KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/சாதிக்கும் சக்தி பெற...Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

சாதிக்கும் சக்தி பெற...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ தெளிவில்லாமல் சாதனை ஓட்டத்தில் குதித்தாலும், சாதிக்கலாம், சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது. எதை சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு இருந்தால், 'இதை சாதிக்க வேண்டும்' என்ற முடிவு பிறக்கும். சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.

❖ ஏன் சாதிக்க வேண்டும்? எதை சாதிக்க வேண்டும்? என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால்... உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.

Illustration

❖ சாதிக்கும் சக்தியையும்,
சிந்திக்கும் சக்தியையும் அதிகரிக்கத்
தியானம் எளிதில் உதவும்.

❖ வாழ்க்கையில் குதிக்கும் முன்பு தியானத்தையும் வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம் கலந்த சாதனையின் வாசல் திறக்கும்.

உள் சுதந்திரத்தின் அளவைpathicஅதிகரியுங்கள்

❖ மனமோ கட்டுப்படுத்துகிறது. எண்ணங்களோ அலைக்கழிக்கிறது

  • இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மனிதன், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி, சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவதுபோல், தடுமாறுகிறான்.

❖ 'எண்ணங்களால் என்னை அலைக்கழிக்கும்
அகங்காரமே! நீ எங்கே இருக்கிறாய்?' என
உள்நோக்கி பிரயாணித்தலே தியானம் செய்தல்.

❖ இந்தப் பிரயாணித்தில் ஒரு முக்கிய விதி - பிரயாணி பார்வையாளனாக மட்டுமே இருக்க வேண்டும்.

Illustration

❖ நம்பி பிரயாணத்தால்...
மனிதனை அடிமைப்படுத்தி,
கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து,
‘சுதந்திரமாய் ஆர்ப்பரிப்பது’ என்பது
தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.

❖ இது விசித்திரமான பிரயாணம்.
பிரயாண வேகம் அதிகமானால்,
எண்ணங்களின் வேகம் குறையும்.

❖ எண்ணங்களின் ஓட்டம், குறையக் குறைய
உள் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க
ஆரம்பிக்கும்.