KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/கடவுள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

கடவுள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ கடவுளைக் காண முடியும்.
கடவுளை உணர முடியும்.
கடவுளை அனுபவிக்க முடியும்! - நீங்கள்
கடவுளான மறுநிமிடமே!

❖ கடவுள் என்றால் கட + உள்.
எல்லாவற்றையும் கடந்து விட்டால்
உள்ளேயிருப்பது கடவுளைத் தவிர
வேறெதுவும் இல்லை.

❖ கடவுளாகவே மனிதன் மாறும்வரை...
கடவுளை மனிதனால்
கற்பனை செய்ய முடியாது.
கடவுளை
அதிசய அமானுஷ்ய

சக்திகளின் தொகுப்பாகவே
மட்டுமே மனிதனால்
கற்பனை செய்ய முடியும்.

❖ கடவுளை மனிதனால்
புரிந்து கொள்ளவே முடியாது.
கடவுளை கடவுளால்தான்
புரிந்து கொள்ள முடியும்.
எனவே, கடவுளாகுங்கள்!

வாழும் ஞானிகளே சாட்சி

❖ 'ஏன் பிறந்தோம்?' என்ற கேள்வி உணர்வுப்
பூர்வமாக உள்ளத்திலிருந்து எழுவதுதான்,
உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்
அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதி.

❖ மனிதன் ஏன் பிறப்பெடுத்தான் என்பதற்கு
ரிஷிகள் சொல்லும் பதில்,
'நிலையான,
நிம்மதியான,
எதனாலும்,
எப்போதும் ஆனந்தத்தை (முழு சுகத்தை)
அடைய வேண்டும் என்பதுதான்
மனிதப் பிறப்பின் அடிப்படை நோக்கம்'.
மேலும் 'ஆனந்தத்தில் லயித்திருந்த நாம்
நமக்கே ஆரம்பித்து வைத்த கண்கட்டு

விளையாட்டுதான் மனித பிறப்பு.
இந்த ஒரு உண்மை மட்டும் உங்களுக்குப்
புரிந்துவிட்டால், விளையாட்டு
சுவராஸ்யமாகிவிடும்' என்கிறார்கள்.
இந்தக் கூற்றுகள் உண்மை என்பதற்கு
வாழும் ஞானிகளே சாட்சி.
இதுபோன்ற சத்யங்கள்
மனிதனுக்குத் தெரிந்தாலும்,
தெரியாவிட்டாலும்
சுகம்,
திருப்தி,
சமாதானம்,
நிம்மதி
என்று மனிதன் தேடுவது எல்லாமே இந்த
நித்யமான ஆனந்தத்தைத்தான். இதுதான்
மனிதனின் உச்சபட்ச குறிக்கோள்.
இதை அடையத்தான் மனிதன் பிறந்தான்.

Illustration
illustration with figure and decorations

❖ மனிதன் தேடுவது
மனிதனுக்கு வெளியே இல்லை.
அது மனிதனுக்குள்ளேயேதான் இருக்கிறது.

❖ உங்கள் பிறப்பின் நோக்கமான ஆனந்தத்தை
அடைய செயல்படுங்கள்.
ஒரு நிமிடம்கூட வீணாக்காதீர்கள்.

பித்தன் புத்தனாகும் நேரம்

❖ ஜனனத்திற்கும்,
மரணத்திற்கும் இடையில்தான்
எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது.
இருக்கிறது. அப்புறம் இல்லை.

❖ மனிதன் மரணிக்கும்போது...
உடல் இறக்கிறது.
மனம் தன் கதையைத் தொடர்கிறது.
மீண்டும் ஜனனம்!
மீண்டும் மரணம்!

❖ சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்கு
உடலை எரித்தாலும்,
சாகாத மனம் சாக வேண்டும்.
இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம்.

இந்த சுபநிகழ்வு நிகழும்போதுதான்
மனிதன் தெய்வமாகின்றான்.
பித்தன் புத்தனாகின்றான்.

❖ மனம் உயிரோடிருக்கும்வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல்முறையாக நிஜமாய் நீங்கள் பிறக்கிறீர்கள்.

ஞானமடைதல்

❖ ஞானமடைய, சொடுக்கிடும் நேரத்தைவிட
குறைவான நேரத்தையே இறைசக்தி
எடுத்துக் கொள்ளும்.
99.0°C-ல் இருக்கும் நீர் 100°C-ல்
நீராவியாக மாற எவ்வளவு நேரம்
எடுத்துக் கொள்ளுமோ, அவ்வளவு
நேரம்தான் திடமான மனம்
கரைய எடுத்துக் கொள்ளும்.

❖ ஆனால் சாதாரண நீர் 99.9°C அடைய
எவ்வளவு நேரமாகும்.
அதற்கு எவ்வளவு வெப்பமும், சக்தியும்,
முயற்சியும் தேவைப்படும்.
ஒரு வேளை நீர் பனிக்கட்டியாக உறைந்து
போயிருந்தால்...

Illustration with floral decoration, meditating figure, and star containing 119
Maharishi

❖ பலர் மனம் பனிக்கட்டிதான்.

❖ உங்களுக்குள் உஷ்ணம் உருவாக்கப்பட வேண்டும்.

❖ உழைக்க ஆரம்பியுங்கள்...
நெருப்பு பற்றிக்கொண்டால்,
அடுத்த நிமிடமே காணாமல் போகும்
கற்பூரக்கட்டியைபோல
மனம் காணாமல் போகும்
அற்புதம் நிகழும்.