Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
யார் சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தராவார்கள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ 18-ல் காதல்
20-ல் எதிர்காலக் கனவு
25-ல் திருமணம்
30-ல் குடும்பச் சுமை
40-ல் வயிற்றுக் கோளாறும், மனச்சோர்வும்
45-ல் B.P. / டயாபடிஸ்
50-ல் முட்டி வலி...
❖ என்பதெல்லாம் இன்று கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்ற நிலை வந்து விட்டது. திருமணத்திற்குபின் ஒருநாள் தானும் எல்லாப் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும் இளைஞர்கள் அரிதாகி விட்டார்கள்.

தானும் சிக்கித் தவிக்க
100% வாய்ப்புகள் இருக்கிறது
என்பதை முழுமையாக உணராத
இளைஞர்கள்தான் எதிர்காலத்தில்,
சிக்கித் தவிக்கும் குடும்பஸ்தர்களாக
மாற வாய்ப்புகள் அதிகம்.