KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/அசுரனுக்கு பிறந்த குழந்தைகள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

அசுரனுக்கு பிறந்த குழந்தைகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ நன்றாக இருந்தால் வேரோடு பிடுங்குவது!
இல்லை என்றால் காரித்துப்புவது! வெறுத்து
ஒதுக்குவது!
இது மனதின் முக்கியமான குணங்களில் ஒன்று.

❖ வெறியும் வெறுப்பும் மனதின் கறுப்பு பக்கங்கள்.

❖ மற்றவரை ஏமாற்றி தான் ஏமாறுவது வெறி.
தன்னை ஏமாற்றி மற்றவரை ஏமாற்றுவது
வெறுப்பு.

❖ வாழத்தெரிந்தவன் எதையும் வெறுக்க மாட்டான். வாழத் தெரியாதவன் எதன் மீதும் வெறிகொள்வான் - வெகு எளிதாக!

❖ வெறிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.

இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
வரலாம். எதன் மீதும் ஏற்படலாம். காரணம்,
இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த
குழந்தைகள்.

❖ ஆசை ஓயாதவரை வெறியும், வெறுப்பும் உங்களை உலுக்கும்.

இறை உருவம் மற்றும் அலங்காரங்கள்
இடப்பக்க விளக்கப்படம்