KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/ஓடு! ஆடு! அனுபவி!Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

ஓடு! ஆடு! அனுபவி!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ எதுவாக இருந்தாலும் அது நிலையாக நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று நாம் ஏன் விரும்புகிறோம்? இந்த ஒரு கேள்வி உள்ளே எழுந்தால் போதும். அதுவே நித்யானந்தத்திற்கு அழைத்துச் செல்லும்.

❖ மனிதன் சந்தோஷத்திற்காகவும்,
தற்காலிகச் சுகத்திற்காகவும் அலைவது,
கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக இருக்கும்போது
கையேந்தி பிச்சையெடுப்பதற்குச் சமம்.

❖ மித்யானந்தம் - சிற்றின்பம், நித்யானந்தம் - பேரின்பம்

❖ நித்ய ஆனந்தம் உள்ளே இருப்பது மறந்து
போனதால்தான், நித்ய ஆனந்தத்தை வெளியே
தேடித் தேடி மரத்துப் போகிறான் மனிதன்.
பின் மரித்துப் போகிறான்.

❖ எந்த ஒரு சுகமாக இருந்தாலும்,
அந்த சுகம் அடைந்து முடிந்த பிறகு
அனுபவித்த திருப்தி முழுமையாகக்
கிடைப்பதில்லை.

காரணம் என்ன?

❖ அனுபவிப்பதை அடையும்வரை இருந்த
ஆர்வம்! அடைந்து அனுபவித்த பிறகு
மாயமாய் மறைந்து போகிறதே! ஏன்?

மனிதன் விரும்பும்போதெல்லாம்,
விரும்பிய அளவு சுகத்தை அனுபவிக்க
வழி ஏதும் இருக்கிறதா? இவைகள்தான் இன்றைய
மருத்துவ ஆராய்ச்சியை ஆன்மீகம் நோக்கி
திருப்பியிருக்கும் வெகு பொது ஜன
எதிர்பார்ப்புகள்.

Illustration

❖ மனிதன் இப்படி எதிர்பார்ப்பதின்
மூலகாரணம்தான் என்ன?
அது எங்கேயிருக்கிறது?

இதற்கு ஒரு அருமையான ஜென் கூற்று
பதில் சொல்கிறது;
‘முடிந்தவரை ஓடு!
விடியும்வரை ஆடு!
ஆசை தீர அனுபவி!’ -
தவறே இல்லை.
அப்பொழுதாவது உனக்குத் தெரியட்டும்!
நீ தேடுவது வெளியே இல்லை என்று...

சந்தோஷத்தை மறைப்பது...

❖ நியாயம், அநியாயம் என்பது மனிதநேயத்தின்
அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட
வேண்டியது.

❖ ஆனால் வழக்கில் நியாயம், அநியாயம் பற்றி
நிலவும் கருத்துக்கள் வேடிக்கையானது.
இது பற்றுதலை அடிப்படையாகக் கொண்டது...
அதாவது...
நியாயம் - தனக்கு சாதகமாக நடக்கும்
எல்லாமே நியாயமான விஷயங்கள்தான்.
அநியாயம் - தனக்கு சாதகமாக நடக்காத
எல்லாமே அநியாயமான விஷயங்கள்தான்.

❖ 'மருமகள் உடைத்தால் பொன் சட்டி, மாமியார் உடைத்தால் மண் சட்டி'

  • இந்தப் பழமொழி நியாயம், அநியாயம் பற்றிய கருத்து தலைகீழாக மாறிய பின்தான் சமுதாயத்தில் நுழைந்திருக்கிறது.

❖ இப்படி தனக்கொரு சட்டம், ஊருக்கொரு சட்டம் என்று வாழ்பவர்களால் வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் 'பாசம் கண்ணை மறைத்து விட்டது' என்று கூறி தப்பிக்கலாம்.

❖ உண்மையில் பாசம் கண்ணை
மறைப்பதில்லை. பற்றுதல்தான்
கண்ணை மறைக்கிறது.

❖ அது கண்ணை மாத்திரம் மறைப்பதில்லை. சந்தோஷத்தையும் சேர்த்து மறைத்து விடுகிறது.

❖ பற்றைப் பற்றுவதை நிறுத்துங்கள்,
சந்தோஷம் சந்தடியில்லாமல் உங்களுக்குள்
வந்து வெளி செல்லும்.

அன்னை ஸ்ரீ அன்னை மற்றும் மலர் அலங்காரம்