KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/ஊடல்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

ஊடல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ 'உறவுகளுக்கிடையே ஊடல் அவசியம் - இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் உற்சாகமாக வாழத் தெரியாதவர்கள்'.

❖ ஆழ்மன வெறுப்பின் முன்னோட்டமே 'ஊடல்'.

❖ ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும்வரை மனித உறவில் ஊடல் புகைபோல் கசிந்து கொண்டிருக்கும்.

❖ ஈர்ப்பு மறைந்த அடுத்த கணமே ஆழ்மன வெறுப்பு வெடிக்கும்.

❖ ஆழ்மன வெறுப்பு உருவானதற்குக் காரணம் - ஆழ்மனத்தின் மாயக்கருத்துக்களால் ஆன, வாழ்வு பற்றிய கனவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே

illustration with figure seated among flowers

இருக்கும் பொருத்தமின்மையே!

❖ எல்லா ஊடல்களும் எல்லா கிளர்ச்சிகளும் எல்லாத் தற்காலிக சந்தோஷங்களும் நிஜ உலகில் கனவைக் குடிப்பவனுக்கு மட்டுமே நிகழ்வது.

❖ அகங்காரம் என்பது தாறுமாறான கருத்துக்களின் தொகுப்பு. அகங்காரம் என்பது அதீத கற்பனைகளின் அதிபதி.

❖ அகங்காரம் மறைய,
ஊடல்கள் மறையும்,
உற்சாகம் பொங்கும்,
தேனினும் இனிய மனித வாழ்வு கனியும்.