KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/சிற்றின்பம் பேரின்பம்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

சிற்றின்பம் பேரின்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ இன்பம் என்பது வெளிப்பொருட்களை சார்ந்ததல்ல. அது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. ஆனால் மனிதர்கள் வெளிப் பொருட்கள் சம்பந்தப்பட்டதாகதான் இன்பத்தைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவைதான் சிற்றின்பங்கள்.

❖ திகட்டாத, குறையாத ஆனந்தத்தை தராத எல்லாமே சிற்றின்பங்கள்தான்.

❖ ஆனந்தத்தை அளிப்பது பேரின்பம். ஆனந்தத்தை அழிப்பது சிற்றின்பம்.

❖ மனம் சிற்றின்பங்களைத்தான் பெரிதும் விரும்பும். காரணம், ஒரே ஒருமுறை பேரின்பத்தை ருசித்தால் போதும், மனம் அழிந்து விடும்.

❖ தன் தற்காப்புக்காக, மனமானது மனிதனை
சிற்றின்பங்களைக் காட்டித்தான் அனுபவி!
அனுபவி! என்று தூண்டும்.

❖ ஆகவே, அனுபவிக்க நினைப்பதையெல்லாம்
அனுபவி, அப்புறமாவது அவை திருப்தியையும்
ஆனந்தத்தையும் தராது எனப் புரிந்துகொள்.

❖ பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுக்காக,
சின்னச் சின்ன சந்தோஷ மலர்களை சூடி
வரும் வாழ்வென்னும் அழகுக் குழந்தையைத்
தண்டிக்காதீர்கள்.
எதிர்ப்புகளைத் தாண்டி ஆழ அனுபவித்து
வாழ்பவர்... சின்னச் சின்ன நிகழ்வுகளிலேயே
பேரின்பத்தில் மூழ்கிப் போவார்.

❖

Illustration
  • அப்படி வாழத் தெரியாதவருக்கு பெரிய பெரிய நிகழ்வுகள்கூட சிற்றின்பம் வரைதான் கூட்டிச் செல்லும்.