மீண்டும் மீண்டும் வரும் மீளாதுன்பங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ ரசகுல்லா என்ன ஒரு அருமையான சுவை.
- ஒன்றைச் சுவைத்தால் எவ்வளவு சந்தோஷம்! இரண்டு... மூன்று!!... நான்கு?... ஏழு, எட்டு சுவைக்க எவ்வளவு மயக்கம்? தலைச்சுற்றல்? எவ்வளவு கஷ்டம்?
❖ அனுபவி! அனுபவித்தே ஆகவேண்டும்!
- என்ற 'வெறி' அனுபவிக்கும்வரை இருக்கிறது. நினைத்தது, நினைத்த அளவுக்கு நடக்கவில்லை என்றால் உடலே சிறிது நடுங்குகிறது, வியர்க்கிறது. இவ்வளவு கொள்ளை ஆசை, அனுபவித்த பின் எங்கே போனது? அடுத்த நிமிடம் வெறி சலிப்பாகிவிட்டதே! அதுவரை ஈர்த்தது. இப்போது ஈர்க்கவில்லையே ஏன்?
❖ மனிதன் மீண்டும், மீண்டும் கஷ்டத்திற்குள்ளாவதும், துன்பமடைவதும் எதனால்? இவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது சாத்தியமா?
பதில் : நிச்சயம் சாத்தியமே.
எப்படி? அடுத்த பக்கம் புரட்டுங்கள் பதில் காத்திருக்கிறது உங்களுக்காக.


தரங்குறைந்த மனதின் செயல்
❖ தரங்குறைந்த மனம்தான் -
உணர்ச்சி வேகத்தில் உசுப்பப்படும்.
ஊர் பேச்சு கேட்டு ஆடும்.
தவறைக்கூட சரியென சொல்லும்.
சரியானதைக்கூட தவறென வாதிடும்.
❖ எனவே, மனிதர்களைத் தரம் பிரித்துப் பார்ப்பது தரங்குறைந்த மனதின் செயல்.
❖ மனிதத் தரம் உயரும்வரை தரம் பிரித்தல் ஒரு தொடர் கதை.
❖ தரமான மனிதனால் தரம் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு அவசியமும் இருக்காது.
❖ சரியை சரியாய் புகழ்வதும்
தவறைக்கூட சரியாய்
புரிய வைப்பதும்
நடுநிலையாய் வாழத்தெரிந்தவனுக்கே சொந்தம்.
❖ எதிரியையே நண்பனாக்கும் வல்லமை
சரியான அன்பிற்கு உண்டு.
நண்பனையே எதிரியாக்கும் வல்லமை
தவறான அன்பிற்கு உண்டு.
உண்மையான அன்பு 'சரி தவறுக்கு'
அப்பாற்பட்டது.
❖ அன்பு என்ற பெயரில் மனிதன் நிகழ்த்தும் பாச நாடகம் 'சரி தவறுக்கு' உட்பட்டது.

வருந்துவதைவிட திருந்துவதே ஞானம்
❖ ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் எப்படிக் குற்றம் கண்டு பிடித்துத் திட்டுகிறீர்களோ, அதேபோல்தான் ஆழ்மனதில் நீங்கள் அதே தவறு செய்யும்போது உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்.
❖ தவறு கண்டு பிடித்துக் கொண்டேயிருப்பது
தவறான செயல்.
நம்முடைய பழைய தவறுகளைக் கிளறிக் கிளறி
அதற்காக இன்றும் நோவது மடச்செயல்.
❖ தவற்றைப் பற்றிச் சரியாக விளக்கும்
ஒரு ஜென் கூற்று.
'தெரிந்து கொள்! புரிந்து கொள்!
நீ தவறு செய்யப் பிறந்தவன்.
தொடர்ந்தல்ல!'
ஆம்! மனிதன் தன் வாழ்வில் தவறு செய்வதை தவிர்க்கவே முடியாது. காரணம் செய்வது என்பது எது தவறு எது சரி? என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் ஒரு வாழ்வியல் வழிமுறை. ஆனால், ஒருமுறை செய்த தவறைக் கண்டிப்பாக திரும்பச் செய்யக் கூடாது. செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்யாதிருக்கத்தான் இறைவன் ‘புத்தி’ என்ற ஒரு விஷயத்தை மனிதனுக்குப் பரிசளித்திருக்கிறான்.
❖ செய்த தவறுகளுக்காக வருந்துவது
துவக்கத்தில் சரி.
தவறுக்காக வருந்திக் கொண்டேயிருப்பது
தவறு. தவறுக்காக வருந்துவதைவிட,
திருந்துவது புத்திசாலித்தனம்.

❖ தவறு என்று நாம் கண்டு கொண்டதை திரும்பச் செய்யாதிருக்க வேண்டுமானால் கொஞ்சம் கவனத்தை நம்முள் கொண்டு வந்தால் நிச்சயம் சாத்தியமே.
தவறுக்காக
வருந்துவதை விட
திருந்துவதுதான் நம் அகத்துக்கு மருந்து.
இது வாழ்க்கை சுகத்துக்கு ஓர் எளிய வழி.
நீங்களும் கடவுளாகலாம்
❖ நீங்கள் யாராக இருந்தாலும் சரி,
உங்களாலும் கடவுளாக முடியும்.
கடவுளை உணர முடியும்.
❖ ஆனால்,
கடவுள் என்று
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்
கடவுளாக மாற நிச்சயமாக முடியாது.
உங்கள் நினைவுக்கும், மனதிற்கும்
அப்பாற்பட்ட ஒரு நிலைதான்
கடவுள்தன்மை.
❖ கடவுள் என்று
நீங்கள் நினைப்பதெல்லாம்
கடவுளைப் பற்றிய
உங்கள் மனக்கருத்துக்களும்,
அதீத கற்பனைகளும்தான்.


❖ மனித மனதால் கடவுளை கற்பனை செய்ய
முடியாது.
அப்படிக் கற்பனை செய்ய முடிந்தால் அது
கடவுளாக இருக்க முடியாது.
❖ நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க
வேண்டிய அவசியமில்லை. நீங்கள்
கடவுளாக மாற இந்தப் பிறவியே
போதுமானது.
❖ கடவுளைப் பற்றிய கருத்துக்களைக் கடந்து கடவுளைக் கண்டு கொள்ளுங்கள். நீங்களும் கடவுளாக முடியும். அதற்கு முதல் படி, 'நான் ஏன் கடவுளாகக் கூடாது' என்ற கேள்வியை முழு உணர்வோடு கேளுங்கள். வழி பிறந்து விட்டது.
எது ஞானம்?
❖ பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு:
- விஷய ஞானம் அதாவது அறிவு.
- அனுபவ ஞானம் அதாவது அனுபவம். உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது.
அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.
❖ வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.

- அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால் ஓர் உண்மை தெரியவரும்.
- அது பெரும்பாலான உலக அறிவுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று!
- வாழ்க்கைப் பாடங்களை முழுமையாக புரிந்துக் கொள்வதே பூரண ஞானம்.
- அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி நகருங்கள்!