KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/யதார்த்தவாதியாகுங்கள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

யதார்த்தவாதியாகுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ 1. நான் செய்தால் சரி, நீ செய்தால் தவறு

  • முதல் வகை. இது அகங்காரத்தின் உச்சம்.

❖ 2. நண்பன் செய்தால் சரி. எதிரி செய்தால் தவறு

  • இரண்டாம் வகை. இவர்கள் சூழ்நிலைக் கைதிகள்.

❖ 3. நண்பன் தவறு செய்தாலும் தவறு தவறுதான். எதிரி நல்லது செய்தாலும் அது நல்லதே, சரியே! - மூன்றாம் வகை. இவர்கள் நடுநிலைவாதிகள். தைரியசாலிகள்.

நீங்கள் எந்த வகை?

❖ 4. இது தவறு, இது சரி எனும்
சிறுவட்டங்களைத் தாண்டியவரே
யதார்த்தவாதி.
தவறு, சரி, கடந்தவருக்கு நண்பரும்
எதிரியும் ஒன்றே.
யதார்த்தவாதி 'தவறு' எனும்
சப்பைக் காரணங்காட்டி அன்பெனும்
வெகுமதிகளைத் தவறவிடமாட்டார்.
எந்த வகையாக இருந்தாலும் சரி, தாண்டிச்
செல்லுங்கள்.
தவறு, சரி என்ற இரும்பு கரங்கள் கொண்டு
'அன்பு' எனும் மலரை நசுக்காதீர்கள்.
யதார்த்தத்தோடு வாழ்க்கையையும்,
மனிதர்களையும் அணுகுங்கள், வாழ்வு
கொண்டாட்டமாகும்.