரின் ஆத்மார்த்தமான குணங்கள் நமக்குத்
தெரியாத வரைதான்.

❖ நம்முடைய அபிப்பிராயங்களைக் கோலாகவும்,
தீர்ப்பைக் காலாகவும், மனத்தெளிவை
வெளிச்சமாகவும் வைத்து நடக்கும்...

இந்த 'பந்தபாசம்' என்னும் வாழ்க்கை
நாடகத்தை இனிதே நடத்த,
தீர்ப்பு என்னும்
கால்களை உதறுங்கள்!
அபிப்ராயங்கள் என்னும்
கோலைத் தூக்கி எறியுங்கள்!
மனக்கண் ஒளி பெற ஆரம்பிக்கும்.
நிஜம் நிஜமாகத் தெரியும்!

Illustration with a person seated and floral decorations