விழித்துக் கொள்ளுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ விழித்துக்கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையைவிட, விழி பிதுங்கப் பிதுங்க! வாழும் சதா சச்சரவு நிறைந்த வாழ்க்கையில்தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை!
❖ 'கண்களைத் திற' என்றால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும். கண் இமைகளைத் திறப்பது, கண்களைத் திறப்பது அல்ல... என்றால் மனித மனது புரிந்து கொள்ளக் கடினப்படும். அதேபோல்தான் விழித்துக் கொள்வதும், மனித மனதால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

❖ ‘விழித்துக் கொள்வது’ தன்னையே அழித்துக்
கொள்ளும் தன்மை படைத்த அகங்காரத்தை
ஒழிப்பதற்கான எளிய வழி.
❖ விழித்துக் கொள்ளாதவரை...
வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டேதான்
இருக்கும்.
❖ நம்மில் பலபேர் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம்.
❖ மீதமுள்ள சொற்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி? - என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்துங்கள். எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில ரத்தினங்களுக்குச் சமம்.
❖ எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக
வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும்,
உங்களுடைய எல்லா மனத் துக்கங்களும்
மறைந்துவிடும்.
- இதற்குப் பெயர்தான் ‘விழித்துக் கொள்வது’.
❖ இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும், அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியை பெற்றுவிடுவீர்கள்!

