KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/வெற்றிக்கான முதலீடுSign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

வெற்றிக்கான முதலீடு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ விவாதம் = வீண் வாதம்.

❖ விவாதம்

  • நாக்கிற்கு பிடித்த கேடு,
  • தொண்டையைப் பிடித்துக் கொண்ட தொல்லை,
  • நட்பில் கலக்கப்படும் நச்சு,
  • அன்பிற்கு வைக்கப்படும் அணுகுண்டு, இப்படியெல்லாம் சொல்வது மிகைப்படுத்துவது போலத் தோன்றலாம்.கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்...உண்மை புரிய வரும்.

❖ விவாதத்தின் மூலம்
மற்றவருக்கு ஒரு விஷயத்தை
புரிய வைக்க முயற்சிப்பது
தீவிரவாதத்தால் நட்பை வளர்க்க
முயற்சிப்பது போன்றது.

❖ எல்லா விவாதங்களும் வருத்தத்தின் விருத்தங்கள்.

❖ ஒரு விவாதத்தை நீடிப்பது
ஓரடி வரப்பிற்காக
நீதிமன்றத்தை நாடுவது போன்றது.
நம்மில் பலரிடம் விட்டுக் கொடுக்கும்
தன்மை இல்லை.
அதை உணராத காரணத்தால்தான்
அடுத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டுமென
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

❖ விவாதத்தை களைந்தெறியுங்கள்...
விவேகம் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும்.
விவாதம் குறைய குறைய...
உங்களின் சக்தியும், நேரமும் மிச்சமாக
ஆரம்பிக்கும்.

❖ வெற்றிக்கான முதலீடு பெருக ஆரம்பிக்கும்.

illustration

முதிர்ச்சி பெறும் வழி

❖ நமக்குத்...
தெரிந்தவைகளுக்கு அப்பால்...
தெரியாதவைகளுக்கு அருகில்...
நமக்குத் தெரிந்தும் புரியாத ஆனந்தம்
நிறைந்திருக்கிறது.

❖ 'எனக்குத் தெரியும்'

  • என்ற இந்த எண்ணம் எந்தச் செயலில் என்று உதிக்கிறதோ, அன்றே அச்செயலின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்துவிடும்.

❖ 'எனக்கு எல்லாம் தெரியும்...'

  • என்ற இந்த எண்ணம் பிறந்துவிட்ட அடுத்த நொடியே அச்செயலின் வளர்ச்சி நின்றுவிடும்.

காரணம்,
உங்களுக்குத்தான்
எல்லாம் தெரிந்து விட்டதே!
முதிர்ச்சிக்குப் பதிலாக மனிதன்
தளர்ச்சியடைய ஆரம்பித்து விடுவான்.

❖ 'எனக்குத் தெரியாது...'

  • என்ற இந்தத் தெளிவு உதித்த நொடியிலிருந்தே மனிதனின் வளர்ச்சியில் புது வேகம் பற்றிக் கொள்ளும். ஒரு மலர் போல் மனிதன் தானாக மலர்வான்.
Illustration
விளக்கம்