வாழ்க்கையின் ஆசான்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ ஆனந்தம் நிரந்தரம், துக்கம் நிரந்தரமான நிரந்தரமின்மை.
❖ வாழ்க்கையில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகள்தான் நம்மை வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் வானூர்திகள்.
❖ மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை
போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும்
உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும்
நிரந்தரமான நிரந்தரமின்மைகள்.
இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத்
துரத்தப்படும்வரை என்ன செய்தாலும்,
எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது
இழையோடிக் கொண்டேயிருக்கும்.
- அறியாமை இருளுக்குள் தூங்கும் நம் மனத்தை உலுக்கி, விழிக்கச் செய்யும் சம்பவங்கள்தான் - வாழ்வில் நாம் சந்திக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகளும், திருப்பங்களும்.
- நிரந்தரமில்லா துக்கத்தை தொலைத்து நிரந்தரமான ஆனந்தத்தை அடைய, எந்தவொரு அதிர்ச்சியையும் ஆர்வத்தோடு எதிர்கொள்ளலாம். தயங்க வேண்டியதில்லை.
- வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும் 'எதிர்பாரா அதிர்ச்சிகள்' என்னும் ஆசான்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முன்னேற்றம் காணுவீர்கள்.

லீலை
❖ மொத்தப் பிரபஞ்சமும் இறைவனின்
விளையாட்டுக் களம்.
இந்த விளையாட்டுக் களத்தில்...
இறைவனின் அசைவுகள்...
ஒருவருக்கு நடனமாகவும்,
ஒருவருக்கு ருத்ர தாண்டவமாகவும்,
ஒருவருக்கு அமைதியின் முழக்கமாகவும்
தெரிவதே லீலை.
❖ ஆக்கல்,
அழித்தல்,
காத்தல்
- என்ற மூன்று செயல்களையும் சர்வசாதாரணமாக நிகழ்த்தும் இறைசக்திதான் நம்மையும் ஆட்டிப்படைக்கிறது.
❖ மொத்தப் பிரபஞ்சத்தின் மீது எந்த அளவுக்கு இறைவனுக்கு அக்கறை இருக்கிறதோ, அதே அளவுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லின் மீதும் இறைசக்திக்கு அக்கறை இருக்கிறது.
❖ உங்கள் உடலில்... எந்த செல் எவ்வளவு நாள் வாழ வேண்டும், எந்த செல் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவது நீங்கள் அல்ல. எந்த செல் எப்போது உருவாக வேண்டும், எந்தக் காரியம் எப்போது அழிய வேண்டும் என்று திட்டமிடுவதும் நீங்கள் அல்ல.
❖ அனைத்தையும் திட்டமிட்டு
திட்டமிட்டபடியே எல்லாவற்றையும்
திண்ணமாய் நடத்தி முடிப்பது இறைவன்.

எது நடந்தாலும் அது இறை கணக்குப்படி நல்லதில்தான் முடியும்.
❖ முடிவுவரை பொறுத்திராமல் நடுவில் பார்த்தால் சில நேரம் நம்மைச் சுற்றி கெட்டது நடப்பது போலத்தான் தோன்றும். ஏன்! 'இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
❖ 'எல்லாம் இறைவன் விளையாட்டு' என்னும்
உண்மை புரியாதவரை விளையாட்டு
வினையாகத்தான் தெரியும்.
புரிந்து விட்டால் - வினைகூட விளையாட்டாய்
தெரியும்.
பிறப்பும் இறப்பும்
❖ பிறந்து கொண்டே, இறந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
❖ என்றோ பிறந்த மனிதன், என்றோ ஒரு நாள் இறப்பான் - என்பது மாயை.
❖ ஒவ்வொரு நொடியும் பிறப்பும், இறப்பும் உடலில் சம அளவில் நடந்துகொண்டே இருக்கிறது
- இது அறிவியல் பூர்வமான உண்மை!
❖ மரணத்தை நேருக்கு நேராக
சந்தித்துவிட்டால் அடுத்த கணமே
ஞானம் கிடைத்துவிடும்.
உன் நாடகம் முடியும் போது...
❖ ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால்
ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல எளிதாக
விளக்குபவை!
❖ இது வாழ்வில் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று : நீ ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும், மழை பெய்யும்போது பெய்யும். மழைக்கு மட்டுமல்ல...இது வாழ்வின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
❖ உம் சித்தத்திற்கும், இறைவனின்
சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை.
எனவே வருந்தாதீர்.
❖ நாடகத்தில் தன்னை மறந்த மனிதன்
நாடகத்தோடு
சேர்ந்து உண்மையாகவே அழுவதும்,
சிரிப்பதும் இயற்கை.
❖ அதேபோல்தான் உலக நாடகத்தில் தன்னை மறந்த
மனிதனும் உலகத்தோடு
சேர்ந்து உண்மையாகவே அழுவதும்,
சிரிப்பதும் இயற்கை.
❖ உண்மை என்ன?
நான் யார்?
ஏன் வந்தோம்?
என்ற எல்லாமோ, நாடகம் முடியும் போது
தெரிய ஆரம்பிக்கும்.

