எது கலை?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- ஓவியம், சிற்பம், காவியம், போன்றவை மட்டுமே கலை அல்ல. கலைநயத்தை நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த முடியும்.
- பேசும் கலை, படிக்கும் கலை, பழகும் கலை, ஏன் சமைப்பது கூட ஒரு கலைதானே!
- கலைநயம் கொண்ட ஒருவரின், கலை வெளிப்பாடு எதுவாக இருந்தாலும்

அதன் மீது நம்மையும் அறியாமல் ஈடுபாடு வரும்.
❖ கடலில் பெருங்காயத்தைக் கரைப்பதால் கடலுக்கு நறுமணம் கிடைக்கிறதோ இல்லையோ - முதலில் நம் கை முழுவதும் பெருங்காயம் நறுமணம் மணக்கும்.
❖ நம்முடைய கலை வெளிப்பாட்டால்
மற்றவருக்கு நன்மை கிடைக்கிறதோ
இல்லையோ - முதலில் நமக்குள்
சந்தோஷம் பிறக்கும்.
திருப்தி மலரும்.
❖ மற்றவர்களுக்காக அல்ல உங்களுக்காக கலைஞனாகுங்கள்.
கலைத்துவத்தின் முக்கியத்துவம்
❖ கலை என்பது...
கவலையை மறக்கடிக்கும்
ஒரு இனிமையான துறை.
❖ கலை என்பது...
நம்மிடமிருக்கும் மிருதுத் தன்மையை
வெளிக் கொண்டுவரும் ஒரு அருமையான முறை.
❖ ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையை
தயக்கமில்லாமல் வெளியே கொண்டுவர
உதவும் ஒரு அருமருந்து கலை.
❖ ஒரே ஒரு துறையிலாவது
கலைத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
இல்லையென்றால் வாழ்க்கையின் மிக
முக்கியமான ஒரு அம்சத்தை இழக்கிறீர்கள்.
54


❖ செய்யும் செயல்திறன் தியானம்.
பூரண கலைத்துவம்தான் ஞானம்.
இயல்பான, மிருதுவான
வாழ்வுதான் ஆனந்தம்.
அதிசயம், ஆச்சரியம், சாதனை
❖ இன்னும் மலராத மொட்டு மனிதனின் தனித்துவம் (Individuality).
❖ மலர்ந்தும்...
வாசமில்லா மலராயிருப்பவை!
மனிதனின் ஆளுமை எனப்படும்
குணாதிசயங்கள் (Personality).
❖ மனிதன்
கடவுளாக மலர்வது மட்டுமே
இந்த உலகின்
பெரிய அதிசயம், ஆச்சரியம், சாதனை.
❖ மலர்ந்த மலரின் (மனிதனின்)...
நறுமணம் - மனிதநேயம்
நிறம் - அன்பு
அழகு - ஆனந்தம்