மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித் துறையினர் சோதனை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மதுரை, மே 5: மதுரை ஆதீன மடத்
தில் மத்திய வருமான வரித் துறை
அதிகாரிகள் குழுவினர் சனிக்கி
ழமை 5 மணி நேரம் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது முக்கிய
ஆவணங்கள் மற்றும் பணத்தைக்
கைப்பற்றியதாக அதிகாரிகள் வட்
டாரம் தெரிவித்தது.
பழம்பெருமை வாய்ந்த மதுரை
ஆதீன மடத்தின் இளைய ஆதீன
மாக நித்யானந்தர் அண்மையில்
நியமிக்கப்பட்டார். இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்
யானந்தரை மதுரை ஆதீனமாய் நிய
மித்தது சரியில்லை என மற்ற தமிழக
ஆதீனங்களும், இந்து அமைப்புக
ளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மது
ரைக் கிளையிலும் வழக்குத் தொட
ரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய வரு
மான வரித் துறை மதுரை துணை
ஆணையர் (தலைமையிடம்) சுந்த
ரேசன் தலைமையில் ஒரு பெண்
அதிகாரி உள்ளிட்ட 5 பேர்
கொண்ட குழுவினர் காலை 8
முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆதீன மடத்தை ஒட்டிய பக்தர்கள்
தங்கும் விடுதிக்கு வந்த அதிகாரி
கள் குழு, தங்களது வாகனங்களை
அங்கு நிறுத்திவிட்டு ஆதீன மடத்
துக்குள் சென்றனர்.
அப்போது, ஆதீன மடத்தில்
ஆதீனம் மட்டும் இருந்தார். நித்தி
யானந்தர் இல்லை. மேலும், திரு
வண்ணாமலையில் ஆதீனத்துக்கு
பட்டாபிஷேகம், கனகாபிஷேகம்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டி
ருந்ததால், அங்கு செல்வதற்காக
ஆதீனம் தயாராகிக் கொண்டிருந்
ததாகவும் கூறப்படுகிறது. இந்த
நிலையில், வருமான வரித் துறை
அதிகாரிகள் சோதனை நடத்த வந்த
தால், ஆதீன மடத்தில் பரபரப்பு ஏற்
பட்டது.
சோதனையை அடுத்து, ஆதீன
மடத்தில் இருந்த யாரும் வெளியே
செல்லவோ, வெளியில் இருந்து
உள்ளே வரவோ அதிகாரிகள் அனு
மதிக்கவில்லை. வருமான வரித்
துறை அதிகாரிகள் ஆதீன மடத்
தின் வரவு செலவுக் கணக்குகளை
கேட்டு அதற்கான ஆவணங்களை
வம்சரிபார்த்தாக கூறப்படுகிறது.
மேலும், ஆதீனத்திடம் நேரடி
யாகவும் விசாரணை நடத்தப்பட்டு
ஒள்ளது. ஆதீன மடத்துக்குக்குரிய
வங்கிக் கணக்கு குறித்து அவரிடம்
விசாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பணிபுரியும் ஊழியர்களிடமும்
தனித் தனியாக விசாரணை நடந்த
தாகத் தெரிகிறது. அப்போது வங்
கிக் கணக்கு பரிமாற்றம், ஆதீன
மடத்தின் சார்பில் வாடகைக்கு
விடப்பட்டுள்ள கடைகள் விவ
ரம், அவற்றின் மூலம் வரும் மாத,
ஆண்டு வருவாய் கணக்கு உள்ளிட்
டவற்றையும் அதிகாரிகள் கேட்டு
அதற்கான ஆவணங்களையும் பெற்
றுள்ளனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற
சோதனை பகல் 1.30 மணிக்கு நிறை
வடைந்தது. சோதனையை முடித்
துச் சென்ற அதிகாரிகள் அட்டைப்
பெட்டி ஒன்றை எடுத்துச் சென்ற
னர். அதில் முக்கிய ஆவணங்கள்
மற்றும் பணம் இருப்பதாகவும் அதி
காரிகள் வட்டாரம் தெரிவித்தது.
சோதனை குறித்து செய்தியாளர்
கள் கேட்டபோது, பதில் கூறாமல்
அதிகாரிகள் காரில் ஏறிச் சென்று
விட்டனர்.
மத்திய அமைச்சர் மீது புகார்
ஆதீன மடத்தில் நடந்த வருமான
வரிச் சோதனை குறித்து ஆதீனத்தி
டம் கருத்துக் கேட்க செய்தியாளர்
கள் மடத்திற்கு உள்ளே சென்றனர்.
அங்கு மடத்தின் மக்கள் தொடர்பு
அதிகாரி என அறிமுகப்படுத்திக்
கொண்ட பாண்டிச்செல்வம் செய்
தியாளர்களிடம் பேசினார். அப்
போது அவர் கூறியதாவது:
கடந்த தி.மு.க. ஆட்சியில் நித்
யானந்த மடம் குறித்து அவதூறு
பரப்பப்பட்டது. தற்போது ஆட்சி
மாறிவிட்டது.
ஆனால், தி.மு.க.வைச் சேர்ந்த
பிரமுகர்கள் சிலர் அந்தக் கட்சியின்
மத்திய அமைச்சர் மூலம் மதுரை
ஆதீன மடத்தில் சோதனையிட்டு,
நித்யானந்தருக்கு எதிராகச் செயல்
படுகின்றனர்.
இந்த சோதனை எதிர்பார்க்
கப்பட்டதுதான். சோதனையில்
எவ்வித ஆவணங்களும் எடுத்துச்
செல்லப்படவில்லை. ஆதீனம் உள்
ளிட்ட அனைத்துப் பணியாளர்
களிடமும் விசாரணை நடந்துள்
ளது. சட்ட ரீதியாகவே ஆதீன
மடத்தின் வரவு செலவுகள் செயல்
படுத்தப்படுகின்றன.
தற்போது ஆதீன மடத்துக்கு
பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்
ளதாக உணர்கிறோம். ஆகவே,
மாநில அரசு மடத்துக்கு பாது
காப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Dinakaran_02.05.2012_PG5_Madurai Aadhinamaga Nithyananda Grama