செயல் சிறியது... பலன் பெரியது!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ பணி நிமித்தமாக,
படிப்பு நிமித்தமாக,
வாய்ப்பு நிமித்தமாக,
உதவி நிமித்தமாக
நாம் எல்லோரும் பலமுறை பலரிடம் பவ்யமான
இனிமையான உடல் மொழிகளை
வெளிப்படுத்திதான் நம் காரியங்களை
சாதித்திருப்போம்.
❖ சாதாரண காரியத்திற்காக,
யாரோ ஒருவருக்காக,
நம்மையும் நம் பாவனைகளையும் இவ்வளவு
தூரம் மாற்றி வளைக்க முடியும்போது - நாம்
முழுமையாக நேசிக்கும் நம்முடைய சில
உறவுகளுக்காக நம்மை நாம் ஏன் மாற்றிக்
கொள்ளக் கூடாது?.
❖ இதுவரை நமக்கு நெருங்கியவரிடம் உடல் மொழியால் உண்மையான பவ்யத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இனியாவது வெளிப்படுத்தலாம். இந்த சிறு செயலால் உங்களுக்கு கிடைக்கப்போகும் பலன் மிக மிகப் பெரியது.
❖ நம் உடல் மொழியில் இனிமையைச் சேர்த்து மற்றவரையும் இன்புற வைப்பதென்பது பெரிய கம்ப சூத்திரமில்லை. 'உடல் மொழியில்' - மனித உறவிலும், அன்பின் பூரணத்துவத்திலும், திருப்தியிலும் எவ்வளவு பங்கு வகிக்கின்றது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, 'உடல் மொழி' இனிமைகளைச் சேருங்கள். அதுபோதும். சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் ஆனந்த சூத்திரம் புரிந்து விடும்.
