KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/நீ கண்ணால் பார்ப்பதில்லை...Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

நீ கண்ணால் பார்ப்பதில்லை...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ உங்களுக்கு...
யார் சொன்னது?
வாழ்வு துக்ககரமானதென்று.
யார் சொல்ல முடியும்?
வாழ்வு ஆனந்தமயமானதென்று.
இரண்டையுமே உங்களுக்கு நீங்கள்தான்
சொல்ல வேண்டும்.

❖ உங்களை அழிப்பது, உங்களைக் காப்பது இரண்டுமே உங்களுக்கு நீங்கள் செய்வதைவிட வேறு யாரும் அதிகமாகச் செய்துவிட முடியாது.

❖ 'நான் இப்படிப்பட்டவன்' 'எனக்குப் பிடித்தது... பிடிக்காதது' ‘என்னைப் பொறுத்தவரையில்’

  • இதுபோன்ற கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் உங்களுக்கு தெளிவாய் தரும் மனத்தின் ஒரு அம்சத்திற்கு பெயர்தான் பர்ஸனாலிட்டி (Personality).

❖ கண்கள் வழியாய் எதையும் நீங்கள் பார்ப்பதில்லை. உங்களின் பர்ஸனாலிட்டி வழியாகத்தான் எல்லாவற்றையும், பார்க்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள். அதனால் ஒருவருடைய கருத்தைப்போல் இன்னொருவர் கருத்து இருப்பதில்லை. காரணம் பர்ஸனாலிட்டி என்பது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது.

❖ Personality-ல் இருந்து Individuality-க்கு உங்களை நகரச் செய்வதே ஆன்மீகம். நகருங்கள், ஆனந்தத்துக்குள் நகர ஆரம்பிப்பீர்கள்.

illustration