பொருளடக்கம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பகுதி - 1
பக்கம்
- 0.000 புத்திசாலித்தனம்
- 0.000 முட்டாள்தனம்
- ருசித்தல்
- இளைஞா! இளைஞா!
- உங்கள் உலகம்
- சாதிக்கும் சக்தி பெற...
- உள் சுதந்திரத்தின் அளவை அதிகரியுங்கள்
- விழித்துக்கொள்ளுங்கள்
- அன்பு மலர... நீங்கள் வளர...
- இயற்கையளிக்கும் பரிசுகள்...

11. வயப்படாததையும் வயப்பட
வைக்கும் வசியக்கலை
12. வாழ்க்கையை அனுபவியுங்கள்
13. நீங்கள் வாழக்
கற்றுக்கொள்வதற்காக...
14. தெரிந்துகொள்ள வேண்டிய
தெரியாதவைகள்
15. தவறுகள் தவறட்டும்
16. சாதனையைப் பகுப்பாய்வு
செய்யுங்கள்
17. செயல் சிறியது... பலன்
பெரியது!
18. நிஜச் சுற்றுலா
19. தியானம் உள்ளே ஒரு சினிமா
- பிரச்சினை யாரிடம்?
- நம்மை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள காரணமாயிருப்பது எது?
- நீ கண்ணால் பார்ப்பதில்லை...
- இது முடிவுக்கு வரவேண்டியது
- மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்
- ஆனந்தம் நோக்கிய பயணம் இனிதே தொடர...
- இது தெரியுமா?
- அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்
- சிற்றின்பம் பேரின்பம்

29. மனிதனை துன்பத்தில்
மூழ்கடிப்பவை
30. திண்டாட்டமில்லா தூய நிலை
31. ஓடு! ஆடு! அனுபவி!
32. சந்தோஷத்தை மறைப்பது...
33. மீண்டும் மீண்டும் வரும்
மீளாத்துன்பங்கள்
34. தரங்குறைந்த மனதின் செயல்
35. வருந்துவதைவிட திருந்துவதே
ஞானம்
36. நீங்களும் கடவுளாகலாம்
37. எது ஞானம்?
38. ஞானகுருவிடமிருந்து
முழுப்பலனைப் பெற...
39. சரணாகதி
40. தெளிவென்னும் குழந்தை
41. நம் கட்டுப்பாட்டில் நாமில்லை...
ஏன்?
42. குழந்தைகளை வளரவிடுங்கள்
43. மனிதரின் நிஜமான நிலை
44. கடவுள்
45. வாழும் ஞானிகளே சாட்சி
46. பித்தன் புத்தனாகும நேரம்
47. ஞானமடைதல்
48. துடிப்புகள் பலவிதம்
49. வாழ்க்கையை ஜெயித்துக்
காட்டுங்கள்!
50. அருமையான உலகத்தை
உருவாக்கலாம் வாங்க!
51. வாழ்வும் கனவும்
52. தேனிலவு
53. எது கலை?
54. கலைத்துவத்தின் முக்கியத்துவம்
55. அதிசயம், ஆச்சரியம், சாதனை
56. உள்ளுலக விசா
57. கர்வத்தைவிட காரமானது...
58. மனச்சோர்வின் மாபாதகங்கள்
59. பாதகத்தை சாதகமாக்கும்
துணிச்சல்
60. வெற்றிக்கான முதலீடு
61. முதிர்ச்சி பெறும் வழி 62. வாழ்க்கையின் ஆசான்கள்
63. லீலை
64. பிறப்பும் இறப்பும்
65. உன் நாடகம் முடியும்போது...
66. இறைவனால் கூட காப்பாற்ற
முடியாது.
67. சலிப்பை களிப்பாக்குங்கள்
68. ஆனந்தயியல்...
69. யார் சிக்கித் தவிக்கும்
குடும்பஸ்தராவார்கள்?
70. ஊடல்
71. விவாதத்தின் நெடி!
72. யதார்த்தவாதியாகுங்கள்
73. பயம்

74. உங்களின் கண்ணை மறைப்பது
75. ஆன்மீகம் - ஆனந்தம்
பிற்சேர்க்கைகள்
0.000 புத்திசாலித்தனம்
❖ எந்த ஒரு பைத்தியமும் தன்னை பைத்தியம் என்று
சொல்லிக்கொள்ளாது, ஏற்றுக்கொள்ளாது. இதில்
பாதிப்புமில்லை, பலனுமில்லை.
❖ எந்த ஒரு முட்டாளும் தன்னை முட்டாள் என்று
சொல்லிக் கொள்ள மாட்டான்.
எண்ணிக் கொள்ளவும் மாட்டான். இதில்
பாதிப்புண்டு, ஆனால் பலனில்லை.
❖ அதேபோல், எந்த ஒரு புத்திசாலியும் தன்னைப்
புத்திசாலி என்று சொல்லிக் கொள்ளவோ,
எண்ணிக் கொள்ளவோ மாட்டான்.
இதில் பாதிப்பில்லை, நிச்சயம் பலனுண்டு.
❖ நீங்கள் பாதிப்படைந்தவரா? பலன் அடைந்தவரா?
நீங்கள்தான் தேர்வு செய்து முடிவு சொல்ல
வேண்டும்.
❖ தன் தகுதியையும், தன் தெளிவையும் கணக்கில்
கொள்ளாமல் 'நான் ஒரு புத்திசாலி' என்று
அழுத்தமாக (தெரிந்தோ, தெரியாமலோ)
நினைக்கும், நினைவு என்ற விதையில்
இருந்துதான் 'முட்டாள்தனம்' என்னும் முட்புதர்
நமக்குத் தெரியாமலே வளர்கிறது.
❖ வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமாக எதையும்
செய்யாமல் சோம்பேறியாக இருப்பது நிச்சயம்
முட்டாள்தனம்.
❖ அதற்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்
கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருப்பது
புத்திசாலித்தனமல்ல.
0.000 முட்டாள்தனம்
❖ ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள்
பளிச்சென்று தெரிகிறது. ஆனால் அவரவரின்
குறைகள் மங்கலாக கூடத் தெரிவதில்லை.
❖ வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த திருப்தி
நம்மிடமில்லை என்றாலே, நன்றாக புரிந்து
கொள்ளுங்கள்... இறைவன் நமக்குக் கொடுத்த
புத்திசாலித்தனம் என்னும் சக்தியை நாம்
பயன்படுத்தவில்லை என்று.
❖ திருப்தியை வீணடிக்கச் செய்யும் முட்டாள்தனங்கள்
எங்கு ஒளிந்திருக்கின்றன என ஆராயுங்கள்.
கலந்தாலோசியுங்கள்.
❖ ஒருவேளை உங்களைப் போலவே உங்கள்
உறவுகளும் மற்றவர்களின் குறைகளைச்
சரியாய் சுட்டிக் காட்டும் புத்திசாலிகளாக

இருக்கலாமில்லையா?
❖ வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும்
முழுமையாக அனுபவிக்க, இயல்பாக வாழ,
இறைவன் கொடுத்த புத்தி என்னும் சக்தியை
முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
புத்திசாலித்தனம் பொங்க ஆரம்பித்துவிடும்.
வாழ்ந்த திருப்தி கிடைக்குமளவுக்கு அனுபவித்து
வாழ ஆரம்பிப்பீர்கள்.
ருசித்தல்
❖ 'விழிப்புணர்வோடு இரசித்து ஈடுபடும்போது
ருசித்தல் ஒரு தியானம்'.
ஆனால், நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது
மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே
வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி
விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய
உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து
விடுகிறது.
❖ ருசிக்கு அடிமையானவன் - பசிக்கு
புசிக்காமல், ருசிக்கு புசிக்க ஆரம்பிக்கிறான்.
ருசிக்கு புசிப்பதால்... உடலின் உண்மைத்
தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு
கொட்டப்படுகிறது.
❖ உடல், உருசியின் குப்பைத் தொட்டியாக
மாறிவிடுகிறது.

❖ மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும்
ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து
கொள்ளுங்கள்.
மனிதன் உருசிக்குச் சாப்பிடுகிறான்.
மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!