Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
நம்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ உடலையும், மனத்தையும் பிளவுப்படுத்துவது அகங்காரம்.
❖ மனதில் வெளிப்படுத்த நினைப்பவற்றை
உடல் பாவனைகள் மூலமாக
முழுமையாக மனிதன்
வெளிப்படுத்துவதேயில்லை.
❖ மனிதனின் எல்லா பாவனைகளுமே,
அவரின் அகங்காரம் கலந்தே
வெளிப்படுகிறது.
❖ நினைத்ததை நினைத்த மாதிரியே
வெளிப்படுத்த முடியாமையே,
நம்மை மற்றவர்கள் தவறாகப் புரிந்து
கொள்வதற்கு வித்திடுகிறது.
நம் வாழ்வில் நெருக்கடியையும்,
எரிச்சலையும் நாம் உணரும் ஒவ்வொரு
நிமிடங்களும் இதுபோன்ற தருணங்கள்தாம்.
❖ ரெடிமேடான வசனங்களோ,
புத்திசாலித்தனமோ இல்லாத
நெருக்கடியான சூழ்நிலைகளில்
நம் சுயரூபம் நம்மையும் மீறி
நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டு
விடுகிறது.

