திண்டாட்டமில்லா தூய நிலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ நாடாளும் பலம் பெறுவதாலோ,
பணம் குவிந்து விட்டதாலோ
கொண்டாட்டம் பிறந்துவிடாது.
தன்னை ஆளும் பலம் பெறுவதாலும்,
உள்ளத்தை ஆனந்தமாய் அனுபவிக்கும்
குணம், பக்குவம் உருவாக்குவதாலும்தான்
கொண்டாட்டம் பிறக்கும்.
❖ திண்டாட்ட உணர்வுதான், உங்களுக்கும் கொண்டாட்டத்திற்கும் நடுவில் தடைச் சுவராய் இருக்கிறதென உங்களுக்குத் தெரியுமா?
❖ கிருஷ்ண, புத்த நிலையில் இருப்பவனை எந்தவொரு திண்டாட்டமும் அசைக்க முடியாது. காரணம் திண்டாட்ட உணர்வை உதறியெறிந்துவிட்ட தூய நிலைதான்!
❖ திண்டாட்ட உணர்வென்னும் நோய்
ஒருவனைப் பிடித்திருக்கும்வரை
அவன் கண்ணுக்குத் திண்டாட்டங்கள்
மட்டுமே தெரியும்.
❖ கொண்டாட்ட உணர்வு ஒருவனுள்
உதமாகி விட்டால் அவனுடைய கண்களுக்கு
எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.

