KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/இளைஞா! இளைஞா!Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

இளைஞா! இளைஞா!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றை சொல்லியிருக்கிறார்.

❖ "குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மீகத்தை கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்க மாட்டாய்". பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும். ஒரே ஒரு முறை எண்ணெயில் கை நனைத்து விட்டுச் செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.

இடப்பக்க விளக்கப்படம்

ஆன்மீகமும் இது போன்றதுதான், கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்.

❖ இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக் கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.

உங்கள் உலகம்

❖ உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்.

❖ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்.

❖ உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்.

❖ உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம்
அமையும். புரிகிறதா...? இது ஒரு சக்கரம்.
மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும்
கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள்.
நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை
கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம்.
அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும்.

Illustration

எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால்
உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும்
திட்டம் போட்டு எரிச்சல் படுத்துவதாகவும்
தோன்றும்.

❖ ஒருவருடைய உலகத்திற்கும் மற்றவருடைய
உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர்
கருத்து, கண்ணோட்டம் மனம் பொருத்து உலகம்
விதவிதமாக மாறி மாறித் தெரியும்.

❖ உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள். அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!