நிஜ சுற்றுலா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ 'நம் உள்ளே...
ஏழு கடல் -
ஏழு மலை -
ஏழு வானம் -
இருக்கின்றது'
என சொல்லப்படுவது
பொய்யல்ல, மெய்.
மெய்யைத் தாண்டிய
மெய் உணர்வு நிலையில்...
இவையும் இவை தாண்டியவையும்
நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது.
உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப்
பயணம் செய்து பார்க்காத வரை,இவையெல்லாம்
பொய்யாகத்தான் தோன்றும்.
மனம் நம்ப அனுமதிக்காது.
❖ 'ஒரு முறையாவது
உங்களோடு நீங்களே
இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா?'
'என்னக் கேள்வி இது?
இக்கேள்வியே வினோதமானது'
என்றெண்ணுபவர்கள் வாழ்க்கையின்
அர்த்தத்தை ஒரே ஒருமுறை கூட
அனுபவிக்காத அப்பாவிகள்.
❖ உள்ளே செல்லும் ஒரே ஒரு சுற்றுலா,
வெளியே செல்லும் ஓராயிரம்
சுற்றுலாக்கள் தரும் சந்தோஷ திருப்தியைவிட
பல நூறு மடங்கு அதிகமான சந்தோஷத்
திருப்தியைத் தரும்.
❖ கண்ணை மூடிப் பாருங்கள்...
சுற்றுலாத் தலம் தெரியும்...
தைரியமாய் செல்லுங்கள்...
பரவச களம் தொடுவீர்கள்...

தியானம் உள்ளே ஒரு சினிமா!
❖ தியானம் செய்ய...
‘உங்களுக்குள்ளே இருக்கும் சலனமற்ற
உணர்வு நோக்கி ஊடுருவுங்கள்' இதைப்
புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தால்...
ஒரு பார்வையாளனாக மாத்திரம் உங்கள்
எண்ணங்களை, மனதைப் பார்க்க முதலில்
கற்றுக் கொள்ளுங்கள்.
❖ இதை இன்னும் எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம். சினிமாவை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... சினிமாவில் உங்களுக்கு பிடித்தக் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கிறதென்பதற்காக அதே காட்சிகள் தொடர்ந்து வராது.
❖ அதேபோல் உங்களுக்குப் பிடிக்காத காட்சி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சினிமாவில் காட்சிகளை அந்த நேரம் தடுக்க முடியாது. இந்தப் படம் சரியில்லை, சலிப்பைத் தருகிறது என்பதற்காக அந்த நிமிடமே புது சினிமாவை அங்கே திரையிட முடியுமா? முடியாது. சினிமாவில் என்ன வந்தாலும் வரட்டும் என்று ஒரு மூன்று மணி நேரம் உட்கார்ந்து வெறுமனே பார்த்து விட்டுத்தான் வருவீர்கள். அதே காரியத்தை தியானத்திலும் செய்யுங்கள். வெறுமனே பாருங்கள். சாட்சி மாத்திரமாக பாருங்கள். 30 நிமிடம் உள்ளே ஒரு சினிமா பாருங்கள்.

❖ ஒருவேளை வந்த எண்ணங்கள் உங்களுக்குப்
பிடிக்கவில்லை என்பதற்காக, அந்த
எண்ணங்களை, காட்சிகளை நிறுத்த வேண்டாம்.
❖ வந்த எண்ணங்கள் உங்களுக்கு பிடித்த
எண்ணங்கள் என்பதற்காக, அந்த எண்ணங்களை,
காட்சிகளைத் தொடர வேண்டாம்.
❖ புதிதாக எந்த ஒரு எண்ணத்தையோ, காட்சியையே உருவாக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வளவுதான்.
❖ இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தால்
சாட்சி மாத்திரமாகப் பார்ப்பது சுலபம்.
தியானத்தில் நன்றாக ஈடுபட முடியும்.
தியானித்துப் பாருங்கள்.
பிரச்சினை யாரிடம்?
❖ அடிப்படையில், அருமையான குணம்
கொண்ட மக்கள் மற்றவர்களையும்
அருமையானவர்களாகவே கருதுவார்கள்.
❖ 'அருமையானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும் அருமையான குணங்களைத் தேடித் தேடி கண்டுபிடித்து சந்தோஷமடைகிறார்கள்.
❖ நல்ல நட்புறவோடு இருக்கிறார்கள்.
❖ 'மோசமானவர்கள்' மற்றவர்களிடம் இருக்கும்
மோசமான குணங்களைத் தேடிக் கண்டுபிடித்து
நொந்து போகிறார்கள். நல்ல உறவுகளையும்
கெடுத்துக் கொள்கிறார்கள்.
❖ ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிறம் உண்டு.

பார்க்கும் பொருள் எல்லாம் பச்சையாகத் தெரிகிறது என்றால், பிரச்சினை பொருளிடமா? பார்ப்பவரிடமா? பிரச்சினை பார்ப்பவரிடம்தான். அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடிதான் பிரச்சினை. இந்த பச்சைக் கண்ணாடிதான் உங்கள் பர்ஸனாலிட்டி.
❖ உங்களின் பர்ஸனாலிட்டி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் மற்றவர்களையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
❖ பார்க்கும் பொருட்கள் எல்லாம் பச்சையாகத் தெரிந்தால் - அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடிதான் பச்சையாக இருக்க முடியும். பொருட்கள் அல்ல.
❖ அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் ஏதோ ஒரு வகையில் தவறானவர்களாக, சரியில்லாதவர்களாக உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய பர்ஸனாலிட்டியில்தான் பிரச்சினை. மற்றவர்களிடமல்ல.
❖ பர்ஸனாலிட்டி சரியாகிவிட்டால், மற்றவர்களை அவரவர் குணங்களின்படி தவறாக எடை போடாமல் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

