KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/சலிப்பை களிப்பாக்குங்கள்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

சலிப்பை களிப்பாக்குங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ நீங்கள் செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும், நீங்கள் பின்பற்றும் மார்க்கம் எதுவாக இருந்தாலும் சரி - அங்கேயே, அதிலேயே வாழுங்கள். தொட்ட குறை, தொடாத குறை வேண்டாம். மிச்சம் மீதி வைக்க வேண்டாம்.

❖ சலிப்பிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் வெளி வர மிக எளிய வாழ்வியல் வழிமுறை - வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வது தான். அது எதுவாக இருந்தாலும் சரி. உச்சத்தை அடைந்து விடுவதுதான்.

❖ சாப்பிடும் ஒரு ரசகுல்லாவின் சுவையை அதன் உச்சத்தில் அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். இரண்டு, மூன்று கடியில் ஐந்து ரசகுல்லாவை ஒரேயடியாகச் சாப்பிடுவதும், ஒரே ஒரு ரசகுல்லாவின் முழுச் சுவையும் வாயிலேயே கரைந்து போகும் அளவுக்கு பல நிமிடங்கள் சுவைத்து சாப்பிடுவதும் ஒன்றே. சுவையின் உச்சத்தை ஒரே ஒருமுறை ருசித்து விட்டால் ஒரு ரசகுல்லா போதும், பத்து தேவையில்லை. திருப்தி கிடைத்து விடும். சுவையின் உச்சத்தை ருசிக்காவிட்டால் பத்து சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்காது. சலிப்பும், கஷ்டமுமே மிஞ்சும். மேலே உள்ள சில வரிகள் வெறுமனே படிப்பதால் புரிந்து கொள்ள முடியாது. இனிப்பு வாயிலே கரைந்துபோகும் அளவுக்கு விழிப்புணர்வோடு சுவைத்துப் பாருங்கள். 'உச்சத்தில் வாழ்வது' என்றால் என்ன என்பது புரியும்.

❖ நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்று துடிக்கும் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் நிதானித்து, அதன் உச்சத்தில் அனுபவியுங்கள்.

Illustration
illustration

‘இன்னும் கொஞ்சம்’ என்ற தொக்கி நிற்கும்
உணர்வு இருக்காது. சலிப்பு நெருங்கவே
நெருங்காது.

❖ கடைசியாக ஒரு சத்யம். அனுபவத்தின் உச்சத்தை அடையாததால் மிச்சமாகும் அனுபவிக்கப்படாத பகுதிகள்தான், ‘மீண்டும் மீண்டும்’ என்ற வெறியைத் தூண்டித் தூண்டி பின்னாளில் சலிப்பைத் தருகிறது. சலிப்பின் மூலக்காரணம் தெரிந்துவிட்டது. இன்னும் என்ன தயக்கம். எதிலும் மிச்சம் வைக்காதீர்கள். உச்சத்தில் வாழத் துவங்குங்கள்.

ஆனந்தயியல்...

  • ஆனந்தமடைவதற்கான வழிமுறை முற்றிலும் அறிவியல் பூர்வமானது.
  • வேதியியலில் இந்த ரஸத்தோடு இந்த வேதிப்பொருளைச் சேர்க்க இந்த பொருள்தான் கிடைக்கும் என்று ஆணித்தரமாக எப்படிக் கூற முடியுமோ அதுபோல் ஆனந்தத்தையும் கூற முடியும். ஆனந்த வழியை பகுதி, பகுதியாக பிரித்து காண்பிக்க முடியும்.
  • உங்களுக்குள்ளிருக்கும் ஆனந்த ரஸம் விழிப்புணர்வோடு கலந்து விட்டால் கிடைக்கும் பொருளுக்குப் பெயர்தான் ஆனந்தம்.
illustration

❖ இந்த ஆன்மீகவியல் சம்பந்தப்பட்ட வினைகள்தான் ரசவாதம்.

❖ இன்று விஞ்ஞானம் நன்றாக வளர்ந்திருப்பதால், ஏழு சக்கரங்களின் உணர்வுகளைப் பக்குவப்படுத்தும் ரஸவாதத்தை செய்முறை தியானங்களாகவே கற்றுக்கொள்ள முடியும். ரசவாதத்தை உங்களுக்குள் நிகழ்த்திப் பாருங்கள்.

❖ மருத்துவக் குணமும், சக்தியும் கொண்ட
‘நவபாஷானம்’ என்பது ஒன்பது விஷங்களை
ஒன்று சேர்த்து செய்யப்படுவது.

❖ ஒன்பது விஷயங்களை சரியான அளவில், சரியான பக்குவத்தில் சேர்த்துவிட்டால் அடுத்த நிமிடமே நவபாஷாணம் ரெடி.