KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/அன்பு மலர... நீங்கள் வளர...Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

அன்பு மலர... நீங்கள் வளர...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ நேசம் என்பது உண்மையான அன்பு மலர்.

❖ ஒருவன் தன்னையே நேசிக்க ஆரம்பிப்பது
ஆனந்த மாளிகையின் திறவுகோல்.
இது ஒரு சிறந்த தியான முறை.

❖ நம்மை நாமே நேசிப்பதைப் பற்றி யோசியுங்கள்.

❖ நேசிக்க ஆரம்பியுங்கள்.
அன்பு என்னும் மலர் உங்களுக்குள்
மொட்டாகக் காத்துக்கொண்டிருக்கிறது.
அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்!
நேசிக்க ஆரம்பியுங்கள்... முதலில் உங்களை!

❖ வேறு வழியேயில்லை. நீங்கள்தான் உங்களுக்கு உதவ வேண்டும்.

இயற்கையளிக்கும் பரிசுகள்...

❖ 'வரவேற்றல்' என்ற
நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை
வாழ்க்கை பரிசளிக்கிறது.
எல்லாவற்றையும்
வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு
அதிர்ஷ்டங்களைத் தவிர
வேறு எதையும் வாழ்க்கையால் பரிசளிக்க
முடியாது.

❖ 'வருவது வரட்டும், வந்தது இருக்கட்டும்'

  • இப்படிப்பட்ட மேம்போக்கு குணம் படைத்த மனிதனால் வாழ முடியும். ஆனால் குதூகலமாக வாழ்வைக் கொண்டாட முடியாது. காரணம் குதூகலத்தின் பிறப்பிடமான 'வரவேற்றல்' என்னும் குணம் இல்லாதிருப்பதே!
Illustration
Illustration featuring a seated spiritual figure and floral decor

❖ 'வருவதெல்லாம் வரம் வந்ததெல்லாம் அதிர்ஷ்டம்'

  • இப்படிப்பட்ட குணத்தை அடைந்த மனிதனால் மட்டும்தான் வாழ்வை குதூகலமாகக் கொண்டாட முடியும்.

❖ 'குழந்தையின் துள்ளல் தைரியசாலியின் தெம்பு புத்திசாலியின் தெளிவு' -இம்மூன்றின் மொத்தக் கலவையாய் வெளிப்படும் குணமே 'வரவேற்றல்' (welcoming) என்னும் அற்புதக் குணம். சுருங்கச் சொன்னால்... 'இன்பத்தை நம் மகிழ்ச்சிக்காகவும், துன்பத்தை நம் வளர்ச்சிக்காகவும் - இயற்கை இயற்கையாகவே பரிசளிக்கிறது!' என்ற சூட்சுமம் புரிந்து, வாழ்வை சுகிப்பதே 'வரவேற்றல்' என்னும் நற்குணம்.