KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/வாழ்வும் கனவும்Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

வாழ்வும் கனவும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு,
நெய்யைத் தேடித்தேடி அலைவது போன்ற
ஆர்வத்தையும், சக்தியையும், அள்ளி அள்ளித்
தரும் வேடிக்கையான அம்சத்திற்கு பெயர்தான்
‘மாயா’.

❖ ஞானமடையும் முன்வரை, மனிதன் வாழும்
அறுபது வருட வாழ்விற்கும் - ஆறுமணி நேர
கனவிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
கால அளவில் வித்தியாசமுண்டு. அவ்வளவே.
ஒரு கனவு - ஆறு மணி நேரம்!
ஒரு வாழ்வு - அறுபது வருஷம்!

❖ கனவு கலைந்ததும் கனவு உலகம் காணாமல்
போய்விடும்! அகங்காரம் கலைந்ததும் நினைவு
உலகம் காணாமல் போய்விடும்.

Portrait inside oval floral frame

ஆத்மன் விழித்ததும்தான், 'உண்மையாக உள்ள உலகமே' கண்ணிற்குத் தெரியும்! தூங்கும் மனிதனுக்கு - கனவு மாயை விழித்திருக்கும் மனிதனுக்கு - நினைவு மாயை விழித்துக்கொண்ட மனிதனுக்கு - எல்லாம் மாயை.

❖ நாமாய் துரத்தாதவரை தானாய் விலகாதது - மாயை!

❖ உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா?
உண்மையான உலகை அனுபவிக்க வேண்டுமா?
கடவுளை நேரில் காண வேண்டுமா?
வேறு வழியேயில்லை... மாயத்திரை
கிழிக்கப்பட வேண்டும்.
அதுவும் உங்களாலேயே...

தேனிலவு

❖ எதிர்காலம் ஆஹா... ஓஹோ... என்றிருக்கும், வாழ்க்கைத் துணை மகா ராணி / மகாராஜாபோல் இருக்கவேண்டும், என்பன போன்ற மனக்கருத்துக்கள் சிறு வயதிலேயே எளிதாக மனிதனுள் நுழைந்து விடுகிறது.

❖ நிஜத்தில் சாத்தியப்பட வாய்ப்பில்லாத அதீத எதிர்பார்ப்புகள்தான் மன நிம்மதியை உறிஞ்சி விட்டு அதிருப்தியை நம்முள் கொப்பளித்து விடுகின்றன.

❖ தேன் நிலவு நாட்கள்தான் ஒரு இளைஞன்
இளைஞியின் வெகு கால கனவுகள் நிஜமாகும்
நேரம். இதை ‘தேன்கூரியன்’ எனச் சொல்லாமல்
ஏன் ‘தேன்நிலவு’ என்று சொல்கிறார்கள்?

Osho and floral arrangement illustration

பதில் காண கவனமாகக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்... இங்குதான் தன் வாழ்வில் முதல் முறையாக நிஜத்தை நேரடியாக இவர்கள் சந்திக்கிறார்கள்.

❖ வாழ்வு இப்படியிருக்க வேண்டும், வாழ்க்கைத் துணை இப்படியிருக்க வேண்டும் என்ற கனவுகள்

  • ‘இவ்வளவு தான் வாழ்க்கை’ என்ற நிஜத்தை, நேருக்கு நேர் சந்திக்கும் காலம்தான் தேன் நிலவு.

❖ வாழ்க்கையைப் பற்றிய கனவுக்கும், நிஜ
வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை என்பதைத்
தெரிந்துகொள்ள முப்பது நாட்களே அதிகமென்று
பெருகிவரும் விவாகரத்துகள் உறுதிபடச்
சொல்கின்றன.

❖ 'ஆசை மறுபது நாள் மோகம் முப்பது நாள்' என்பதெல்லாம் விளையாட்டு பழமொழிகள் அல்ல. நம் மூதாதையரின் மனோதத்துவ முதிர்ச்சியின் வெளிப்பாடு. முப்பது நாட்களுக்கு மேல் ஒரு நிலவு தாங்காது. அதேப்போல், மனிதா! உன் கனவுகளும் முப்பது நாட்களுக்கு மேல் தாங்காது... என்பதை இலைமறை காயாய் செந்தமிழில் என்றோ 'தேன்நிலவு' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். முப்பது நாட்களில் வாழ்க்கைப் புளித்துப் போகவா கனவு காண்கிறோம்? கனவின் இயல்பே மிகைப்படுத்தி நிஜத்தை புளிக்கச் செய்வதுதான்.

❖ கனவுகளை கட்டுப்பாடில்லாது உருவாக்க உதவும் அதே அகங்காரம்தான், கனவுகளை நிஜவாழ்வில் அனுபவித்து வாழவிடாது தடுத்துக் கொண்டிருக்கிறது.

Illustration
illustration

❖ கனவுகள் நிஜமாக ஆரம்பித்தால்
அது அகங்காரத்திற்கு அழிவு!
எனவே அது வாழ்வதற்காக,
உங்களைக் கனவு காணத் தூண்டும்;
ஆனால் கனவை நிஜவாழ்வில்
அனுபவிக்காமல் போவதற்கான எல்லா
முன்னேற்பாடுகளையும் உங்கள்
மூலமாகவே அது செய்து முடிக்கும்.
அவ்வளவு தந்திரமானது அது!

❖ கனவுகளையும் மனக்கருத்துக்களையும் தாண்டி வாழ ஆரம்பியுங்கள். வாழ்க்கை தேன் போன்று இனிக்க ஆரம்பிக்கட்டும். தேனினும் இனிய மனித வாழ்வு உங்களுக்கும் உரித்தானதாகட்டும்.