KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/பயம்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

பயம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ உயிர்சக்தியை நொடிக்குள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள் வல்லமை கொண்டது பயம்.

❖ மனிதன் தீங்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இறைவனால் மனிதனுக்குத் தரப்பட்ட ஒரு பரிசு - பயம்.

❖ மனித குலம் இந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் பயமும் ஒன்று.

❖ எப்படி உப்பு உணவில் கூடினாலும், குறைந்தாலும் உணவு சுவைக்காதோ அப்படித்தான் பயம் கூடினாலும், குறைந்தாலும் வாழ்வு நரகம்தான்.

❖ பய உணர்வை சரியாகப் பயன்படுத்த மனிதனுக்கு அனுபவ ஞானம் தேவை. அனுபவ ஞானம் இல்லாவிட்டால் பயம் நம்மையே அழித்து விடும்.

உங்களின் கண்ணை மறைப்பது

❖ ஆஹா... இது கானல் நீர்!
அதோ! அங்கே சோலைவனம் இருப்பதுபோல் நம்
கண்களுக்கு தெரிகின்றதே,
அது சோலைவனமே அல்ல.
அதுவும் பாலைவனத்தின் ஓர் பகுதிதான்.
நம் தாகத்தைத் தீர்ப்பது நிச்சயமாக அங்கே
இல்லை என்று தெள்ளத் தெளிவாக
ஏற்கனவே தெரிந்து கொண்ட ஒருவன்
கானல் நீர் வரை சென்று ஏமாறவே மாட்டான்.

❖ மோகம்,
வேகம்,
புகழ்,
பணம் - என்று ஓடும் ஒருவனுக்கு, தன்
மோகத்தைத் தீர்ப்பது அங்கே இல்லை என்று
தெரிந்து விட்டால் ஓடமாட்டான்.

திடீரென்று எல்லோருக்குமே இந்த உண்மை
புரிந்துவிட்டால் மொத்த சமூக இயக்கமே
ஸ்தம்பித்துவிடும்.

❖ தேடுவது தேடும் இடத்தில் இல்லை என்ற உண்மையை யதேச்சையாகப் படித்துவிட்டால்கூட புரிந்துகொள்ளவிடாதபடி பார்த்துக் கொள்ளும் ஒன்றுதான் மாயா சக்தி.

ஆன்மீகம் - ஆனந்தம்

❖ ஆனந்தமயமான வாழ்க்கைக்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை.

❖ ஆனந்தமயமாக வாழ முடியாமல் போனதற்கு மனிதன் கண்டுபிடித்த புதுப் பெயர்தான் சாதாரண வாழ்க்கை.

❖ ஆசை பலவாக இருந்தாலும், தேடுதலின் நோக்கம் ஒன்றுதான் - அது நிம்மதி, ஆனந்தம்.

❖ வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த பிறகு
கிடைக்காத திருப்தியையும், சந்தோஷத்தையும்
எளிதாக வழங்கும் மார்க்கம்தான் ஆன்மீகம்.

❖ உங்களுடைய அனுபவிக்கும் தன்மையின் அளவு
அதிகமானால் சின்ன விஷயங்களில்கூட
சந்தோஷம் அடைவீர்கள். சுகம் காண்பீர்கள்.

side decoration illustration
இறைவார்த்தை / சுவாமி படம்

❖ ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணிநேரமாவது
ஆனந்த வாழ்வு பற்றிய ஆன்மீகத்திற்கு
ஒதுக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையின்
ஒரு அற்புதமான பகுதியை இழந்துக்கொண்டே
இருக்கிறீர்கள்.

மகாமந்திர தியானம் உங்களுக்காக...

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

❖ உடல் வலி

❖ மனக்குழப்பம்

❖ சோர்வு

❖ குணக்குறைகள் ஆகியவை
அனைத்தும் மகாமந்திர
தியானத்தை தொடர்ந்து
செய்பவரிடமிருந்து
பறந்தோடிவிடும்.

சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச்
செய்யக் கூடாது. தியானத்தைச் செய்தவுடன்
சாப்பிடக் கூடாது.

தனியாகவும், பலரோடும் சேர்ந்து கூட்டுத்
தியானமாகவும் இந்த தியானத்தைச்
செய்யலாம்.

தியானம் முடிந்து குறைந்தது 15
நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய
வேண்டாம். ஓய்விலிருங்கள் 30 நிமிடங்கள்
நீடிக்கும் இந்த தியானம் இரண்டு
பாகங்களைக் கொண்டுள்ளது.