KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பவைSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

மனிதனை துன்பத்தில் மூழ்கடிப்பவை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ ஆட்டிவிடப்பட்ட பெண்டுலம் தொடர்ந்து இரண்டு பக்கமும் அலைந்து கொண்டே இருக்கும். வலப்பக்கம் நகர்ந்த பெண்டுலம் வலது முனையை அடைந்த அடுத்த நொடியே இடது முனை நோக்கி நகர ஆரம்பித்துவிடும்.

❖ ஆசை என்ற உந்துதலால் தள்ளப்பட்ட மனமும்
‘வெறி’ அல்லது ‘வெறுப்பு’ இந்த இரண்டில்
ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொள்ளும்.

❖ சில நேரம் வெறி... சில நேரம் வெறுப்பு...

  • என்ற கணக்கில்தான் பலரின் மொத்த வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது.

❖ கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே சமுதாயத்தின் சில அம்சங்களில் வெறியாக இருப்பது, வேறு சிலவற்றை வெறுப்பது என்பது பரவலாகிப்போன பரிதாபம்.

❖ பாசமும், பகையும்...
சில நேரங்களில் வெறியாகவும்,
சில நேரங்களில் வெறுப்பாகவும்
வெளிப்படுகிறது.
அது மதம் மீதான வெறியாகவோ
வெறுப்பாகவோ வெளிப்படுகிறது.
காமம் மீதான வெறியாகவோ, வெறுப்பாகவோ,
பேர், புகழ் போன்றவற்றின் மீதான
வெறியாகவோ, வெறுப்பாகவோ
இப்படி மனித மனம் வெறி அல்லது
வெறுப்பைப் பற்றிக் கொண்டு, மனிதனை
படாதபாடு பட வைக்கிறது.

❖ நீதிநெறிகளை
தங்களுக்கு சாதகமாக்கி
சிலவற்றை வெறுப்பதும்,
நீதி நெறிகளை
தங்கள் மனவெறிக்காக மீறுவதும் -
இரண்டுமே மனிதனை துன்பத்தில் மூழ்க
வைத்துவிடும்.

Illustration
இடது பக்க அலங்காரப் படம் - 30